என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புயல் சின்னம்"
தூத்துக்குடி:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு தென் கிழக்கே 930 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று ஆந்திராவை நோக்கி நகர்ந்து ஓங்கோலுக்கும்- காக்கிநாடாவுக்கும் இடையே வருகிற 17-ந் தேதி பகல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி இந்தியப் பெருங்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்தமாகவும் 15-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாகவும் (புயல் சின்னம்) மாறி தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகம் நோக்கி நகரும்.
மீனவர்கள் இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், நாளை (13-ந்தேதி) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும், 15-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம், ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறி 15-ந்தேதி சென்னையை நெருங்கும் என்றும் 16-ந்தேதி வடக்கு நோக்கி நகர்ந்து அன்று இரவு 10 மணிக்கு மேல் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்றும் தனியார் வானிலை அமைப்புகள் தெரிவித்து உள்ளன. #Rain #Bayofbengal
கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கிய பின்பு அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படுகிறது.
நேற்று காலை வரை சாத்தனூர், சத்தியமங்கலத்தில் தலா 2 செ.மீ. மழையும், வேலூர் கலவை, கிருஷ்ணகிரியில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
அதன்பிறகு இது தீவிரம் அடைந்து காற்றழுத்தமாகி, புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. வருகிற 10-ந் தேதி முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறி தமிழகம்-ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
12-ந் தேதி புயலாக மாறி கடற்கரை நோக்கி நகரத் தொடங்கும். 14-ந் தேதி கரையை நெருங்கும். 15-ந் தேதி கடற்கரையை அடையும், 16-ந் தேதி கரையை கடக்காமல் வலுவிழந்து ஒடிசாவுக்கு சென்றுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திங்கட்கிழமைக்கு மேல் வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும்பட்சத்தில் அதற்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து ‘பேய்ட்டி’ என பெயர் சூட்டும். #Storm #Rain #BayofBengal
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 7 செமீ, நன்னிலத்தில் 5 செமீ, குடவாசலில் 4 செ.மீ மழை பதிவானது.
இவ்வாறு அவர் கூறினார். #IMD #IMDChennai #TNRains
கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள புயல் சின்னமானது இன்று காலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது.
தற்போது ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கு தென்கிழக்கில் 360 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கே 330 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் சின்னமானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கலிங்கபட்டினத்துக்கும், கோபால் பூருக்கும் இடையே பாரதீப் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆந்திரா-ஒடிசாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும். மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். நாளை 75 கி.மீ. வேகத்தில் வீசும் அளவுக்கு காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்.
மேலும் தெற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக சென்னை, நாகை, கடலூர், புதுச்சேரி, தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் காற்றும் பலமாக வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
நேற்று கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடல் திடீர் என்று உள்வாங்கியது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரமக்குடியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்குடியில் 4 செ.மீ. மழையும், இளையாங்குடி, கோவி லாங்குளம், வாணியம்பாடி, திருமங்கலம், மதுரை ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழையும், திருச்சுழி, திருப்புவனம், அரிமலம், கடலாடி, முதுகுளத்தூர், வால்பாறையில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது. #Storm #Fisherman
சென்னை:
தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் தென் மேற்கு பருவமழையால் மழை பெய்து அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.
சென்னையில் மழை இல்லாமல் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தும் குழாய் கிணறுகள் வற்றியும் போனதால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. வெப்பச்சலனம் காரணமாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது என்றாலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த நிலையில் ஒடிசா அருகே வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்தம் உருவானதால் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாலையில் லேசாக மழை தூறியது. இரவில் பலத்த மழை கொட்டியது. விடிய, விடிய மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜில்லென குளிர் காற்று வீசியது.
தொடர்ந்து இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது லேசான மழை தூறியது.
சென்னையில் நேற்று இரவு 8.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 3.32 செ.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 3.64 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
இதற்கிடையே ஒடிசா அருகே வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் நிலவுகிறது. அதனுடன் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் மேலடுக்கு சுழற்சியும் உருவாகி இது தெற்கு தீபகற்பம் முழுவதும் நிலவுகிறது.
இதன் காரணமாக ஒடிசா, தெலுங்கானா, ஆந்திராவிலும், வட தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்தமானது அடுத்த 48 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என்றும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக வால்பாறையில் 18 செ.மீ. மழையும், கோவை சின்னக்கல்லாரில் 17 செ.மீ. மழையும் பெய்துள்ளது. நீலகிரி நடுவட்டத்தில் 10 செ.மீ., நெல்லை பாப நாசத்தில் 9 செ.மீ, நீலகிரி தேவாலாவில் 8 செ.மீ., ஜி.பஜாரில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
குமரி மாவட்டம் பூதப்பாண்டி, பேச்சிப்பாறையில் 6 செ.மீ., தேனி பெரியாறில் 5 செ.மீ., பொள்ளாச்சியில் 4 செ.மீ., குளித்துறை, நாகர்கோவிலில் 3 செ.மீ., தென்காசியில் 2 செ.மீ., ராதாபுரம், ஆயிக்குடி, செங்கோட்டை, ஏற்காடு, குளச்சல் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. #Storm #IndianWeatherCenter
வங்க கடல் பகுதியில் திடீர் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. இதனை எச்சரிக்கையாக அறிவிக்கும் பொருட்டு புதுவை துறைமுகத்தில் தூர புயல் முன்னறிவிப்பு கொடி எண். 1 ஏற்றப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம், புதுவையில் நேரடியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும், கடலோர பகுதிகளில் காற்று சற்று அதிகமாக வீசக்கூடும். கடல் சற்று சீற்றமாக காணப்படும்.
புதுவையில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந் தேதி வரை நீடிப்பதால் கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்