search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி பேருந்து விபத்து"

    இமாச்சல பிரதேசத்தில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் மற்றும் 6 குழந்தைகள் உயிரிழந்தனர். #HimachalAccident
    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலம், சிர்மார் மாவட்டம் சங்ரா நகரில், இன்று காலையில் மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பள்ளி பேருந்து, மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் மலையில் இருந்து உருண்டு ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.

    இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. பேருந்தினுள் இருந்த பள்ளிக் குழந்தைகள் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் 6 பள்ளிக்குழந்தைகள் மற்றும் டிரைவர் என 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #HimachalAccident
    திருவாரூர் அருகே இன்று காலை பள்ளி பஸ் வாய்க்காலில் இறங்கி பக்கவாட்டில் சாய்ந்த விபத்தில் 20 மாணவ- மாணவிகள் காயம் அடைந்தனர்.

    திருவாரூர், ஜூலை.9-

    திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் நன்னிலம், பூந்தோட்டம், பேரளம், குடவாசல் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி வாகனங்கள் மூலமாக மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

    அதன்படி இன்று காலை வெள்ள மண்டபம் என்ற இடத்தில் இருந்து 30 மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு பஸ் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அச்சுதமங் களம் என்ற இடத்தில் உள்ள சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுபப்பாட்டை இழந்து பஸ் ஓடியது. இதில் ரோட்டோரத்தில் உள்ள ஆலங்குடி வாய்க்காலில் பஸ் இறங்கி பக்கவாட்டில் சாய்ந்தது.

    இந்த விபத்தில் பள்ளி பஸ்சில் இருந்த 20 மாணவ- மாணவிகள் மற்றும் டிரைவர் ஆகியோர் காயம் அடைந்தனர்.

    பள்ளி பஸ் டிரைவர் மகேந்திரன், பள்ளி மாணவ- மாணவிகள் நிஷா(7), கார்த்திகா (9), ராம்குமார் (8), வைஷ் ணவி(8), உள்பட 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் நன்னிலம் அரசு மருத்துவ மனையில் சிகிச் சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

    மேலும் நிஷா, வைஷ்ணவி ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக் காக திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

    இந்த விபத்து பற்றி நன்னிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். * * * பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் பள்ளி வேன்.

    ×