search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோலிய பொருட்கள்"

    பெட்ரோலிய பொருட்களை விற்க எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற்று, பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் விற்க மத்திய அரசே முன்வர வேண்டும் என ஜிகே வாசன் கூறியுள்ளா.#GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-

    இந்தியாவில் எண்ணை நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களின் விலையில் மாற்றம் என்ற பெயரில் அதன் விலையை உயர்த்து வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயரும் போது பெட்ரோலிய பொருட்களின் விலையை உடனடியாக உயர்த்த எண்ணை நிறுவனங்கள் முன்வருகின்றன. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறையும் போது அதற்கேற்ப நம் நாட்டில் எண்ணை நிறுவனங்கள் விலையை குறைக்க முன்வருவதில்லை.



    பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் காய்கறிகள் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயருகிறது. பொது மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான செலவும் கூடுகிறது. மொத்தத்தில் விலைவாசி படிப்படியாக உயர்ந்து ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு பொருளாதார சுமை அதிகமாகி பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    பெட்ரோலிய பொருட்களை விற்க எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற்று, பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் விற்க மத்திய அரசே முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#GKVasan
    ×