search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்ருட்டி யூகேஜி மாணவன்"

    தேசிய கொடியை மட்டும் காண்பித்து இது எந்த நாட்டு கொடி என கேள்வி எழுப்பினால் நொடிப் பொழுதில் உரிய நாட்டின் பெயரை கூறி பண்ருட்டி யூ.கே.ஜி. மாணவன் அசத்துகிறான். #PanrutiUKGStudent
    பண்ருட்டி:

    பண்ருட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ், இவரது மனைவி சுகன்யா இவர்களது மகன் ஹரி சரண் (வயது 4) இவன் பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறான்.

    பெற்றோர்களிடம் கல்வி கற்று வந்த சிறுவன் ஹரிசரனை கடந்தாண்டு பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் ப்ரி கே.ஜி.யில் சேர்த்தனர்.

    இவனது அபார திறனை வியந்தபள்ளி ஆசிரியைகள் சிறுவன் ஹரிசரணுக்கு தூண்டுகோலாக இருந்தனர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிறைய வி‌ஷயங்களை இவனுக்கு சொல்லி கொடுத்து வந்தனர். 2 வயதில் தொடங்கிய இவனது நினைவாற்றல் தற்போது 4 வயதில் அசத்தும் வகை பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டி வருகிறான்.

    கரும்பலகையில் அமைக்கப்பட்டுள்ள 200 உலக நாடுகளின் தேசிய கொடிகளை சுட்டிகாட்டி அவை எந்த நாட்டிற்கான கொடி என்று கேட்டால் கடகடவென வரிசையாக உலக நாடுகளின் பெயரை சொல்லி அசத்தி அனைவரின் பாராட்டை பெற்று சாதனை படைத்துள்ளான். இது மட்டும் இல்லாமல் கொடியை மட்டும் காண்பித்து இது எந்த நாட்டு கொடி என கேள்வி எழுப்பினால் நொடிப் பொழுதில் உரிய நாட்டின் பெயரை கூறி அசத்துகிறான்.

    ஹரிகரணின் அசத்தல் இதோடு மட்டும் இல்லாமல் உலக நாடுகளின் பெயர், தலைநகரம் ஆகியவையும் கூறி வருகிறான். தேவாரம், திருவாசகம் பாடல்களையும் மழலை மொழியில் பாடி அசத்தும் ஹரிசரணை பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட அனைவரும் பாராட்டுகின்றனர். சிறுவன் ஹரிசரணுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

    இது பற்றி ஹரிசரணின் தாயார் சுகன்யா கூறியதாவது:-

    மாணவன் ஹரிசரண் படிப்பில் படுசுட்டி. படிப்பில் இவனுக்கு இருக்கும் ஆர்வத்தை அறிந்து இவனது ஆர்வத்தை தூண்டும் வகையில் இவனது படிப்பில் தனிகவனம் செலுத்தி வந்தோம்.

    ஹரிசரணுக்காக டி.வி. பார்ப்பதை தவிர்த்தோம். உலக நாடுகள் பெயர், அந்தந்த நாடுகளின்கொடி, சின்னம், தலைநகர் பெயர் ஆகியவைகளை பார்த்து படிக்க ஆரம்பித்தான். 2 வயதிலேயே 100 நாடுகளின் பெயர், கொடி ஆகியவை காண்பித்து சொல்ல தொடங்கினான். இப்போது 200 நாடுகளின் கொடியை காண்பித்து இது எந்தநாட்டு கொடி என்று கேட்டால் உடனே அந்த நாட்டின் பெயரை சொல்லும் அளவிற்கு சிறு வயதிலேயே ஞாபகசக்தியில் சிறந்து விளங்கி வருகிறான்.

    இவ்வாறு அவர் கூறினார். #PanrutiUKGStudent
    ×