என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நுழைவு கட்டணம்
நீங்கள் தேடியது "நுழைவு கட்டணம்"
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக டாஸ்மாக் பார்களில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. #Plasticban #Tasmacshop
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே ‘பார்’கள் இயங்கி வருகின்றன. அரசு அனுமதி பெற்ற பார்கள் 2 ஆயிரம் அளவிலும், அரசு அனுமதி பெறாத பார்கள் சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை இந்த பார்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்த 2 பொருட்களும் அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலில் வருவதால், இனி இதை விற்பனை செய்ய முடியாது. கண்ணாடி டம்ளர், சில்வர் டம்ளர், தண்ணீர் பாட்டில்களைத் தான் பயன்படுத்த முடியும். இதனால், பார் உரிமையாளர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் மாவட்ட வாரியாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் பார் உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து எடுத்துக்கூறப்பட்டது. அப்போது, பார் உரிமையாளர்கள் தங்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் விற்பனையின் மூலமே ஓரளவு பணம் கிடைக்கும். அதை நிறுத்தினால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன் கூறும்போது, “டாஸ்மாக் பார்களில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம் மூலம் வாடிக்கையாளருக்கு தண்ணீர் பாட்டில், மது அருந்த கண்ணாடி டம்ளர் வழங்கப்படும். பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். அடுத்த மாதம் டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் விடப்பட இருக்கிறது. எங்களிடம் இருந்து அரசு வசூலிக்கும் பார் உரிமைத்தொகையை குறைக்க வேண்டும். பெட்டிக்கடைகள், சிறிய வகை ஓட்டல்கள் பார்கள் போல் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். #Plasticban #Tasmacshop

அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் பார்களில் நாளை (செவ்வாய்கிழமை) முதல் நுழைவுக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு ஒன்றை டாஸ்மாக் அதிகாரிகள் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நாளை முதல் டாஸ்மாக் பார்களில் ரூ.10 முதல் ரூ.20 வரை நுழைவு கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுப்பிரியர்களுக்கு கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன் கூறும்போது, “டாஸ்மாக் பார்களில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணம் மூலம் வாடிக்கையாளருக்கு தண்ணீர் பாட்டில், மது அருந்த கண்ணாடி டம்ளர் வழங்கப்படும். பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். அடுத்த மாதம் டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் விடப்பட இருக்கிறது. எங்களிடம் இருந்து அரசு வசூலிக்கும் பார் உரிமைத்தொகையை குறைக்க வேண்டும். பெட்டிக்கடைகள், சிறிய வகை ஓட்டல்கள் பார்கள் போல் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். #Plasticban #Tasmacshop
ஊட்டி மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி:
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், கடந்த 1982-ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே மரவியல் பூங்கா தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் குளிர்பிரதேசங்களில் வளரக்கூடிய சுமார் 60 வகை மரங்கள் பூங்காவில் நடப்பட்டு, அவை வளர்க்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வந்தது. இதற்கிடையே பூங்காவை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்படாததாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் பொலிவிழந்து காணப்பட்டது. இதையடுத்து பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த 2006-2007-ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் செலவில் பூங்கா புனரமைக்கப்பட்டு, சுற்றிலும் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டது. மேலும் கூடுதலாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. பூங்காவின் மொத்த பரப்பளவு 1.58 ஹெக்டேர் ஆகும். பூங்காவில் நடைபாதையின் இருபுறங்களிலும் பல்வேறு வகையான மலர் செடிகள் காணப்படுகிறது. மரங்களை சுற்றிலும் அலங்கார செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. உயர்ந்த மரங்களுக்கு நடுவே பசுமையான புல்வெளிகள் இருக்கிறது. இது சுற்றுலா பயணிகளை கவருகிறது.
மரவியல் பூங்காவில் அமருவதற்காக மரத்தினால் ஆன இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. பூங்காவை ரசிக்கும் வகையில் அழகான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பூங்காவையொட்டி ஊட்டி மலை ரெயில் செல்லும் போது, சத்தம் கேட்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் அங்குள்ள மரங்களில் அரிய வகை பறவைகள் காணப்படுகிறது. இந்த பூங்காவை சுற்றுலா பயணிகள் நுழைவுக் கட்டணம் இன்றி ரசித்து வந்தனர். அப்பகுதி பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் தோட்டக்கலைத்துறை திடீரென மரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நுழைவுக்கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கு-ரூ.10, சிறியவர்களுக்கு-ரூ.5 நுழைவுக்கட்டணம், கேமரா-ரூ.10, வீடியோ கேமரா-ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பு குறித்த பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவுக்கட்டணம் வசூலிப்பதற்காக டிக்கெட் கவுன்ட்டர் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 2 பேர் பணியில் இருக்கின்றனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூங்கா செயல்படும்.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறியதாவது:-
இதுவரை இலவசமாக பொதுமக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் பூங்காவை கண்டு ரசித்து வந்தனர். தற்போது கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதால், அவர்கள் அவதி அடைந்து உள்ளனர். கட்டணம் நிர்ணயம் செய்யப்படாமல் இருந்த போது, பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது. இதனால் நுழைவுக்கட்டணம் நிர்ணயிப்பால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் குறையும். தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், வாடகை வாகனங்களில் சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து குறைந்த கட்டணம் உள்ள கர்நாடகா ஸ்ரீ தோட்டக்கலை பூங்காவுக்கு அழைத்து செல்கின்றனர். இதே நிலைமை நீடித்தால் அந்த பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

உத்தர பிரதேசத்தில் உள்ள தாஜ் மஹாலில் கல்லறை பகுதிக்கு செல்ல கூடுதலாக ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். #TajMahal
ஆக்ரா:
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த தாஜ் மஹால் நினைவு சின்னம் அமைந்துள்ளது. முகலாயர்களின் கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ள இங்கு பொதுமக்கள் சென்று பார்வையிட ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த கட்டண அறிவிப்பின்படி, உள்ளூர் பார்வையாளர்கள் ரூ.250 மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் ரூ.1,300 செலுத்த வேண்டும். இதேபோன்று சார்க் நாடுகளில் இருந்து வருவோர் ரூ.540க்கு பதிலாக ரூ.740 கட்டணம் செலுத்திட வேண்டும்.
ரூ.50க்கான டிக்கெட் வைத்திருப்போர் கல்லறை பகுதிக்குள் நுழைய முடியாது. ஆனால் அவர்கள் தாஜ் மஹாலை சுற்றி வந்து பின்பகுதியை காண முடியும். பின்புறம் உள்ள யமுனை நதியின் கரையையும் அவர்கள் காண முடியும்.
கடந்த 1983ம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலம் என தாஜ் மஹால் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் முஸ்லிம் கலைக்கான அணிகலன் மற்றும் உலக பாரம்பரிய தலத்தில் உலகளவில் ஈர்த்த சிறந்த படைப்புகளில் ஒன்றாக உள்ளது என சான்று வழங்கப்பட்டு உள்ளது. #TajMahal

இந்த நிலையில், தாஜ் மஹாலின் முக்கிய பகுதியான கல்லறை பகுதிக்கு செல்வதற்கு கூடுதலாக ரூ.200 கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டண வசூல் முறையால் முக்கிய பகுதியில் மக்கள் கூட்டம் சேருவது குறையும்.
இந்த கட்டண அறிவிப்பின்படி, உள்ளூர் பார்வையாளர்கள் ரூ.250 மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் ரூ.1,300 செலுத்த வேண்டும். இதேபோன்று சார்க் நாடுகளில் இருந்து வருவோர் ரூ.540க்கு பதிலாக ரூ.740 கட்டணம் செலுத்திட வேண்டும்.
ரூ.50க்கான டிக்கெட் வைத்திருப்போர் கல்லறை பகுதிக்குள் நுழைய முடியாது. ஆனால் அவர்கள் தாஜ் மஹாலை சுற்றி வந்து பின்பகுதியை காண முடியும். பின்புறம் உள்ள யமுனை நதியின் கரையையும் அவர்கள் காண முடியும்.
கடந்த 1983ம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலம் என தாஜ் மஹால் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் முஸ்லிம் கலைக்கான அணிகலன் மற்றும் உலக பாரம்பரிய தலத்தில் உலகளவில் ஈர்த்த சிறந்த படைப்புகளில் ஒன்றாக உள்ளது என சான்று வழங்கப்பட்டு உள்ளது. #TajMahal
×

X