search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி"

    • பள்ளியில் சுமார் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • தகவலறிந்த அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டுக்காரன் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுமார் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதில் சில ஆசிரியர்கள் பள்ளியில் சரிவர பணியை செய்வதில்லை என்பது பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. உடனே அந்த ஆசிரியர்களை வேறு இடத்திற்கு மாற்ற செய்ய வேண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்வி துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் சரிவர பணி செய்யாத ஆசிரியர்களை தவிர 3 ஆசிரியர்களை மட்டும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரியவந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால், ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு மட்டும் மாணவர்கள் படிக்க யாரும் வரவில்லை. இதனால் பணியில் இருந்த ஆசிரி யர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பள்ளியின் முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் திரண்டு வந்து திடீரென்று போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தென்றல் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது அதிகாரியிடம் பெற்றோர்கள், 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமல் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

    மேலும், பணியிடமாற்றம் செய்யப்பட்ட 3 ஆசிரியர்களையும் மீண்டும் இதே பள்ளியில் பணியமர்ந்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதுகுறித்து அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • இவரது கணவர் ராம் மிலன் சென்னையில் உள்ள பாபா அணுசக்தி நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார்
    • 5வது நாள் அமன் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கோவிலில் சென்று அமர்ந்துள்ளான்.

    உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் வசித்து வந்தவர் ஆர்த்தி தேவி. இவரது கணவர் ராம் மிலன் சென்னையில் உள்ள பாபா அணுசக்தி நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். மூத்த மகள் வேறு ஒரு நகரில் தங்கி எம்பிபிஎஸ் படித்து வருகிறார். எனவே தனது 17 வயது மகன் அமன் உடன் ஆர்த்தி தேவி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி செல்ல நேரமாகிறது என தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை எழுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த மகன் தாயை கீழே தள்ளி விட்டதில் அவரது தலையில் பலமாக அடிபட்டுள்ளது. காயம் காரணமாக தாய் ஆர்த்தி தேவி அங்கேயே உயிரிழந்தார். இதனால் பதற்றம் அடைந்த மகன் அமன் தாயின் உயிரிழப்பை மறைக்க முயன்றுள்ளான்.

    தொடர்ந்து வீட்டில் சிசிடிவி இணைப்பை துண்டித்து வீட்டை வெளியில் இருந்து பூட்டிவிட்டு தாயின் சடலத்துடன் 4 நாட்கள் உள்ளேயே இருந்துள்ளான். சென்னையில் உள்ள ராம் மிலன் பலமுறை அழைத்தும் ஆர்த்தி தேவி செல்போன் ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது.

    இடைப்பட்ட நேரத்தில் ஆர்த்தி தேவியின் உடல் அழுகி துர்நாற்றம் வரத் தொடங்கிய நிலையில் ஊதுபத்திகளை ஏற்றி அந்த வாடை வெளியே செல்லாமல் அமன் தடுத்துள்ளான். இருப்பினும் 5வது நாள் அமன் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கோவிலில் சென்று அமர்ந்துள்ளான். தந்தை ராம் மிலன் தனது அண்ணியை அழைத்து வீட்டில் சென்று பார்க்க சொல்லியுள்ளார்.

    அதன்படி அவர் வந்து பார்த்த போது வீடு உள்ளே இருந்து போடப்பட்டிருந்தது. மேலும் துர்நாற்றம் வந்துகொண்டிருந்தது. சென்னையில் இருந்து உடனே கிளம்பி வந்த ராம் மிலன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவரது மனைவியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது.

     

    இதுதொடர்பாக போலீசுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் பக்கத்தில் இருந்த கோவிலில் இருந்த அமனும் கண்டுபிடிக்கப்பட்டான்.தனது தாய் கீழே விழுந்ததில் இறந்ததாகவும் பயத்தில் தான் 4 நாட்களாக வெளியே சுற்றித் திரிந்ததாகவும் கூறியுள்ளார். 

     ஆனால் வீட்டில் ரத்தக் கரை இரண்டு இடங்களில் இருந்த நிலையில் ஆர்த்தி தேவி உடல் இழுத்துச் செல்லப்பட்டதை போலீஸ் உணர்ந்தது. மேலும் அமன் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவன் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். பள்ளியிலும் அமன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்துள்ளது.

    தொடர்ந்து அமனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாய் பள்ளிக்கு செல்லுமாறு கூறியதாகவும் இதற்கு அமன் மறுத்ததால், அமன் அதிக பணத்தை வாங்கி செலவழிப்பதாக வாக்குவாதம் ஏற்பட்டு, தாய் விரக்தியில் பணத்தை தன் மீது தூக்கியெறிந்தார் எறிந்தார், எனவே அவரை தான் கீழே தள்ளி விட்டதாக அமன் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அமன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அம சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அமனை அனுப்பி வைத்தனர்.

    • மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பள்ளிகளில் சோதனை.
    • மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பள்ளிகளில் சோதனை நடத்தப்படுகிறது.

    கடந்த டிசம்பர் 9 ஆம் தேதியில் இருந்து கிட்டத்தட்ட 44 பள்ளிகளுக்கு இதேபோல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் அவை வெறும் புரளி தான் என்று தெரியவந்தது.

    இன்றைய வெடிகுண்டு மிரட்டல் குறித்து பேசிய தீயணைப்புத் துறை அதிகாரி, "பசிம் விகாரில் உள்ள பட்நகர் சர்வதேச பள்ளி, ஸ்ரீனிவாஸ் பூரியில் உள்ள கேம்பிர்ட்ஸ் பிள்ளி மற்றும் டிபிஎஸ் அமர் காலனியில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது," என தெரிவித்தார்.

    வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் மோப்ப நாய் படைகளுடன் பள்ளிகளுக்கு வந்து சோதனை நடத்தினர்.

    • அதன்பின் நடந்த ரத்தக்களரியில் 500,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
    • தாரா மக்கள் நடத்திய போராட்டங்களில் போலீஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகிறது.

    ஆசாத் ஆட்சியின் வீழ்ச்சி 

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக அவரது குடும்பமே சிரியாவில் ஆட்சியில் இருந்தது.

    இதற்கிடையே அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார பிரச்சனைகள், சர்வாதிகாரப் போக்கு ஆகியவற்றை எதிர்த்து கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. ரஷியாவின் உதவியுடன் அப்போது தனது ஆட்சியை ஆசாத் காப்பற்றிக்கொண்டார்.

     

    அதிபர் பஷர் அல் ஆசாத் 

    உலக சக்தியான ரஷியாவின் உதவியுடன் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் அமைதியின்மை தொடரவே செய்தது. அதன் விளைவாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையில், பல கிளர்ச்சிப் குழுக்கள் முக்கிய நகரங்களையும் கடைசியாக டமாஸ்கஸ் உட்பட அலெப்போ, ஹமா, தாரா உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர். அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    'எஜாக் எல் டோர், யா டாக்டர்'

    2011 ஆம் ஆண்டு சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஒரு இளைஞனின் 14 வயது பள்ளிச் சிறுவனின் புரட்சிகரமான செயல் நாட்டின் தலைவிதியையே மாற்றியமைத்துள்ளது.2011 சிரியா உள்நாட்டு போரின் பிறப்பிடமாக விளங்கும் தாரா நகரத்தில் இந்த கதை தொடங்குகிறது.

    நாடு முழுவதும் மக்கள் மனதில் அடக்கி வைத்திருந்த எதிர்ப்பு சிறுவனின் கிராஃபிட்டி ஓவியமாக முதல் வடிவம் பெற்றது. தாரா நகரை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் மௌவியா சியாஸ்னே, அதிபர் ஆசாத் உடைய புகைப்படத்தைப் பள்ளி சுவரின் கிராஃபிட்டி ஓவியமாக வரைந்து அவரின் மருத்துவ பட்டத்தை குறிப்பிட்டும் வகையில்  ['எஜாக் எல் டோர், யா டாக்டர்'] ['இது உங்களின் முறை டாக்டர்'] என்று எழுதுகிறான். இது உள்ளூர் காவல்துறையினரின் கண்ணில் படவே, மௌவியாவும் அவனது நண்பர்களும் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். 

     

     26 நாட்கள்

     ஆசாத்தின் முகபாரத் [ரகசிய போலீஸ்] அவர்களைக் காவலில் வைத்து 26 நாட்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்துகிறார்கள். தாரா மக்கள் மத்தியில் இந்த செய்தி காட்டுதீ போல் பரவி கோபத்தை ஏற்படுத்துகிறது. சிறுவர்களை விடுதலை செய்யவேண்டி அவர்களின் பெற்றோர்களும், தாரா மக்கள் பலரும் நடத்திய போராட்டங்களில் போலீஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகிறது.

    26 நாட்கள் சித்திரவதைக்குப் பின்னர் விடுதலையான சிறுவர்களின் படங்கள் சிரியா முழுவதும் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. தாராவில் மட்டுமின்றி சிரியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மார்ச் 15, 2011 சிரியா முழுவதும் "எதிர்ப்பு தினம்" அனுசரிக்கப்படுகிறது. இது பின்னர் நாடு தழுவிய இயக்கமாக மாறுகிறது. அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

     

    கிளர்ச்சி > போராட்டம்  

     எதிர்த்து பேசுவோரைச் சிறையில் அடைத்தனர் அவ்வாறு அடைக்கப்பட்ட எண்ணற்றோரைச் சித்திரவதைக்கு உட்படுத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் ஆயுதங்களை ஏந்தி கிளர்ச்சியாளர்களாக மாறுகின்றனர்.

    அதன்பின் நடந்த ரத்தக்களரியில் 500,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 13 மில்லியனுக்கும் அதிகமான சிரியர்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.

    ரஷியாவின் உதவியால் அப்போது தப்பிய ஆசாத் ஆட்சி தற்போது கடந்த வாரம் திடீரென புத்துயிர் பெற்ற கிளர்ச்சியால் ஒரே வாரத்தில் வீழ்ந்துள்ளது. இதனால் நேற்று வரை கிளர்த்தியாளர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் இனி ஆட்சியாளர்கள் என்று குறிப்பிடப்படுவார்கள்.

     

    • பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் இ.மெயில் மூலம் பள்ளி அலுவலக இ.மெயிலுக்கு குறுந்தகவல் வந்தது.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யாரென்று தெரியவில்லை.

    திருப்பூர்:

    திருப்பூர் ராக்கியா பாளையம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். வார இறுதி விடுமுறை நாட்கள் முடிந்து வழக்கம் போல் இன்று காலை மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் இ.மெயில் மூலம் பள்ளி அலுவலக இ.மெயிலுக்கு குறுந்தகவல் வந்தது.

    அதில் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக நல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின் பேரில் நல்லூர் உதவி கமிஷனர் விஜய லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக பள்ளி மைதானத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தனர்.

    தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பள்ளி வகுப்பறைகள், அலுவலகங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்டவற்றை மெட்டல் டிடெக்டர், மோப்பர் நாய் மூலம் சோதனை மேற்கொண்டனர். பள்ளி வாகனங்களை வெளியே நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

    இருப்பினும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டனர். அவர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து சென்றனர். பள்ளிக்கு விடுமுறையும் விடப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யாரென்று தெரியவில்லை. இ.மெயில் முகவரியை வைத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இறங்கி உள்ளனர். அண்மைக்காலமாக தமிழகத்தில் பள்ளி- கல்லூரிகள் மற்றும் பொது இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது வழக்கமாகியுள்ளது. எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது.
    • பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் தனியாருக்கு சொந்தமான விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அதற்கு எதிர் தளத்தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.

    கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த 45 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. சில மாணவிகள் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதனால் கடந்த 1 வாரமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் உள்ள ஆய்வுக்கூடத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் தற்போது வரை ஆய்வுக்கூடத்தில் ரசாயன வாயுகசிவு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது திடீரென்று 9 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். மீண்டும் பள்ளியில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் அலறி அடித்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர். மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் எல்லையம்மன் கோவில் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர், தாசில்தார் சகாயராணி, திருவொற்றியூர் மண்டல அதிகாரி புருஷோத்தமன், மருத்துவத்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கு வந்தனர். மாநகராட்சி வடக்கு வட்டாரத் துணை கமிஷனர் ரவிகட்டா தேஜா அதிகாரிகளுடன் பள்ளியை ஆய்வு செய்தனர்.

    தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். காற்றில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை, வாயுக்களின் தரம் அறியும் இயந்திரம் கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்தியது.

    இந்நிலையில் வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆய்வு செய்து இந்த வாரத்தின் இறுதியில் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    • கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது.
    • தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது.

    சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் தனியாருக்கு சொந்தமான விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அதற்கு எதிர் தளத்தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.

    கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த 45 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. சில மாணவிகள் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதனால் கடந்த 1 வாரமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் உள்ள ஆய்வுக்கூடத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் தற்போது வரை ஆய்வுக்கூடத்தில் ரசாயன வாயுகசிவு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் ரசாயன வாயுகசிவு குறித்து மாவட்ட கல்வி துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறையிடமிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் ஏதும் கூறவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் பள்ளியில் எதற்கெடுத்தாலும் அபராதம் விதிக்கின்றனர், கல்வி கட்டணம் அதிகம் வசூலிக்கின்றனர். பள்ளி வகுப்பறையில் காற்று வசதி இல்லை. போதிய கட்டமைப்பு இல்லை. விளையாட்டு மைதானம் கிடையாது. மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் அடிக்கின்றனர். பெற்றோர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் பதில் கூறுவதில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினர்.

    அப்போது திடீரென்று 9 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். மீண்டும் பள்ளியில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் அலறி அடித்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர். மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் எல்லையம்மன் கோவில் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர், தாசில்தார் சகாயராணி, திருவொற்றியூர் மண்டல அதிகாரி புருஷோத்தமன், மருத்துவத்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கு வந்தனர். மாநகராட்சி வடக்கு வட்டாரத் துணை கமிஷனர் ரவிகட்டா தேஜா அதிகாரிகளுடன் பள்ளியை ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில் தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    காற்றில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை, வாயுக்களின் தரம் அறியும் இயந்திரம் கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்தி வருகிறது.

    • குண்டுவெடிப்புக்கான காரணத்தை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
    • அருகாமையில் உள்ள கடைகளின் பெயர் பலகையும் சேதமடைந்துள்ளது.

    டெல்லி ரோகினியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    வெடிவிபத்தைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

     

    இன்று காலை சரியாக 7.47 மணிக்கு சிஆர்பிஎப் பள்ளி அருகே பிரஷாந்த் விகாரில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மூத்த காவல் துறை அதிகாரி அமித் கோயல் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்தில் நடத்திய சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

    இந்த வெடிவிபத்து காரணமாக அருகில் நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடிகள் சேதமடைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அருகாமையில் உள்ள கடைகளின் பெயர் பலகையும் சேதமடைந்துள்ளது. 



    • பள்ளி நேரம் முடிந்ததும் பள்ளியின் நுழைவு வாயில் பூட்டு போடப்பட்டு மூடப்படும்.
    • ஒரு பூட்டு தான் பள்ளி நிர்வாகம் சார்பில் போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மாவடிப் பண்ணையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    தினமும் பள்ளி நேரம் முடிந்ததும் பள்ளியின் நுழைவு வாயில் பூட்டு போடப்பட்டு மூடப்படும்.

    இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு சத்துணவு முட்டை வந்துள்ளது. எனவே பணியாளர் முட்டையை இறக்குவதற்காக வருகை தந்துள்ளார். அப்போது ஏற்கனவே பள்ளி சார்பில் போடப்பட்டிருந்த பூட்டுக்கு மேல் மற்றொரு பூட்டும் போடப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பணியாளர் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு அவர் ஒரு பூட்டு தான் பள்ளி நிர்வாகம் சார்பில் போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையில் காலையில் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருகை தர ஆரம்பித்தனர். அவர்கள் பள்ளி நுழைவு வாயிலில் பூட்டுப் போடப்பட்டிருந்ததால் பள்ளிக்குள் போக முடியாமல் நீண்ட நேரம் வெளியிலேயே காத்திருந்தனர்.

    அதன்பின்னர் பள்ளி ஆசிரியர்கள் வந்து அந்த பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து பூட்டை உடைத்து மாணவ, மாணவிகள் உள்ளே சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த பள்ளியின் நுழைவு வாயிலை பூட்டு போட்டு பூட்டிச் சென்றது தெரியவந்தது.

    பள்ளி கதவுகளுக்கு பூட்டுபோட்டதால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மாணவ, மாணவிகள் வெளியே காத்திருந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணபட்டது.

    • லெபனான் மீது குறிவைத்துள்ள இஸ்ரேல், காசா மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி உள்ளது.
    • இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி மற்றும் பள்ளியை குறிவைத்து இன்று அதிகாலை குண்டுகளை வீசியது

    சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும் மீறி பாலஸ்தீனம் லெபனான் மீது இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். இந்நிலையில் தற்போது லெபனான் மீது குறிவைத்து இஸ்ரேல் தாக்கி வந்தாலும், காசா மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி உள்ளது.

    மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் அல்-பலாஹ் நகரில் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு அருகே இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி மற்றும் பள்ளியை குறிவைத்து இன்று அதிகாலை இஸ்ரேல் குண்டுகளை வீசியது.

    இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் 93 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையே வடக்கு காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தப்பட்டுள்ள இஸ்ரேல் அங்குள்ள மக்களை வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • சிறுவனை பலிகொடுத்தால் தங்களின் பள்ளியின் பிஸ்னஸ் வளர்ச்சி அடையும் என்றும் புகழ் கிடைக்கும் நம்பியுள்ளனர்.
    • பள்ளியின் இயக்குநர், பிரின்சிபல் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஐவர் பிளாக் மேஜிக் உள்ளிட்ட மூட நம்பிக்கை சடங்குகளில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர்

    தங்கள் பள்ளியின் வளர்ச்சி மற்றும் புகழுக்காக  2 ஆம் வகுப்பு மாணவனை நிர்வாகமே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. DL பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியின் இயக்குநர், பிரின்சிபல் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஐவர் பிளாக் மேஜிக் உள்ளிட்ட மூட நம்பிக்கை சடங்குகளில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. சிறுவனை நரபலிகொடுத்தால் தங்களின் பள்ளியின் பிஸ்னஸ் வளர்ச்சி அடையும் என்றும் புகழ் கிடைக்கும்  நம்பியுள்ளனர்.

     

    எனவே பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்த 11 வயதாகும்  இரண்டாம் வகுப்பு மாணவனை கடவுளுக்கு நரபலிகொடுக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ஒரு முறை அதற்கு முயன்று தோற்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பலி கொடுக்க தேர்ந்தெடுத்த சிறுவனை ஐவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். சிறுவனின் உடலை பள்ளி இயக்குநர் தனது காரில் மறைத்து வைத்துள்ளார். கடந்த திங்கள்கிழமை முதல் சிறுவனை காணவில்லை என பாடம் எடுக்கும் ஆசியரியர் தேடிய நிலையில் விவகாரம் போலீசுக்கு சென்றுள்ளது.

    போலீசார் நடத்திய சோதனையில் பள்ளி இயக்குநரின் காரில் கழுத்தில் காயங்களுடன் சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் சிறுவன் பலி கொடுக்கப்பட்ட உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பள்ளி இயக்குநர் உள்ளிட்ட ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் இது குறித்து பள்ளியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட வேறு யாரும் முன்னரே தெரிந்து வைத்திருந்தனரா என்றும் விசாரித்து வருகின்றனர். அடிப்படை உரிமையான கல்வி லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாறி வருவதன் உச்சமே இந்த கொலை என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

     

    • சிபிஎஸ்சி க்ளஸ்டர் பள்ளிகளுக்கு இடையே தேசிய அளவிளான கோ கோ போட்டி
    • 17 வயது பிரிவில் கோவூர் ஸ்ரீ கிரிஷ் இண்டெர்நேஷனல் பள்ளி முதலிடம்

    வண்டலூர், ரத்தினமங்கலத்தில் உள்ள ஸ்ரீ கிரீஷ் இண்டர்நேஷனல் பள்ளியில் சிபிஎஸ்சி க்ளஸ்டர் பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவில் கோ கோ போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான், ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் இருந்து 800 பள்ளிகளை சார்ந்த 10000 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

    14,17,19 வயது என மூன்று பிரிவின் கீழ் 4 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 19 வயது பிரிவில் என்.கே.வி.வித்யாலயா பள்ளியும் ,17 வயது பிரிவில் ஸ்ரீ கிரிஷ் இண்டெர்நேஷனல் பள்ளியும், 14 வயது பிரிவில் வேலம்மாள் வித்யாலயாவும் முதலிடம் பிடித்தது.

     

    வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சுந்தர் மற்றும் பள்ளித் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பரிசு கோப்பையை வழங்கினர்.இதில் பள்ளி தாளாளர் கவுரி கிருஷ்ணமூர்த்தி, செயல் அலுவலர் ஜெயகார்த்திக் என பலர் கலந்து கொண்டனர்.

     

    ×