என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீபாவளி வாழ்த்து"
- பிரியங்கா காந்தி, மலையாளத்திலும் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
- நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகள்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபாவளி முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் எம் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.
இந்நிலையில், கேரள மாநிலம், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, மலையாளத்திலும் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இருளுக்கு எதிராக ஒளி நிறைந்த தீபத்தின் வெற்றித் திருவிழா. அநீதி, பொய் மற்றும் ஆணவத்துக்கு மத்தியில் நீதி, உண்மை மற்றும் அடக்கத்தின் வெற்றித் திருவிழா. வண்ணங்கள், விளக்குகள் மற்றும் மகிழ்ச்சியின் திருவிழா.
தூய்மை மற்றும் வழிபாட்டுக்கான நேரம் இது. ஒரு பருவம் முடிந்து அடுத்த பருவத்தை அன்புடன் வரவேற்கும் ஒரு சிறந்த பண்டிகை. நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகள்" என இந்தி மொழியில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மலையாளத்தில் தீபாவளி வாழ்த்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
घने अंधेरे के विरुद्ध दीये-भर प्रकाश की जीत का त्योहार; अन्याय, असत्य और अहंकार के ऊपर न्याय, सत्य और शील की विजय का त्योहार; रंगों, रौशनियों और ख़ुशियों का उत्सव। साफ-सफाई और पूजा-पाठ की बेला; एक मौसम को प्यार से विदा करके दूसरी ऋतु के स्वागत का महान पर्व - दीपावली आप सभी… pic.twitter.com/MiqJODaWIK
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 31, 2024
- அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தீபாவிள வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும். அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பு, அமைதி. செல்வம் நிலைத்து நீடித்திருக்கட்டும்.
தீப ஒளித் திருநாளைப் பாதுகாப்பாகக் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
— TVK Vijay (@tvkvijayhq) October 30, 2024
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சீனா-இந்தியா எல்லைக்கோட்டுப் பகுதியான ஹர்சில் என்ற இடத்துக்கு இன்று காலை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தாய்நாட்டை பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி, வாழ்த்து கூறி அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
பின்னர் கேதார்நாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த மோடி, அங்கிருந்து டெல்லி திரும்பினார்.
இன்றிரவு ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மலர்செண்டு அளித்து தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
நாட்டு நிலவரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்திய மோடி, சமீபத்தில் ஜப்பான் சென்றபோது அந்நாட்டு தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பாகவும் அவரிடம் தெரிவித்தார். #Modi #ModicallsonPresident #ModiDiwaligreetings
இந்து மக்களின் தலைமை பண்டிகையான தீபாவளி இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீமை என்னும் இருளைப் போக்கி நன்மை என்ற ஒளியை ஏற்றும் இந்த திருநாளான இன்று பல லட்சம் மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் வாழும் சுமார் 75 லட்சம் இந்து மக்களுக்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தனது தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது மந்திரிசபையை சேர்ந்த மந்திரிகள், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் சகோதரர் ஷெபாஸ் ஷரிப் ஆகியோருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். #ImranKhan #ImranKhanwishes #PakistanHindu #PakistanHinducommunity #Diwaliwishes
இந்து மதத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி இந்துக்கள் மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மதங்களும் கொண்டாடும் பொதுவான பண்டிகையாக திகழ்கிறது. இந்த தீபாவளி திருநாளில் புத்தாடை உடுத்தி, வெடி வெடித்து உறவினர்களிடமும், பெற்றோரிடமும் ஆசி பெறுவது வழக்கம்.
இந்த வருடம் தீபாவளியில் வெடி வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனை மறுபரிசீலனைக்கு கோரிய தமிழக அரசின் மனு நிராகரிக்கப்பட்டு, அதற்கு பதிலாக 2 மணி நேரம் என்பதை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்தது. இதையடுத்து, காலை 6 முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் வெடி வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
உத்தரவை மீறி வெடி வெடிப்பவர்களுக்கு, 6 மாதம் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பட்டாசு விற்பனை சில இடங்களில் மந்தமடைந்தது.
இருப்பினும், இன்று தீபாவளி திருநாள் அனைவராலும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வெடி வெடித்தும், பலகாரங்களை மத வேறுபாடு இன்றி பகிர்ந்தும் மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த தீபாவளி திருநாளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், ஒளியின் திருநாள் இந்த தீபாவளி நாள் என்றும், நாடு முழுவதும் உள்ள மக்கள் மேல தாளத்துடன் கோலாகலமாக இந்த பண்டிகையை கொண்டாட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே போல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில், நரகாசுரனை வதம் செய்த நாளை கொண்டாடும் தீபாவளி அன்று, மகிழ்ச்சியும், செழிப்பும் வந்து சேரட்டும் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல், துணை முதல்வர் ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்ற பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். #Diwali #TNCM #EdappadiPalaniswami #BanwarilalPurohit #TNGovernor
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்