என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பெண்கள் எதிர்ப்பு
நீங்கள் தேடியது "பெண்கள் எதிர்ப்பு"
திருவண்ணாமலையில் பெண்கள் எதிர்ப்பால் மீண்டும் திறக்கப்பட இருந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் மூடினர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தேனிமலையில் அரசு பஸ் டெப்போ அருகே டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வந்தது.
இதனால் அந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.
பொதுமக்கள் போராட்டத்தையடுத்து அந்த டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் அந்த டாஸ்மாக் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக டாஸ்மாக் நேற்று அதிகாரிகள் வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதிபெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை. டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
பெண்களின் கடும் எதிர்ப்பை சமாளிக்க முடியாத அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர். இதனையடுத்து புதியதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டது.

×

X