என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புழல் ஜெயில்"
புழல் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் குற்றவாளிகள் என மொத்தம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் முதல் முறையாக குற்றம் செய்து கைது செய்யப்பட்டவர்களும் அடங்குவர்.
இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முதல் முறையாக குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு ‘கவுன்சிலிங்’ வழங்க நீதிபதிகள் முடிவு செய்தனர்.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் தலைமையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டு நீதிபதிகள் புழல் சிறையில் கைதிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
ஒவ்வொரு கைதிகளுக்கும் சுமார் 5 முதல் 10 நிமிடம் வரை கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது சிறையில் இருந்து செல்லும்போது புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தார்கள். இந்த கவுன்சிலிங் 3 மணி நேரம் நடந்தது.
புழல் சிறையில் 150 கைதிகளுக்கு நீதிபதிகள் நேரில் சென்று கவுன்சிலிங் வழங்கியது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #PuzhalJail #Prisoners
புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் உள்ளது. சர்வதேச நகரமான இங்கு பல்வேறு வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். மேலும் தினந்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
இதற்கிடையே ஆரோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆரோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது பெரியமுதலியார் சாவடியில் ஒரு வீட்டில் வெளிநாட்டு மாணவர் ஒருவர் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மாணவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் லிபியா நாட்டை சேர்ந்த ஷபீது (வயது23) என்பதும் இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் எம்.ஏ. படித்து வந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அவர் பெரிய முதலியார் சாவடியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கஞ்சாவை திருவண்ணாமலை மற்றும் பெங்களூரில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து வெளிநாட்டு மாணவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஷபீதுவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் செஞ்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயிலில் அடைத்தனர்.
ஷபீதுவின் பாஸ்போர்ட் காலாவதியான பின்னரும் அவர் தொடர்ந்து பெரியமுதலியார் சாவடியில் தங்கி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இதுபற்றி லிபியா நாட்டு தூதரகத்துக்கு தகவல் அளித்து உள்ளனர். #tamilnews
சென்னை அரும்பாக்கம் 5-வது பிரதான சாலையை சேர்ந்தவர் கார்த்திக் (25). கடந்த 23-ந்தேதி அரும்பாக்கத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் இவரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் நேற்று மாலை கார்த்திக்கை புழல் ஜெயிலில் அடைக்க அழைத்து வந்தனர். ஜெயில் நுழைவாயிலில் இருந்த போலீசார் கார்த்திக்கை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 40 போதை மாத்திரைகளும், 50 கிராம் கஞ்சாவும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போதை மாத்திரை, கஞ்சா ஜெயிலுக்குள் யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #PuzhalJail
புழல் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைதிகளுக்கு செல்போன், கஞ்சா, சொகுசு வாழ்க்கை தாராளமாக கிடைப்பதாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மேலும் கைதிகள் உல்லாச வாழ்க்கை வாழும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் ஜெயிலில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 10-க்கும் மேற்பட்ட டி.வி.க்கள், 80 ரேடியோக்கள், பிரியாணி செய்ய பயன்படுத்தும் அரிசி, மெத்தைகள் உள்ளிட்ட வைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சோதனை முடிந்த பின்னரும் தொடர்ந்து கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நீடித்து வந்தது.
இந்த நிலையில் புழல் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்த போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி இன்று அதிகாலை 5.30 மணி அளவில் புழல் சரக உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஜெயந்தி உள்பட 100 போலீசார் ஜெயிலுக்கு வந்தனர்.
அவர்கள் அதிரடியாக தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது தண்டனை ஜெயில் கழிவறை அருகே மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 2 செல்போன்களை கைப்பற்றினர். விசாரணை கைதிகள் அறையில் இருந்த 2 கஞ்சா பொட்டலங்களும் சிக்கியது.
செல்போன், கஞ்சா எப்படி கைதிகளுக்கு கிடைக்கிறது. இதில் ஜெயில் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக புழல் போலீசில் புகார் செய்துள்ளனர்.
புழல் ஜெயிலில் 100 போலீசார் அதிரடியாக சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புழல் ஜெயிலில் விசாரணை கைதிகள் அறையில் 2ஆயிரத்து 600 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 154 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைதிகளிடையே மோதலை தடுக்கவும், இட நெருக்கடியை போக்கவும் 154 குண்டர் சட்ட கைதிகள் 2-வது பிளாக்கில் உள்ள தண்டனை கைதிகள் அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். #PuzhalJail
ஊத்துக்கோட்டை:
ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக சிலர் தடைசெய்யப்பட்ட குட்கா பெருட்களை கடத்து வதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசனுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் நகர எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வடநாட்டு வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார். அவரை நிறுத்தி சீட்டின் பின்புறம் இருந்த மூட்டையில் சோதனை செய்தபோது ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா இருந்தது. மோட்டார் சைக்கிளுடன் குட்காவை பறிமுதல் செய்தனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சர்தாராம் (வயது 22) என்று தெரியவந்தது.
ஊத்துக்கோட்டை நேரு பஜாரில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆந்திராவிருந்து கடத்தி வரப்படும் குட்கா பொருட்களை சேமித்து வைத்து சென்னை கொண்டு சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
கொடுங்கையூரில் ராஜ ரத்தினம் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். எழில்நகரை சேர்ந்தவர் இம்மானுவேல்.
இவர்கள் 2 பேரும் கொடுங்கையூர் பகுதியில் வழிப்பறி, அடிதடி செய்து வந்தனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
ஏற்கனவே இவர்கள் பல முறை கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். வெளியே வந்த இவர்கள் இனிமேல் குற்றம் செய்யமாட்டோம். திருந்தி வாழ்வோம் என்று எழுதி கொடுத்தனர்.
ஆனால், சமீப காலமாக மீண்டும் ரவுடித்தனத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் துணை கமிஷனர் சாய் சரண், 2 ரவுடிகளையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, ரவுடிகள் மணிகண்டன், இம்மானுவேல் ஆகியோரை கைது செய்தார். பின்னர் குற்றநடைமுறை சட்டப்படி மணிகண்டன் 56 நாட்களும், இம்மானுவேல் 156 நாட்களும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #PuzhalJail
திருவள்ளூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் செல்வகுமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சேலம் வந்தபோது அவரை கொல்ல முயன்ற வழக்கும் போலீஸ் பக்ருதீன் மீது உள்ளது. புழல் ஜெயிலில் தனி அறையில் போலீஸ் பக்ருதீன் அடைக்கப்பட்டுள்ளார். புழல் ஜெயிலில் போலீஸ் பக்ருதீன் அறையில் இருந்த டி.வி., ரேடியோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சிறைத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை என்ற பெயரில் தன்னை அச்சுறுத்துவதாகவும் புகார் கூறி வந்தார். இதை கண்டித்து போலீஸ் பக்ருதீன் நேற்று மதியம் முதல் புழல் ஜெயிலில் திடீரென்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 2-வது நாளாக அவரது உண்ணாவிரத போராட்டம் நீடித்தது.
புழல் ஜெயிலில் கைதிகள் சிலர் ஆடம்பரமாக இருக்கும் படங்கள் சமீபத்தில் வெளியாகின.
இதையடுத்து அங்கு நடந்த சோதனையில், நவீன செல்போன்கள், டி.வி.க்கள், ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவுகள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இங்குள்ள கைதிகளுக்கு சர்வதேச கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து சில போலீசார் புழல் ஜெயிலில் இருந்து மாற்றப்பட்டனர். சோதனை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் புழல் ஜெயிலில் டி.ஐ.ஜி. முருகேசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். திடீரென சோதனை நடந்தது.
அப்போது ஆயுள் தண்டனை கைதிகள் முருகன், சந்திரன் ஆகியோரிடம் போலீசார் சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் செல்போன்கள் இருப்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், அதற்கான சிம்கார்டு, பேட்டரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்கு பதிவு செய்தார்.
ஆயுள் தண்டனை கைதிகளுக்கு செல்போன் கிடைத்தது எப்படி? அதை கொடுப்பது யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #PuzhalJail
திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் சாலமோன். இந்திய மக்கள் முன்னணி மாநில அமைப்பாளராக உள்ளார். ஒரு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த அவரை கடந்த மாதம் போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் சாலமோன் இன்று காலை முதல் சாப்பிட மறுத்தி திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது வழக்கு போடுவதற்கு எதிர்ப்புதெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறி உள்ளார். அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். #tamilnews
இதில் பாலாஜி உள்ளாடையில் மறைத்து வைத்து கஞ்சா கடத்தி வந்ததும், அதனை சிறையில் உள்ள கைதிக்கு கொடுக்க இருந்ததும் தெரியவந்தது.
இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். விசாரணையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஏஜெண்டாக செயல்பட்ட அருண் செல்வராஜ் என்பவரிடம் ரூ.2 ஆயிரம் வாங்கிக் கொண்டு காவலர் பாலாஜி கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.
இதற்கிடையே சிறைக் காவலர் பாலாஜியை ‘சஸ்பெண்டு’ செய்து ஜெயில் சூப்பிரண்டு செந்தாமரைக் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். பாலாஜியின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆகும்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக பல்வேறு அமைப்புகள் சார்பில் நிதி திரட்டப்பட்டது. இதனை உளவுப்பிரிவு போலீஸ்காரர் ஸ்டாலின் என்பவர் தனது செல்போனில் படம் பிடித்ததால் தகராறு ஏற்பட் டது.
இது தொடர்பாக மாணவர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் போலீஸ்காரர் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 25-ந் தேதி முதல் வளர்மதி ஜெயிலில் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல் நலம் தேறியதும் அவரை மீண்டும் ஜெயிலுக்கு அழைத்து வந்தனர்.
இன்று வளர்மதி 4-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். அவரிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:
சென்னை மைலாப்பூரை சேர்ந்தவர் மைதிலி (38). 2017-ம் ஆண்டு நடந்த வரதட்சணை கொடுமை சாவு தொடர்பாக மைதிலி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் இவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து புழலில் உள்ள பெண்களுக்கான சிறையில் மைதிலி அடைக்கப்பட்டார். அங்குள்ள மற்ற பெண் கைதிகளுடன் இருந்து வந்தார்.
இந்தநிலையில் மைதிலி ஜெயிலில் உள்ள அரளி விதையை அரைத்து தின்றார். இதனால் மயங்கி விழுந்த அவரை ஜெயில் சூப்பிரண்டு அல்லிராணி ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.
இந்த தற்கொலை முயற்ச்சிக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்