search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரணாப் முகர்ஜி"

    • முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி தனது தந்தை பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.
    • இந்தப் புத்தகத்தில் ஷர்மிஷ்தா தனது தந்தையின் பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

    புதுடெல்லி:

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி எழுதிய புத்தக்கம் பிரணாப் மை பாதர். இந்தப் புத்தகத்தில்

    ஷர்மிதா தனது தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    2013-ம் ஆண்டு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிறை தண்டனை பெற்றால் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக 3 மாதம் அவகாசம் வழங்கும் அவசர சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.

    அந்த மசோதாவை கிழித்தெறிந்த ராகுல்காந்தி, அவகாசம் வழங்குவது முழு முட்டாள்தனம் என்று விமர்சனம் செய்தார்.

    அப்போது மன்மோகன்சிங் அரசின் அமைச்சராக இருந்த எனது தந்தை பிரணாப் முகர்ஜி மிகவும் கோபம் அடைந்தார்.

    எனது தந்தைக்கும், ராகுலுக்கும் இடையே உரிய சந்திப்பு நடக்கவில்லை. அதில் பல குழப்பங்கள் இருந்தன. சந்திப்பு பற்றி அடிக்கடி மறந்துவிடுவதும் ஒரு காரணமாக அமைந்தது. இதனால் கட்சியை, நாட்டை ராகுல் வழிநடத்தும் திறன் குறித்து எனது தந்தை அப்போது நம்பிக்கை இழந்தார்.

    ஒருநாள் முகல் கார்டனில் எனது தந்தையின் வழக்கமான காலை நடைபயிற்சியின் போது அவரைப் பார்க்க ராகுல் வந்தார். காலை நடைபயிற்சி மற்றும் பூஜையின்போது எந்த இடையூறும் ஏற்படுவதை எனது தந்தை விரும்ப மாட்டார். இருப்பினும், அவரைச் சந்திக்க முடிவு செய்தார். அதன்பின்தான் ராகுல் உண்மையில் எனது தந்தையை மாலையில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் ராகுலின் அலுவலகம் தவறுதலாக சந்திப்பு காலை என்று அவருக்குத் தெரிவித்தது.

    இதுகுறித்து பின்னர் நான் அறிந்தேன். நான் கேட்டபோது எனது தந்தை, ராகுலின் அலுவலகத்திற்கு காலை, மாலை என்பதையே வேறுபடுத்திப் பார்க்க தெரியவில்லை. இப்படி இருந்தால் அவர்கள் எப்படி ஒருநாள் பிரதமர் அலுவலகத்தை இயக்குவார்கள் என கேலியாக கேட்டார் என தெரிவித்துள்ளார்.

    தலைநகர் டெல்லியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ஆட்சி 352 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, மோடி 30-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்களை கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.



    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், பாராளுமன்ற தேர்தலில் வென்று பிரதமராக மீண்டும் பொறுப்பேற்க உள்ள நிலையில், பிரணாப்ஜி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என பதிவிட்டுள்ளார்.
    பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். #PranabMukherjee #BharatRatna #EdappadiPalanisamy
    சென்னை:

    முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அறிவித்தார். மேலும் சமூக சேவகர் நானாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பிரணாப் முகர்ஜி கூறுகையில், நாட்டு மக்களுக்கு நன்றி என்றார்.



    இந்நிலையில், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைசிறந்த அரசியல் மேதையான பிரணாப் முகர்ஜி நம் நாட்டுக்காக தன்னலமின்றி சேவையாற்றினார் என குறிப்பிட்டுள்ளார். #PranabMukherjee #BharatRatna #EdappadiPalanisamy
    எனக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு நன்றி என முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். #PranabMukherjee #BharatRatna
    புதுடெல்லி:

    முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். மேலும் சமூக சேவகர் நனாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

    இந்நிலையில் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:

    எனக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு நன்றி. எப்போதும் சொல்வதைபோல் இப்போதும் சொல்கிறேன் மக்களிடம் இருந்து பலவற்றை பெற்றுள்ளேன் எனக்கூறியுள்ளார். #PranabMukherjee #BharatRatna
    பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். #PranabMukherjee #BharatRatna #Rahulgandhi
    புதுடெல்லி:

    குடியரசு தினவிழா கொண்டாடப்படும் நிலையில், 3 பேருக்கு (பிரணாப் முகர்ஜி,சமூக சேவகர் நனாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா)  இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 4 பேருக்கு பத்ம விபூஷண் , 14 பேருக்கு பத்ம பூஷண், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் என 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்நிலையில், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துக்கள். நாட்டின் கட்டமைப்பு, பொதுசேவைக்கான பிரணாப்பின் பங்களிப்பால் காங்கிரஸ் பெருமை கொள்கிறது என பதிவிட்டுள்ளார். #PranabMukherjee #BharatRatna #Rahulgandhi
    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபேன் ஹசாரிக்கா ஆகியோர் நாட்டின் மிகவும் உயரிய ‘பாரத ரத்னா’ விருதுக்கு இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர். #NanajiDeshmukh #BhupenHazarika #PranabMukherjee #BharatRatna
    புதுடெல்லி:

    கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புறங்களின் தன்னிறைவு ஆகியவற்றுக்காக தொண்டாற்றிய பிரபல சமூகச்சேவகரான நானா தேஷ்மும் பாரதிய ஜனசங்க தலைவர்களில் குறிப்பிடத்தக்கவராவார்.  கடந்த 2010-ம் ஆண்டு காலமான இவர் முன்னர் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். பத்ம விபூஷன் விருதும் பெற்றுள்ளார்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்த பூபேன் ஹசாரிக்கா பிரபல கவிஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமைகள் பெற்றவராவார். கடந்த 2011-ம் ஆண்டில் இவர் காலமானார்.

    பாராளுமன்ற உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி(83), காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய மந்திரிசபைகளில் நிதி, ராணுவம் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘பாரத ரத்னா’ விருதுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்கள் மூவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். #NanajiDeshmukh #BhupenHazarika #PranabMukherjee #BharatRatna
    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் 54-வது பிறந்தநாளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். #GKVasan #Pranabmukherjee
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் 54-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கஜா புயல் பாதித்த மாவட்டப் பகுதிகளில் த.மா.கா.வினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடிய வகையில் உதவிகள் செய்தனர். மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் போன்ற வழிப்பாடுத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் கொடுக்கப்படுகின்றன.

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் மத்திய மந்திரிகள் ஏ.கே.ஆண்டனி, நீரஜ் சந்திரசேகர், சுப்ரியா சுலே எம்.பி., பா.ஜனதா மூத்த தலைவர் ராதாகிருஷ்ணன், தத்வா பிரகாஷ் சத்பதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலின் தியோரா, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜித்தின் பிரசாத், சச்சின் பைலட், கவிஞர் வைரமுத்து, நடிகர் விவேக் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். #GKVasan #Pranabmukherjee
    கானா நாட்டின் தலைநகரில் நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை, விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் காரணமாக அகற்றப்பட்டுள்ளது. #GhanaGandhiStatue
    அக்ரா:

    ஆப்ரிக்கா நாடான கானாவிற்கும் இந்தியாவிற்கும் உள்ள நட்புறவுக்கு அடையாளமாக, கானா தலைநகர் அக்ராவில் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டது. கானா அரசு பல்கலைக்கழக வளாகத்தில் இந்த சிலையை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார். 

    ஆனால் மகாத்மா காந்தி கறுப்பு ஆப்ரிக்கர்களுக்கு எதிரான இனவாதி என விரிவுரையாளர்கள் பலரும் புகார் கூறினர். காந்தி சிலையை அகற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தினர். இது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். உள்நாட்டு தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனால் சிலையை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைக்க கானா அரசு முடிவு செய்தது.

    இந்நிலையில் கானா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காந்தி சிலை சமீபத்தில் அகற்றப்பட்டது. இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது பல்கலைக்கழகம் எடுத்த முடிவு என கானா உள்துறை தெரிவித்துள்ளது. 

    வழக்கறிஞரான மகாத்மா காந்தி, கடந்த 1893ம் ஆண்டு தென் ஆப்ரிக்கா சென்றார். அங்கேயே 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த அவர், பல்வேறு ஆப்ரிக்க நாடுகளிலும் நிறவெறிக்கு எதிராக போராடியது குறிப்பிடத்தக்கது. #GhanaGandhiStatue
    பொருளாதார வளர்ச்சி திருப்தி அளிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். #PranabMukherjee #IndiaEconomy
    பெங்களூரு:

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பெங்களூருவில் உள்ள கிரீன்வுட் சர்வதேச பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சர்வதேச பொருளாதார சக்தியாக மாறக்கூடிய திறன் படைத்தது, இந்தியா. இந்திய பொருளாதாரம் தற்போது 2.27 லட்சம் கோடி டாலர் மதிப்புடையதாக (ஒரு டாலர் மதிப்பு ரூ.70.62) இருக்கிறது. இது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. 5 லட்சம் கோடி டாலரில் இருந்து 6 லட்சம் கோடி டாலர் வரை அது இருந்திருக்க வேண்டும். முன்னாள் நிதி மந்திரி என்ற முறையில், இதை சொல்கிறேன். நாம் இன்னும் நிறைய முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PranabMukherjee #IndiaEconomy 
    கிங் மேக்கர்ஸ் அகாடமி கிராமப்புற மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து தேர்வுக்கு தயார்படுத்துவது பாராட்டுக்குரியது என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.
    சென்னை:

    சென்னை அண்ணா நகரில் உள்ள கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் புதிய பயிற்சி வளாகம் திறப்பு விழா மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. அகாடமியின் கவுரவ ஆலோசகர் எம்.பூமிநாதன் முன்னிலை வகித்தார்.

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து காணொலி காட்சி மூலம் அகாடமியின் புதிய பயிற்சி வளாகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அகாடமியில் பயின்று சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற 20 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-

    சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முன்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பிள்ளைகள் தான் வெற்றி பெற முடியும். ஆனால் தற்போது அந்த காலம் மாறிவிட்டது. இப்போது சாதாரண குடும்பத்தில் உள்ளவர்களும் வெற்றி பெறுகின்றனர்.

    கிங் மேக்கர்ஸ் அகாடமி கிராமப்புற மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து தேர்வுக்கு தயார்படுத்துவது பாராட்டுக்குரியது.

    நாட்டின் வளர்ச்சியில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. நீதி, நேர்மையை நிலைநாட்டுவதற்கு பல திட்டங்களை அதிகாரிகள் கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், தெளிவான லட்சியம், சரியான தேர்வு, கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி வெற்றி பெற முடியும்.

    முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனை தரும் என்பதற்கு இலக்கணமாக வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

    முன்னதாக அகாடமியின் நிர்வாக இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் வரவேற்றார். முடிவில் அகாடமி இயக்குனர் வெங்கடேஷ் நாராயணன் நன்றி கூறினார்.
    கோபாலபுரம் இல்லத்துக்கு இன்று வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கருணாநிதி படத்தின் முன் அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #DMK #PranabMukherjee
    சென்னை:

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில், இன்று இரவு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த அவர், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார். 

    இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பிரணாப் முகர்ஜி கூறியதாவது, “கருணாநிதி மறைந்த சமயத்தில் வர இயலவில்லை. சிறந்த தலைவரான கருணாநிதியை இழந்து விட்டோம். 48 ஆண்டுகள் நல்ல நண்பராக இருந்தவர் கருணாநிதி. ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தேன்” என தெரிவித்தார்.
    ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற கிங்மேக்கர்ஸ் அகாடமி மாணவர்களுக்கு வருகிற 6-ந்தேதி முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்குகிறார்.
    சென்னை:

    அண்ணாநகர் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் புதிய வளாக திறப்பு விழா மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா வருகிற 6-ந் தேதி மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது.

    விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு புதிய வளாகத்தை திறந்து வைத்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி விருது வழங்குகிறார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக ஏற்பாடுகளை கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்.அகாடமி நிர்வாக இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் செய்து வருகிறார்.
    ×