search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் பை"

    தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. #PlasticBan #TN
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    இது சம்பந்தமான விழிப்புணர்வு பிரசாரங்கள் மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் பை, கப், பேப்பர், ஸ்டிரா, பிளாஸ்டிக் இலை போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.



    இந்நிலையில், பிளாஸ்டிக் தடை ஆணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு உடனடியாக விசாரணைக்கு வந்தது. அப்போது பிளாஸ்டிக் தடை விதிக்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஆனால் இக்கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் மனுதாரரின் மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #PlasticBan #TN
    தாய்லாந்து நாட்டில் இன்று தேசிய சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பதற்கு மிகப்பெரிய கடைகள் மற்றும் மால்கள் முன்வந்துள்ளன. #ThaiEnvironmentDay #CampaignAgainstPlastic
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டில் 1991ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி தாய் சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெருகி வரும் பிளாஸ்டிக் பயன்பாடு பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதால் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகிறது.

    அவ்வகையில் இன்று தாய் சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை பொதுமக்கள் இன்று தவிர்க்க வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. அதனை ஏற்று பல்வேறு கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க ஒப்புக்கொண்டுள்ளன.



    இதற்காக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன், முன்னணி ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைகளை நடத்தும் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பைகளை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    டிசம்பர் 4-ம் தேதியை பிளாஸ்டிக் பைகள் இல்லா நாளாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அனைத்து கடைகளும் மால்களும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது சில நாட்களோ வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளை வழங்காமல், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன. #ThaiEnvironmentDay #CampaignAgainstPlastic 
    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மக்காத பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதால் மாசுபடுகிறது. இதனை தடுக்க பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெருமாள்மலை:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தலமாக இருப்பதால் தமிழகம். கேரளம், ஆந்திரா, கர்நாடக மற்றும் வெளிமாநிலங்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கி றது.

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மக்காத பிளாஸ்டிக் பைகளை உபயோகித்து முக்கிய சுற்றுலா தளங்களிலும் நகர் பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகளை விட்டு செல்லுவதால் வனப்பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு வரும் வன விலங்குகள் மற்றும் பசு மாடுகள் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை உண்கிறது.

    இதனால் விலங்குகளும் இறந்து விடுகின்றன மேலும் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் பாதிப்படைந்து வருகிறது.

    2019-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சர்வேதேச சுற்றுலாத் தலமான கொடைக் கானலில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க கூடாது என சுமார் 4 வருடத்திற்கு முன்பே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

    ஆனால் கொடைக் கானலில் ஓட்டல்கள், சாலையோர கடைகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்கின்றன.

    இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்த விட நடவடிக்கை எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி இந்த பிளாஸ்டிக் பைகளை கடையில் உபயோகிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

    கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை கைவிட்டு துணிப்பைகளுக்கு மாற வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். #WorldEnvironmentDay #AnbumaniRamadoss
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972-ம் ஆண்டு சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோம் நகரில் ஜூன் 5-ந் தேதி கூட்டப்பட்டது. இதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் நாளாக உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ என்பதை இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐ.நா. சபை முன் வைத்துள்ளது. ஐ.நா. சார்பில் 2018 உலக சுற்றுச்சூழல் நாளை கடைபிடிக்கும் முதன்மை நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்திலிருந்து நாட்டின் எல்லா நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மைக்கான பிரசார இயக்கத்தை தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால், ஓராண்டு காலம் கடந்த பின்னரும் இன்னமும் கூட சட்டவிதிகள் வெற்று காகிதமாகவே உள்ளன. இதேபோன்று இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தில் தொடங்கும் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரமும் வாய்ப்பேச்சாக முடிந்துவிடக்கூடாது. தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளையும், பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளையும் முழுமையாக செயல்படுத்தவேண்டும்.



    கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பழக்கத்தை கைவிட்டு துணிப்பைகளுக்கு மாற வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு துணிப்பையை கொண்டு செல்வதன் மூலம் பிளாஸ்டிக் பை கலாசாரத்தை ஒழிக்க உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #WorldEnvironmentDay #AnbumaniRamadoss
    ×