என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பெற்றோர் கைது
நீங்கள் தேடியது "பெற்றோர் கைது"
திருச்சி அருகே கடுமையான உடற்பயிற்சியை செய்யாததால் தென்னை மட்டையால் அடித்து சித்ரவதை செய்து சிறுமியை கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். (வயது 39). இவரது மனைவி நித்தியகமலா (35). முத்துப்பாண்டியன் உடற்கல்வி ஆசிரியர் ஆவார். நித்திய கமலா ஆசிரியை படிப்பு முடித்துள்ளார்.
நித்தியகமலா மகள் லத்திகாஸ்ரீ (5). இந்நிலையில் நேற்று வீட்டில் படிக்காமல் டி.வி. பார்த்து கொண்டிருந்ததால் லத்திகாஸ்ரீயை அவரது பெற்றோர் குக்கர் மூடியால் கண் மூடித்தனமாக அடித்ததோடு, அவளை வீட்டின் வெளியே வெயிலில் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்டது.
இதனால் லத்திகாஸ்ரீ மயக்கம் அடைந்து விழுந்தார். இதனால் முதலில் சிறுமியை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் உடல் நிலை மோசம் அடைந்ததால் லத்திகாஸ்ரீயை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு டாக்டர்கள் லத்திகாஸ்ரீயின் முதுகில் நீளமாக பல இடங்களில் கோடு கோடாக ரத்தகாயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது எதனால் ஏற்பட்டது என தாய் நித்திய கமலாவிடம் கேட்டபோது அவர் லத்திகாஸ்ரீ படிக்காமல் டி.வி. பார்த்து கொண்டிருந்ததால் வீட்டிற்கு வெளியே வெயிலில் நிற்க வைத்து அடித்து தண்டனை கொடுத்ததாக கூறியுள்ளார்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சிறுமி லத்திகாஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை நித்தியகமலாவும், முத்து பாண்டியனும் அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டனர். இதற்கிடையே படிக்காமல் டி.வி., பார்த்த மகளை தாயே சரமாரியாக அடித்து வெயிலில் நிற்க வைத்து கொடூரமாக கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோடை விடுமுறையில் பள்ளி இல்லாத நிலையில் மதியம் 12 மணிக்கு படிக்காததால் பெற்ற மகளை தாய் அடித்து வெயிலில் நிற்க வைத்து துன்புறுத்தி கொலை செய்வாரா? இதற்கு வேறு காரணம் உள்ளதா? என காட்டுபுத்தூர் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.
இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஆசிரியை நித்தியகமலாவுக்கு திண்டுக்கல் மாவட்டம் கீழபாடி தாலுகா அழகிரி கவுண்டனூர் என்ற கிராமம் சொந்த ஊராகும். இவருக்கு ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு பிரசன்னா என்பவருடன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு லத்தி ஸ்ரீ பிறந்துள்ளார். மகள் பிறந்தது முதல் பிரசன்னாவுடன் தொடர்ந்து நித்திய கமலாவுக்கு பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நித்தியகமலா பிரசன்னாவை விட்டு பிரிந்து விட்டார். 2016-ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த ஆசிரியர் முத்து பாண்டியனை திருமணம் செய்து கொண்டார்.
இதில் வெயில் தாங்க முடியாமல் லத்திகாஸ்ரீ மயங்கி விழுந்துள்ளார். கடைக்கு சென்று விட்டு திரும்பிய நித்தியகமலா லத்திகாஸ்ரீ மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து கணவர் முத்துப்பாண்டியனிடம் கேட்ட போது , அவர் டிபன் வாங்கி விட்டு வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு அவசரமாக அங்கிருந்து சென்று விட்டார். அதன்பிறகுதான் நித்திய கமலா மகள் லத்திகாஸ்ரீயை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று காப்பாற்ற போராடியுள்ளார். ஆனால் தென்னை மட்டையால் கடுமையாக தாக்கப்பட்டதாலும், வெயிலில் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியதாலும் உடல் நிலை மோசமடைந்து லத்திகாஸ்ரீ பரிதாபமாக இறந்து விட்டாள்.
இதைத்தொடர்ந்து ஆசிரியர் முத்துப்பாண்டியனை போலீசார் வலைவீசி தேடினர். நேற்றிரவு சேலத்தில் பதுங்கி இருந்த போது காட்டுப்புத்தூர் போலீசில் முத்துப்பாண்டியன் சிக்கினார். முத்துப் பாண்டியன் , நித்திய கமலா ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில்தான் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் நேதாஜி நகருக்கு 2-வது கணவர் முத்துப்பாண்டியன், மகள் லத்திகாஸ்ரீ ஆகியோருடன் நித்தியகமலா குடி வந்துள்ளார். உடற்கல்வி ஆசிரியரான முத்துப் பாண்டியன் லத்திகாஸ்ரீயை அடிக்கடி கடுமையான உடற்பயிற்சியை செய்யக்கூறி கொடுமைப்படுத்துவாராம். நேற்று மதியம் 12 மணிக்கு நித்தியகமலா ஆசிரியை வேலை விஷயமாக பயோடேட்டா தயார் செய்வதற்காக ஜெராக்ஸ் கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் முத்துப்பாண்டியனும் லத்திகாஸ்ரீயும் இருந்துள்ளனர். லத்திகாஸ்ரீயை முத்துப்பாண்டியன் சில கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய கூறியுள்ளார். லத்திகாஸ்ரீ செய்யாததால் அவரை தென்னை மட்டையால் முதுகில் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் வெயிலிலும் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
இது குறித்து கணவர் முத்துப்பாண்டியனிடம் கேட்ட போது , அவர் டிபன் வாங்கி விட்டு வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு அவசரமாக அங்கிருந்து சென்று விட்டார். அதன்பிறகுதான் நித்திய கமலா மகள் லத்திகாஸ்ரீயை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று காப்பாற்ற போராடியுள்ளார். ஆனால் தென்னை மட்டையால் கடுமையாக தாக்கப்பட்டதாலும், வெயிலில் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியதாலும் உடல் நிலை மோசமடைந்து லத்திகாஸ்ரீ பரிதாபமாக இறந்து விட்டாள்.
இதைத்தொடர்ந்து ஆசிரியர் முத்துப்பாண்டியனை போலீசார் வலைவீசி தேடினர். நேற்றிரவு சேலத்தில் பதுங்கி இருந்த போது காட்டுப்புத்தூர் போலீசில் முத்துப்பாண்டியன் சிக்கினார். முத்துப் பாண்டியன் , நித்திய கமலா ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் காதலனுடன் ஓடியதால் பெற்ற மகள் என்றும் பாராமல் கவுரவ கொலை செய்த பெற்றோரை போலீசார் கைது செய்தனர். #Honourkilling
பாட்னா:
பீகார் மாநிலம் கயா மாவட்டம் பட்வா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த வாரம் திடீர் என்று காணாமல் போய்விட்டார்.
நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்த நிலையில் சிறுமி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது உடலை போலீசார் மீட்டனர். தலையை தேடியபோது அருகில் சற்று தொலைவில் வயலில் கிடந்ததை கண்டுபிடித்தனர். கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
அதற்காக பெற்றோர் மற்றும் சிறுமியின் அக்காள், தங்கைகளை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் யாரும் விசாரணைக்கு வரவில்லை. இதனால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில் இது கவுரவ கொலை என தெரியவந்தது. சிறுமி காதலனுடன் ஓட்டம் பிடித்து 3 நாட்களுக்கு பின் திரும்பியதால் ஆத்திரம் அடைந்த பெற்றோரே கவுரவ கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். #Honourkilling
பீகார் மாநிலம் கயா மாவட்டம் பட்வா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த வாரம் திடீர் என்று காணாமல் போய்விட்டார்.
நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்த நிலையில் சிறுமி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது உடலை போலீசார் மீட்டனர். தலையை தேடியபோது அருகில் சற்று தொலைவில் வயலில் கிடந்ததை கண்டுபிடித்தனர். கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
முதலில் இது கற்பழிப்பில் நடந்த கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் கற்பழிப்பு நடக்கவில்லை என்று தெரியவந்ததால் கொலைக்கு வேறு காரணம் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். #Honourkilling
×

X