search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி நிர்வாகம்"

    உத்தரப்பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் மதில் சுவர் இன்று இடிந்து விழுந்ததில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். #Gorakhpur #Principaldies #boundarycollapse
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சாஜன்வா வட்டத்துக்குட்பட்ட காசர்வால் பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

    இந்நிலையில், அந்தப் பள்ளியின் மதில் சுவர் இன்று இடிந்து விழுந்ததில் தலைமை ஆசிரியை சாரதா சிங்(55) படுகாயமடைந்தார்.

    கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகும் இச்சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. #Gorakhpur #Principaldies #boundarycollapse
    வாழப்பாடியில் கைக்கடிகாரம் மாயமானது குறித்து விசாரணை நடத்துவதாககூறி பள்ளி மாணவனை தாக்கிய உடற்கல்வி ஆசிரியரை பள்ளி நிர்வாகம், பணிநீக்கம் செய்துள்ளது.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 7-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், ஜவுளி வியாபாரி. இவரது மகன் (வயது 15) வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டியிலுள்ள தனியார் வைகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    குழந்தைகள் தினமான கடந்த 14-ந்தேதி இவரது வகுப்பில் படித்துவரும் மற்றொரு மாணவருடைய கைக்கடிகாரம் மாயமானது.இது குறித்து உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேஷ் தனி அறையில் வைத்து மாணவரிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது மாணவர் தான் அந்த கடிகாரத்தை எடுக்கவில்லை என ஆசிரியர் வெங்கடேஷிடம் பலமுறை கூறினார். ஆனால் மாணவர் கூறியதை நம்பாமல் ஆசிரியர் வெங்கடேஷ் பைப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவரது உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. வீடு திரும்பியதும் வலியால் துடித்த மகனை கண்டதும் உடனே பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

    கைக்கடிகாரம் மாயமானது குறித்து விசாரணை நடத்துவதாககூறி, தனது மகனை கண்மூடித்தனமாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் மற்றும் அதற்கு அனுமதித்த வைகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கூறி, காயம் அடைந்த மகன் புகைப்படங்களுடன், அவரது தந்தை பிரபாகரன் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பினார்.

    இந்த தகவல் இரு தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்தே மாணவரின் பெற்றோரை அழைத்து பேசிய பள்ளி நிர்வாகம், மாணவரை தாக்கிய ஆசிரியரை பணிநீக்கம் செய்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்து வைகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி சின்னு என்கிற முத்துச்சாமி கூறியதாவது:-

    உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதில் மாணவர் காயமடைந்தது குறித்து தகவல் தெரியவந்ததும், சம்மந்தப்பட்ட ஆசிரியரை பள்ளியில் இருந்து பணி நீக்கம் செய்துவிட்டோம். இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×