என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீயணைப்பு படையினர்"
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஆறு, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியம், குன்னவளம் அடுத்த குப்பத்துப் பாளையத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் பெருக்கெடுத்து வயல்வெளியில் புகுந்து ஓடுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காஞ்சிப்பாடியை சேர்ந்த மணி மற்றும் அவரது மனைவி அமுலு ஆகிய 2 பேரும் விவசாயப் பணிக்காக குப்பத்துப் பாளையம் கிராமத்திற்கு சென்றனர். பணி முடித்த பிறகு வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்டனர்.
ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாய தோட்டத்தில் இருந்த வீட்டில் தங்கிவிட்டனர். இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குப்பத்து பாளையத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் வெள்ளம் புகுந்தது.
நேற்று மதியம் கணவன், மனைவி இருவரும் வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்டனர் ஆனால் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்து கொண்டது. இதனால் செய்வதறியாது தவித்தனர். பிறகு வயல்வெளி பகுதியிலிருந்த வீட்டின் மீது ஏறி நின்று கொண்டு வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டின் உரிமையாளர் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருவள்ளூர் கோட்டாட்சியர் ரமேஷ், வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன், உதவி மாவட்ட அலுவலர் வில்சன் ராஜ்குமார், நிலைய அலுவலர் இளங்கோவன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு வெள்ளத்தின் நடுவே சிக்கித் தவித்த 2 பேரையும் கயிறு மற்றும் லைப் ஜாக்கெட் கொண்டு சுமார் ஒரு மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் அடிக்கடி கரைக்கு வருவது வழக்கம். ஆற்றில் குளிக்க செல்லும் பொதுமக்கள் பலர் கரைக்கு வரும் முதலைகளை பார்த்து அச்சம் அடைந்து வந்தனர். இந்த முதலைகளை பிடிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஆற்றில் குளிக்க சென்ற விவசாயி ஒருவரை முதலை இழுத்து சென்றுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-
சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பெராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமணி (வயது 45), விவசாயி. நேற்று அவர் தனது மனைவி முத்து லட்சுமியுடன் பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றார். கணவனும், மனைவியும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஜெயமணியின் காலை திடீரென்று ஒரு முதலை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது. உடனே ஜெயமணி கூச்சல் போட்டார். அங்கு குளித்து கொண்டிருந்த முத்துலட்சுமியும் தனது கணவரை முதலை தண்ணீருக்குள் இழுத்து செல்வதை பார்த்து அவரும் கூச்சலிட்டார்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்து ஆற்றுக்குள் இறங்கி ஜெயமணியை தேடினர். ஆனால் அவர்களால் ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக அவர்கள் இதுகுறித்து சிதம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் அங்கு விரைந்துவந்தனர். பின்னர் அவர்கள் படகுகள் மூலம் ஆற்றில் இறங்கி ஜெயமணியை இரவு 7 மணிவரை தேடினர். வெகுநேரம் தேடியும் ஜெயமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின்பு அவர்கள் கரை திரும்பினர்.
2-வது நாளாக இன்று காலை தீயணைப்பு படையினர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் மீனவர்களும் ஆற்றில் இறங்கி தேடி வருகிறார்கள். முதலை இழுத்து சென்ற விவசாயி ஜெயமணியின் கதி என்ன என்று தெரிய வில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.
ஆற்றில் குளித்த விவசாயியை முதலை இழுத்து சென்ற சம்பவம் பெராம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் 22-வது குறுக்கு தெருவில் மாத்திரை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. விலை உயர்ந்த மாத்திரைகள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலை முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது.
தொழிற்சாலையின் மேல்தளத்தில் மாத்திரைகள் தயாரிப்பும், கீழ்தளத்தில் மாத்திரைகளை சேமிக்கும் குடோனும் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 7மணியளவில் இந்த தொழிற்சாலை குடோனில் இருந்து திடீரென புகைமூட்டம் கிளம்பியது. இதனை பார்த்ததும் தொழிற்சாலையில் மேல்தளத்தில் மாத்திரை தயாரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு தொழிற்சாலையில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.
பின்னர் இதுகுறித்து உடனடியாக கோரிமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீமுட்டம் அதிகமாக கிளம்பியதால் புதுவை, வில்லியனூர், சேதராப்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. அவர்கள் கோரிமேடு தீயணைப்பு படையினருடன் இணைந்து மேலும் தீபரவாமல் அணைத்தனர்.
இந்த திடீர் தீவிபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மாத்திரைகள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமானது. இந்த தீவிபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்