search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கைதிக்கு ஆண் குழந்தை பிறந்தது"

    வேலூர் ஜெயிலில் அடைக்கபட்டுள்ள பெண் கைதி முத்துலட்சுமிக்கு இன்று ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

    வேலூர்:

    ஜெயிலில் குழந்தையுடன் அடைக்கபட உள்ள பரிதாப நிலைக்கு தள்ளபட்ட முத்துலட்சுமி மாமனாருடன் உல்லாசமாக இருப்பதில் இடையூராக இருந்ததாக நினைத்து அவரது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 6 வயது சிறுமி கொலையில் தண்டனை பெற்றுள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை அடுத்த ஜடையன்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிகவுண்டர் (வயது 66). இவரது மகன் கோபாலகிருஷ்ணன்(35). லாரி டிரைவர். இவரது முதல் மனைவி தீபா. கடந்த 2011-ம் ஆண்டு இறந்துவிட்டார்.

    இவர்களுக்கு 6 வயதில் மகள் இருந்தார். இந்த நிலையில் கோபாலகிருஷ்ணனுக்கும், முத்துலட்சுமிக்கும் இரண்டாவதாக திருமணம் நடந்தது. கோபாலகிருஷ்ணன் லாரி டிரைவராக வேலை செய்து வந்ததால், அடிக்கடி வெளியூர் சென்றுவிட்டு, மாதத்திற்கு ஒருமுறை மட்டும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

    இதனிடையே பழனிகவுண்டருக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு, இருவரும் வீட்டிலேயே உல்லாசமாக இருந்துள்ளனர்.

    அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பழனிகவுண்டர், முத்துலட்சுமி இருவரும் உல்லாசமாக இருந்த போது, கோபாலகிருஷ்ணனின் முதல் மனைவியின் 6 வயது மகளால் தங்கள் சந்தோசத்திற்கு இடையூறு ஏற்படும் என்று முத்துலட்சுமி கூறினார்.

    இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது 6 வயது பேத்தியை தூக்கி சென்று அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் வைத்து பழனிகவுண்டர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதில் கதறி மயங்கிய நிலையில் இருந்த அந்த சிறுமியை, முத்துலட்சுமி துணியால் சுற்றி கொடுக்க, அந்த சிறுமியை பழனிகவுண்டர் தூக்கி சென்று அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் வீசி கொலை செய்தார்.

    இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து, பழனிகவுண்டர் மற்றும் அவரது மருமகள் முத்துலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் கடந்த 10-ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதில் பேத்தி என்றும் பாராமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக பழனி கவுண்டருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அபராதமாக ரூ. 5 ஆயிரமும், உடந்தையாக இருந்த முத்துலட்சுமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. இரண்டாயிரத்து 500 அபராதமும் விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

    அப்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்தது.

    ×