search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    பாராளுமன்றத்துக்கு 4-வது கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. முதல் 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்று நான்காம் கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

    பீகார் 5, ஜார்கண்ட் 3, மத்திய பிரதேசம் 6, மராட்டியம் 17, ஒடிசா 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் தலா 13, மேற்கு வங்காளம் 8, காஷ்மீர் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்) இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
    பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபைக்கு 42 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 

    இந்த தொகுதிகளில் மாநில போலீஸ் படையினரும், மத்திய துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



    காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. இன்று ஓட்டுப்பதிவு நடக்கிற 72 தொகுதிகளில் 45 தொகுதிகளை பாரதீய ஜனதா கட்சி கடந்த 2014 தேர்தலில் கைப்பற்றி இருந்தது. இதைத் தக்க வைத்தாக வேண்டிய நெருக்கடி, அந்த கட்சிக்கு உள்ளது.

    பீகார், ஜார்கண்ட், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய ஏழு மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கு 5-வது கட்ட தேர்தல் வருகிற மே மாதம் 6-ந் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019

    பாராளுமன்ற தேர்தலில் 3-வது கட்டமாக 13 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும், 18-ம் தேதி 13 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

    இந்த நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

    கேரளா (20), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1) மாநிலங்களிலும் தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.



    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

    ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    அதேபோல் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜசேகரன் ஆகிய முக்கிய தலைவர்களும் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர். #LokSabhaElections2019 

    பாராளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று தொடங்கியது. #LokSabhaElections2019 #ParliamentElections
    முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

    தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    அதேபோல், கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேசம் 8, பீகார் 5, அசாம் 5, ஒடிசா 5, சத்தீஸ்கர் 3, காஷ்மீர் 2, மணிப்பூர் 1 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 



    சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது வாக்கை பதிவு செய்தார்.

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், பதிவாகும் வாக்குகள், வருகிற மே 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். #LokSabhaElections2019 #ParliamentElections

    பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தை வெயிலில் நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. #ElectionCommission #Parliamentelection #LSPolls

    சென்னை:

    தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ல் நடைபெற இருப்பதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்.

    தற்போது நிலவி வரும் கடுமையான கோடை வெயில் நேரத்தில் பிற்பகலிலும் பகல் நேரத்திலும் பொதுக் கூட்டங்கள் நடைபெறுவதால் தங்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாக சில அமைப்புகளிடம் இருந்தும் குடிமக்கள் குழுக்களிடம் இருந்தும் முறையீடுகள் வந்துள்ளன.

    மேலும் இதுபோன்ற கூட்டங்களில் வெப்பம் தாங்காமல் சிலர் உயிரிழந்திருப்பதும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் கோடை காலத்தில் வெயில் நேரத்தில் பொதுக்கூட்டங்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் நிழல் தரும் கூரை, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை செய்யப்பட வேண்டும்.

    பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் முதலுதவி வசதிகளை செய்து கொடுத்தால் தான் கடினமான சூழ்நிலைகள் ஏற்படும் போது யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க முடியும். எனவே மேற்கண்ட ஆலோசனைகளை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், ஏஜெண்ட்கள் அனைவரும் பின்பற்றி பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectionCommission #Parliamentelection #LSPolls

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தது பற்றி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Rajinikanth #LSPolls
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தது பற்றி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    தமிழிசை சவுந்தரராஜன்

    பாராளுமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை நேர்மறையான கருத்தாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

    அஜித், ரஜினி அறிக்கை வெளியிட்டால் உடனே பா.ஜனதாவுக்கு எதிரானது என்று ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள். ரஜினியின் அறிவிப்பு பாரதிய ஜனதாவுக்கு எதிரானது கிடையாது.

    மத்தியில் வலுவான ஆட்சி செய்வது, தண்ணீர் பிரச்சனையை தீர்த்தது யார்? என மக்களுக்கு தெரியும்.

    எனவே பாராளுமன்ற தேர்தலில் ரஜினியின் நிலைப்பாடு சரியான முடிவுதான்.

    திருமாவளவன்


    ரஜினியின் அறிவிப்பு பாராளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி அறிவித்து இருப்பது அவரது தனித்தன்மையை குறிக்கிறது.

    கே.பாலகிருஷ்ணன்

    பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி தெரிவித்திருப்பது அரசியல் செயல்பாடாக இல்லை. ரஜினி போன்றவர்கள் நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. மத்தியில் நல்லாட்சி வந்தால்தான் தண்ணீர் பிரச்சனை தீரும். அதற்கு எங்கள் கூட்டணி மூலம்தான் தீர்வு கிடைக்கும்.

    நல்லவர்களுக்கு ஆதரவு இல்லை என்றால் எதிரானவர்களுக்கு ஆதரவா? என புரிந்து கொள்ளப்படும். மத்தியில் நல்லாட்சி அமைந்தால்தான் மாநில அரசியலிலும் மாற்றம் கொண்டு வர முடியும்.

    வைகைச் செல்வன் (அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்)

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்பதன் மூலம் ரஜினியின் அரசியல் பயணம் நீர்த்து போய் விட்டது. 1996 முதல் ஒவ்வொரு முறையும் அரசியலில் நுழைவேன் என்று கூறுவதை இந்த அறிவிப்பு மூலம் நீர்த்து போக செய்து விட்டார்.

    கே.பி. முனுசாமி (அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்)

    ரஜினி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்ற தேர்தல்தான் எனது இலக்கு என்று கூறி இருப்பது அவரது முடிவு. ஆனால் அவர் முதலில் மக்களை சந்திக்கட்டும். பிறகு தேர்தலை சந்திக்கலாம்.

    அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

    ரஜினி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறுவது அ.தி.மு.க.வுக்கு ஆதரவு என தெரிகிறது.

    பட்டிதொட்டி எங்கும் தடையில்லா தண்ணீர் கிடைக்க அ.தி.மு.க. அரசு தான் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.#Rajinikanth #LSPolls
    பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக முக ஸ்டாலின் உருவெடுப்பார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். #Vaiko
    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் அருகே சத்திரப்பட்டியில் மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழா இன்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் அனைத்து மக்களுக்கு சொந்தமானது. இன்று பிரதமராக இருக்கும் நரேந்திரமோடி நான் குஜராத்தில் ஒற்றுமை கூட்டத்தில் பேசியபோது எனது பேச்சை குஜராத்தியில் மொழி பெயர்த்தவர். கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று மோடி பிரதமராக பதவியேற்றார். அப்போது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

    லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேக்கு அழைப்பு விடுத்ததால் மோடிக்கு எதிராக அன்று கருப்புகொடி காட்டினோம். இன்று அவரது ஆட்சி முடியும் சமயத்திலும் மதுரையில் கருப்புக்கொடி காட்ட உள்ளோம்.

    பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றும். பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக முக ஸ்டாலின் உருவெடுப்பார். தமிழகத்தில் தேனி மாவட்டத்தை அழிக்க நியூட்ரினோ திட்டமும், டெல்டா மாவட்டத்தின் நீர்ஆதாரத்தை பாதிக்க ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விரைவில் இது முடிவுக்கு வரும்.

    இவர் அவர் கூறினார்.
    சாமானிய மக்கள், பாஜக அரசு மீது நம்பிக்கை வைத்திருப்பதால் வரும் பொதுத் தேர்தலில் அரசுக்கு எந்த சவாலும் இல்லை என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். #Rajnath #LSPolls
    கிரேட்டர் நொய்டா:

    கிரேட்டர் நொய்டாவில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில், கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டுவதற்கு, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று அடிக்கல் நாட்டினார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, வரும் தேர்தல் பாஜக அரசுக்கு பெரிய சவாலாக இருக்குமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், அரசுக்கு எந்த சவாலும் இல்லை என கூறினார்.

    பின்னர் கொல்கத்தாவில் மம்தா தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் வலிமையை காட்டியது குறித்த கேள்விக்கு பதிலளித்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:-


    பாஜகவின் வெற்றியைப் பார்த்து பயந்துபோனதால், அனைவரும் ஒன்றுசேர்ந்துள்ளனர். பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. ஆனால் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி. மோடி தலைமையில் நாங்கள் வலுவான பிரபலமான தலைமையை பெற்றிருக்கிறோம். சாமானிய மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

    4.5 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எனவே, வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த சூழ்நிலை உங்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajnath #LSPolls
    ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்றது.  கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக அமீர் கலந்துகொண்டார்.



    இக்கூட்டத்திற்கு பின்னர் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம். தமிழகத்தின் மரபணுவை மாற்ற துடிக்கும் எந்த கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளனர்.

    40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு மகேந்திரனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரச்னைகளை முன்வைத்து தேர்தலின்போது பிரச்சாரம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா பேசுகையில், மக்களவை தேர்தலில் டெல்லியின் ஏழு இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். #AmitShah
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பூர்வாஞ்சல் மகாகும்ப் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வரும் மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். 



    சுதந்திரத்துக்குப் பின்னர் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி பூர்வாஞ்சல் மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது
    .
    இதேபோல், டெல்லியில் வசிக்கும் மக்கள் சந்தோஷமாக உள்ளார்களா என்பதை முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிந்து வைத்துள்ளாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மெகா கூட்டணி வைக்கும் எதிர்க்கட்சிகளுக்கு நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது மட்டுமே இலக்காக கொண்டுள்ளது. ஆனால், மோடியின் கொள்கைகள் நாட்டில் இருந்து வறுமை, பசிப்பிணி மற்றும் பாதுகாப்பின்மையை நீக்கியுள்ளது என தெரிவித்துள்ளார். #AmitShah
    நாடு முழுவதும் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுவதால் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று ப.சிதம்பரம் கூறினார். #Congress #PChidambaram #Modi BJP
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மந்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போது மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் பல்வேறு திட்டங்களால் ஏழை-எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நீட் தேர்வு, சேலம் 8 வழிச்சாலை, மீத்தேன் எரிவாயு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது.


    தமிழகம் உள்பட நாடு முழுவதும் மோடிக்கு கடும் எதிர்ப்பு அலை வீசி வருகிறது. இதனால் வருகிற 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Congress #PChidambaram #Modi BJP
    ×