search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்"

    நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தங்கினார். கூட்டத்தில் குடும்ப அட்டை, மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 264 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

    கூட்டத்தில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அக்கால் கிராமத்தை சேர்ந்த ஆனந்தபிரபு, கூடலூர் காசிம் வயல் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கலெக் டரின் விருப்புரிமை நிதியிலிருந்து பெட்டிக்கடை வைக்க தலா ஒரு பயனாளிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் ஆக மொத்தம் ரூ. 40 ஆயிரத்திற்கான காசோலையினையும், பந்தலூர் வட்டம் நெல்லியாளம் பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரின் மனைவி புஷ்பவள்ளிக்கு மருத்துவ செலவுக்காக மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார்.

    கோவையில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனால் 2017-2018-ம் ஆண்டிற்கான நமது மாவட்டத்தில் கூடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவாலா நடுநிலைப்பள்ளி, குன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட அதிகரட்டி தொடக்க பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பள்ளி வளர்ச்சிக்காக தலா ஒரு பள்ளிக்கு ரூ.1 லட்சம்

    வீதம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலையும், கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதை தலைமை ஆசிரியர்கள் கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்துகள் பெற்றனர்.

    கூட்டத்தில் தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்ட) முருகன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குழந்தைவேலு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×