என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்தல் கமிஷன்"
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்த தேர்தலில் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
வேலூர் தவிர 542 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதி ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
மின்னணு எந்திரங்கள் இருக்கும் அறையை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர கட்சிகளின் முகவர்களும் மின்னணு எந்திரங்களின் பாதுகாப்புக்காக அங்கேயே தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில் உள்ள பதிவை மாற்ற முடியும் என்ற புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. சமீபத்தில் தேனி, மதுரை தொகுதிகளில் அப்படி எந்திரங்களை மாற்ற முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளித்தனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்னணு எந்திரங்களை கொண்டு சென்று இருப்பு வைப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகே அமைதி திரும்பியது.
இந்த நிலையில் வட மாநிலங்களில் பல தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரவியபடி உள்ளன. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இந்த பரபரப்பு அதிகளவில் பரவி உள்ளது.
அந்த சமூக வலைதள தகவல்களில் மின்னணு எந்திரங்களை ஒட்டு மொத்தமாக மாற்றவும் சில இடங்களில் மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்யவும் முயற்சி நடப்பதாக படங்களுடன் தகவல்கள் பரவியது. இதனால் எதிர்க்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள காசிப்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி மனோஜ்சின்கா, பகுஜன் சமாஜ் சார்பில் அப்சல் அன்சாரி போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்குள் நேற்று இரவு சிலர் செல்ல முயன்றனர்.
அவர்கள் அங்கிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஒரு வாகனத்தில் ஏற்றி செல்ல முயன்றதாக தகவல் பரவியது. இதையடுத்து ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை முன்பு அன்சாரியும் அவரது ஆதரவாளர்களும் திரண்டு வந்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் காசிப்பூர் தொகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
இதற்கிடையே உத்தர பிரதேச மாநிலம் சந்தவுலி தொகுதியிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக தகவல் பரவியது. இந்த தொகுதிக்குரிய மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு நேற்று இரவு ஒரு லாரியில் ஏராளமான எந்திரங்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டன.
ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று 2 நாட்களுக்கு பிறகு லாரியில் இருந்து புதிதாக மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் இறக்கப்பட்டதால் அந்த தொகுதி சமாஜ்வாடி தொண்டர்களுக்கு சந்தேகம் எழுந்தன. அவர்கள் அதை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.
சந்தவுலி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்காக திட்டமிட்டு ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்றுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது. ஆனால் இதை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சந்தவுலி தொகுதியில் 35 மின்னணு எந்திரங்கள் முன் எச்சரிக்கையாக வைக்கப்பட்டு இருந்தன. ஏதாவது வாக்குச்சாவடியில் எந்திரங்கள் பழுதானால் அங்கு பயன்படுத்துவதற்காக இந்த 35 ஓட்டுப்பதிவு எந்திரங்களும் கையிருப்பு வைக்கப்பட்டு இருந்தன. அந்த 35 எந்திரங்களைதான் நாங்கள் லாரியில் இருந்து எடுத்து வந்து இறக்கி வைத்தோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் இதை சமாஜ்வாடி தொண்டர்கள் ஏற்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
உத்தரபிரதேசத்தில் டுமரியாகஞ்ச் தொகுதியிலும் மினி லாரி மூலம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்து மாற்றம் செய்யப்பட்டதாக பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த தொகுதியில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தது.
போராட்டங்கள் வலுத்ததால் மினி லாரியில் கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து எடுத்து வேறு பகுதிக்கு கொண்டு சென்றனர்.
ஜான்சி தொகுதியிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி நடந்ததாக சமூக வலைதளங்களில் நேற்று முதல் பரபரப்பு தகவல் வெளியானது. பஞ்சாப், அரியானா, பீகார் மாநிலங்களிலும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பீகாரில் மகாராஜ் கஞ்ச், சரண் தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களுடன் லாரிகள் சுற்றி வருவதை லாலு பிரசாத் கட்சி தொண்டர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதனால் பீகாரிலும் பல இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. வட மாநிலங்களில் சுமார் 20 தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சி நடந்ததாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரடியாக மறுத்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி உள்ள தகவல்களில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. தேவையில்லாமல் வதந்தியை பரப்பும் வகையில் இதை யாரோ செய்துள்ளனர். திட்டமிட்டு இத்தகைய சதியில் யாரோ ஈடுபட்டுள்ளனர்.
எந்த ஒரு தொகுதி வாக்குகளும் தில்லுமுல்லு செய்து மாற்றப்படவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் உரிய முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த எந்திரங்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.
நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்களும், ஒப்புகை சீட்டு எந்திரங்களும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில்தான் சீல் வைத்து மூடப்பட்டன. அப்படி சீல் வைக்கப்பட்டது முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீல் வைக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படையினர் ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையம் முன்பும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இத்தகைய பலத்த பாதுகாப்பை மீறி யாரும் உள்ளே சென்று விட முடியாது.
தேர்தல் ஆணையம் செய்துள்ள பாதுகாப்பை தவிர வேட்பாளர்களும் தங்களது முகவர்கள் மூலம் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு பாதுகாப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் 24 மணி நேரமும் அங்குதான் இருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் மீறி எப்படி மின்னணு எந்திரங்களை கடத்தி சென்று விட முடியும். எனவே அடிப்படை ஆதாரமே இல்லாத இத்தகைய குற்றச்சாட்டுகளை யாரும் நம்ப வேண்டாம்.
உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் பயன்படுத்தாத அதாவது கையிருப்பு வைக்கப்பட்டு இருந்த மின்னணு எந்திரங்களை கொண்டு சென்றபோது தான் அதுபற்றி தெரியாமல் வதந்தியை பரப்பி விட்டனர். அத்தகைய இடங்களில் மின்னணு எந்திரம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதை அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் பிரச்சினை தீர்ந்துள்ளது. பயன்படாத மின்னணு எந்திரங்களை கொண்டு செல்வது தொடர்பாக இப்போது நாங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம்.
ஜான்சி தொகுதியிலும் பயன்படாத மின்னணு எந்திரங்களை கொண்டு சென்றதால்தான் கட்சி தொண்டர்கள் சந்தேகத்தில் வதந்தியை பரப்பிவிட்டனர். தற்போது அங்கும் உரிய விளக்கம் அளித்த பிறகு பிரச்சினை தீர்ந்துள்ளது.
இவ்வாறு அந்த தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் பயன்படுத்தும் 11 ஆவணங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1. பாஸ்போர்ட்
2. ஓட்டுநர் உரிமம்
3. மத்திய -மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் - வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாளஅட்டை
4.புகைப்படத்துடன் கூடிய வங்கி - அஞ்சலக கணக்குப் புத்தகம்
5.பான்கார்டு
6. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
7.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணிஅட்டை
8.தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட்கார்டு
9.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியஆவணம்
10. பாராளுமன்ற- சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை
11.ஆதார் கார்டு
வாக்களிக்கும்போது இந்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு வாக்காளர் வேறொரு சட்ட மன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் தேர்தல்ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்கு உரியவாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectionCommission #Parliamentelection #LSPolls
தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஆர்.சுந்தர்ராஜ் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சுந்தர்ராஜ் 493 வாக்குகள் வித்தியாசத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியை தோற்கடித்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், “ஒட்டப்பிடாரம் தொகுதி வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் கடந்த ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணியில் சேர்ந்தார். இதன் காரணமாக அவர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதை சென்னை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு உறுதி செய்தது. இதையடுத்து ஒட்டப்பிடாரம் தொகுதி காலியிடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தால் 18 தொகுதிகளும் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டன. கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும், ஏ.கே.போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் ஏற்கனவே காலியிடங்களாக இருந்தன.
இதற்கிடையே ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் சிக்கி தண்டனை பெற்றதால் அவர் பதவி இழந்து ஓசூர் தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. எனவே தமிழக சட்டசபையில் 21 தொகுதி இடங்களில் காலியிடங்களாக இருந்தன. இந்த 21 தொகுதிகளுக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறி ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. மற்ற 18 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 18-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
3 தொகுதி தேர்தல் நடத்தாததற்கு தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 3 தொகுதிகளிலும் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், “வழக்குகளை வாபஸ் பெற்றால் தேர்தல் நடத்த தயார்” என்று அறிவித்தனர்.
அதுபோல ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து தான் தொடர்ந்திருந்த வழக்கை வாபஸ் பெறுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அவரது வழக்கு நேற்று நீதிபதி ரவிசந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வழக்கை வாபஸ் பெறுவதாக” கிருஷ்ணசாமி மனு செய்தார்.
அந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார். ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை அவர் தள்ளுபடி செய்தார்.
கோர்ட்டின் இந்த உத்தரவு நகலை உடனடியாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கும்படியும் ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு வாபஸ் பெறப்பட்டு விட்டதால் அங்கு தேர்தலை எந்த தடையும் இல்லை. எனவே ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தலை வேறு தேதியில் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Ottapidaram #EC
தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷன் கடந்த 10-ந் தேதி அறிவித்தது. அன்றே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
இதையொட்டி ஊத்துக்கோட்டையில் உள்ள மறைந்த பெரியார், காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு பேரூராட்சி அதிகாரிகள் போர்வைகளை போர்த்தி மறைத்தனர்.
இதனை எதிர்த்து ஊத்துக்கோட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை, ஊத்துக்கோட்டை பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஷேக்தாவூத் ஆகியோர் தலைமை தேர்தல் கமிஷனில் மனு அளித்தனர்.
அதில், மறைந்த தலைவர்களின் சிலைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தேர்தல் கமிஷனின் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மேற்கோள் காட்டி இருந்தனர்.
அதன் அடிப்படையில் தேர்தல் கமிஷன் மறைந்த அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மாவட்ட நிர்வாகத்துக்கு நேற்று சுற்றறிக்கை அளித்தது.
அதன்படி திருவள்ளூர் தொகுதி துணை தேர்தல் அலுவலர் பார்வதி மற்றும் தேர்தல் வட்டாட்சியர் வில்சன் உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டையில் பெரியார், காமராஜ், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் சிலைகளுக்கு போர்த்தப்பட்ட திரைகளை அதிகாரிகள் அகற்றினர்.
இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். #Parliamentelection
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்