என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » துர்கா பூஜை
நீங்கள் தேடியது "துர்கா பூஜை"
துர்கா பூஜைக்கு அரசுப் பணம் 28 கோடி ரூபாயை அளிக்கும் மேற்கு வங்காளம் மாநில அரசின் முடிவு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SC #WBgovernment #DurgaPujaCommittees
புதுடெல்லி:
மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் துர்கா பூஜையின்போது பந்தல் அமைத்து துர்கா தேவி சிலைகளை நிர்மாணித்து பூஜைகளை செய்யும் 28 ஆயிரம் குழுக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையை மம்தா பானர்ஜி தலைமையிலான அம்மாநில அரசு அறிவித்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மம்தா பானர்ஜி அறிவிப்பு விவகாரத்தில் தலையீடு செய்ய இயலாது. உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்ததுடன் நேற்று முன்தினம் வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் சவுரவ் தத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் கோரிக்கையின்படி, துர்கா பூஜை குழுக்களுக்கு பணம் அளிக்க தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தை நிராகரித்துவிட்ட நீதிபதிகள் இவ்விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு மேற்கு வங்காளம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர். #SC #WBgovernment #DurgaPujaCommittees
மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் துர்கா பூஜையின்போது பந்தல் அமைத்து துர்கா தேவி சிலைகளை நிர்மாணித்து பூஜைகளை செய்யும் 28 ஆயிரம் குழுக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையை மம்தா பானர்ஜி தலைமையிலான அம்மாநில அரசு அறிவித்தது.
இந்த சலுகை அறிவிப்பின் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. மம்தா பானர்ஜியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில், இதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் சவுரவ் தத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் கோரிக்கையின்படி, துர்கா பூஜை குழுக்களுக்கு பணம் அளிக்க தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தை நிராகரித்துவிட்ட நீதிபதிகள் இவ்விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு மேற்கு வங்காளம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர். #SC #WBgovernment #DurgaPujaCommittees
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை செய்யும் குழுக்களுக்கு அரசு நிதி உதவி அளிக்க கோர்ட் தடை விதித்திருப்பதால் முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார். #BJP #MamataBanerjee
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மும்பையில் விநாயகர் சதுர்த்தி சமயத்தில் விநாயகரை வழிபடுவதற்கு ஏராளமான குழுக்கள் அமைக்கப்படுவது போல கொல்கத்தாவிலும் துர்க்கை வழிபடுவதற்கு பல்லாயிரக்கணக்கான குழுக்கள் அமைக்கப்படுவது உண்டு.
இந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையை கொண்டாட மாநில முழுவதும் 28 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அந்த குழுக்கள் தங்களுக்கு அரசு சார்பில் உதவிகள் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அதை ஏற்று துர்கா பூஜை குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதாக அறிவித்தார். ஒவ்வொரு குழுவுக்கும் பூஜைகள், வழிபாடுகள் செய்ய தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார்.
துர்கா பூஜை குழுக்களுக்கு உதவுவதால் மேற்கு வங்க அரசுக்கு ரூ.28 கோடி செலவிடப்படும் என்றும் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து துர்கா பூஜை குழுக்கள் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
துர்கா பூஜைக்கு அரசு சார்பில் உதவி செய்யப்படுவதற்கு கொல்கத்தாவைச் சேர்ந்த வக்கீல் சவுரப் தத்தா எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது துர்கா பூஜைக்கு அரசு சார்பில் நிதி உதவி செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
செவ்வாய்க்கிழமை வரை இது தொடர்பாக எந்த வித அடுத்தக்கட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநில பா.ஜ.க.வும் ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்றுள்ளது. மம்தாபானர்ஜி வேண்டுமென்றே இந்துக்கள் வாக்குகளை பெறுவதற்கு இப்படி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டார். அவருக்கு கோர்ட்டு தக்க பாடம் அளித்துள்ளது என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறினார்கள். #BJP #MamataBanerjee
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொல்கத்தாவில் நடைபெறும் துர்கா பூஜையில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் வருகிற 17-ந்தேதி கொல்கத்தா செல்கிறார். #Congress #RahulGandhi #Durgapooja
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் துர்கா பூஜை விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இது நடைபெறும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொல்கத்தாவில் நடைபெறும் துர்கா பூஜையில் கலந்து கொள்கிறார். வருகிற 17-ந்தேதி அவர் கொல்கத்தா செல்கிறார். இதை மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் சேர்மன் மித்ரா உறுதிப்படுத்தினார்.
துர்கா பூஜையில் கலந்து கொள்ளும் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடனும், ஆலோசனை நடத்துகிறார்.
ராகுலின் வருகை மேற்கு வங்காள காங்கிரசுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும் என்று மாநில நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள பயணத்தின் போது ராகுல் காந்தி திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்- மந்திரியுமான மம்தா பானர்ஜியை சந்திக்கும் திட்டம் எதுவுமில்லை.
2 ஆண்டுகளுக்கு பிறகு ராகுல் காந்தி மேற்கு வங்காளம் செல்கிறார். கடைசியாக 2016 சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு சென்று இருந்தார். #congress #RahulGandhi #Durgapooja
மேற்கு வங்காள மாநிலத்தில் துர்கா பூஜை விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இது நடைபெறும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொல்கத்தாவில் நடைபெறும் துர்கா பூஜையில் கலந்து கொள்கிறார். வருகிற 17-ந்தேதி அவர் கொல்கத்தா செல்கிறார். இதை மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் சேர்மன் மித்ரா உறுதிப்படுத்தினார்.
அவர் கூறும் போது "துர்கா பூஜை எங்களுக்கு மிகப்பெரிய பண்டிகையாகும். இந்த துர்கா பூஜையின் முக்கிய தினத்தில் எங்கள் கட்சி தலைவர் கொல்கத்தா வருகிறார். அவரது வருகையை நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்" என்றார்.
ராகுலின் வருகை மேற்கு வங்காள காங்கிரசுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும் என்று மாநில நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள பயணத்தின் போது ராகுல் காந்தி திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்- மந்திரியுமான மம்தா பானர்ஜியை சந்திக்கும் திட்டம் எதுவுமில்லை.
2 ஆண்டுகளுக்கு பிறகு ராகுல் காந்தி மேற்கு வங்காளம் செல்கிறார். கடைசியாக 2016 சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு சென்று இருந்தார். #congress #RahulGandhi #Durgapooja
×

X