என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பேராசிரியர் கைது"
கோவை:
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சரவணகுமார்(வயது 32). கல்லூரி பேராசிரியர்.
இவர் சமீப காலமாக கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரியில் வேலை பார்த்து வருவதாக நண்பர்களிடம் கூறி உள்ளார்.
மேலும் கல்லூரியில் லேப் டெக்னீசியன், அலுவலக ஊழியர் பணியிடங்களில் வேலை வாங்கி தருகிறேன் என கூறி தன்னிடம் படித்த மதுரை, தேனி, கம்பம், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி உள்ளார்.
இதற்காக கல்லூரி லோகோவை பயன்படுத்தி மாணவர்களுக்கு வேலை நியமன ஆணையை வழங்கி உள்ளார். கல்லூரி தாளாளர் அனுமதியுடன் இந்த உத்தரவு வழங்கப்படுவதாகவும், கடந்த 11-ந்தேதி முதல் பணியில் சேர வேண்டும் எனவும் மாணவர்களுக்கு இ-மெயில் அனுப்பினார். இதில் ஒரு மாணவர் தனது நியமன உத்தரவு குறித்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரித்தார்.
அப்போது கல்லூரியில் வேலைக்கு யாரையும் தேர்வு செய்ய வில்லை என கூறினர். அதிர்ச்சியடைந்த அவர் கல்லூரி நிர்வாகத்தில் இருந்து தனக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நியமன ஆணையை அனுப்பினார். அவை போலியானவை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் நடத்திய விசாரணையில் சரவண குமார் இதேபோல மேலும் சிலரிடம், கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாக அலுவலர்கிருஷ்ண மூர்த்தி என்பவர் குனியமுத்தூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சரவணகுமார் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விசாரணையில் முதுகலையில் பல்வேறு பட்டப் படிப்புகள் படித்துள்ள இவர் மதுரை, கொடைக்கானலில் உள்ள கல்லூரிகளில் பேராசிரியராக வேலை பார்த்ததும், பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதும் தெரிய வந்தது.
இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இவரை பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு இடையே விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் சரவணகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் பேராசிரியர் நேர்காணலுக்கு வந்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த சரவணகுமார் வழக்கு கல்லூரியின் லோகோவை பயன்படுத்தி பணம் பறிக்க திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார்.
மோசடியின் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்