search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி அறிவுரை. கற்பழிப்பு"

    பாலியல் குற்றங்கள் குறித்து பெண்கள் உடனுக்குடன் புகார் அளிக்க முன் வர வேண்டும் என்று நீதிபதி முத்து சாரதா அறிவுரை வழங்கினார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், ராஜபாளையத்தில் நடந்த பாலியல் தொந்தரவு தடுப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் 70 ஆசிரியைகள் மற்றும் 180 மாணவிகள் பங்கேற்றனர்.

    விருதுநகர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து இந்த முகாமை நடத்தினர்.

    முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற முகாமில் முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா உள்ளிட்ட நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.

    இவர்களுக்கு, பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் குறித்தும், தொந்தரவு நடக்கும் இடம் மற்றும் சூழ்நிலைகள் குறித்தும், அதை தடுக்கும் வழி முறைகள் குறித்தும், குற்றம் புரிபவர்கள் மீது புகார் அளிக்க கூடிய இடங்கள் மற்றும் வழி முறைகள் குறித்தும், பாலியல் குற்றவாளிகள் மீது பதியப்படும் சட்டப் பிரிவுகள் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் குறித்தும் நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் பேசினர்.

    சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா பேசும்போது, பாலியல் குற்றம் குறித்த சட்ட விழிப்புணர்வு பெண்களை விட ஆண்களுக்கு மிகவும் அவசியம். பாலியல் குற்றங்கள் குறித்து பெண்கள் அச்சப்பட்டு, தாமதமாக புகார் அளிக்கும் பட்சத்தில், அந்த தாமதமே குற்றவாளிக்கு சாதகமாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே பெண்கள் உடனுக்குடன் புகார் அளிக்க முன் வர வேண்டும். என்றார்.

    ×