என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீபாவளி சீட்டு"
புதுச்சேரி:
புதுவை ஜீவானந்தபுரத்தை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி பாஞ்சாலி. இவர்களுக்கு அய்யப்பன் என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். ஆதிமூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் பாஞ்சாலி தீபாவளி சீட்டு பிடித்தார். மாதம் ரூ.100 வீதம் செலுத்தினால் தீபாவளி பண்டிகையின் போது பாத்திரத்துடன் இனிப்பு, தங்ககாசு, பட்டாசு போன்றவை அளிப்பதாக வாக்குறுதி அளித்தார்.
இதனை நம்பி திருப்பூர்குமரன் நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி குணா உள்பட அதேபகுதியை சேர்ந்த 170-க்கும் மேற்பட்டோர் தீபாவளி ஏலச்சீட்டில் சேர்ந்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் திடீரென பாஞ்சாலி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மாயமானார். பலநாட்களாகியும் பாஞ்சாலி வீடு திரும்பாததால் தீபாவளி சீட்டு பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. சுமார் ரூ. 2 லட்சம் வரை பாஞ்சாலி மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து குணா கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி பட்டாசு கடை வைத்திருந்தாலோ, பட்டாசு தயாரித்தாலோ, வீட்டிலேயே வைத்து விற்பனை செய்தாலோ, நிதி சீட்டு நடத்தி அதன் மூலம் பொது மக்களுக்கு பட்டாசு விநியோகம் செய்தாலோ சட்டப்படி குற்றமாகும்.
இவ்வாறு ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் வெடி பொருட்கள் சட்டம் 1884 மற்றும் வெடி பொருட்கள் விதிகள் 2008-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டாசு கடை நடத்த உரிமம் பெற்றுள்ள வியாபாரிகள் கடையில் உரிமத்தின் நகலை பொதுமக்கள் அறியும் வகையில் காட்சிபடுத்திட வேண்டும். விதிகளுக்குட்பட்டு தீ தடுப்பு சாதனங்களுடன் கடை அமைக்கப்பட வேண்டும்.
பொதுமக்கள், அனுமதியில்லாமல் பட்டாசு விநியோகம் செய்யும் நபர்களிடமிருந்து பட்டாசு வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Diwali
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்