search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு பாகெர்"

    தங்கப் பதக்கத்துக்கான சுற்றில் பாகெர், ஈரானின் ஜாவத் பாரோகி ஜோடி, பிரெஞ்சு-ரஷிய ஜோடியை 16-8 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
    ரோக்லா: 

    போலந்து நாட்டின் ரோக்லா நகரில் ஐஎஸ்எஸ்எப் தலைவர் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் 7 பேர் பங்கேற்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிக்கான போட்டியில் இந்தியாவின் மனு பாகெர், ஈரானின் ஜாவத் பாரோகி இணைந்து  தங்கம் வென்று சாதனை படைத்தனர். தங்கப் பதக்கத்துக்கான சுற்றில் இந்த ஜோடி, பிரெஞ்சு-ரஷிய ஜோடியை 16-8 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

    இந்த பிரிவில் மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா-உக்ரைன் வீராங்கனை ஒலேனாவுடன் இணைந்து பங்கேற்றார். இந்த ஜோடி 6வது இடத்தைப் பிடித்தது. சவுரப் சவுத்ரி-ஹெய்டி ஜோடி 7வது இடத்தை பிடித்தது. யாஷாஸ்வினி தேஸ்வால் ஜோடி 10வது இடத்திற்கு பின்தங்கியது.
    ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் 16 வயதான மனு பாகெர் 593 புள்ளிகள் பெற்று இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார். #ManuBhaker #AsianGames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது.

    4-ம் நாளான இன்று காலை பெண்களுக்கான 25 மீட்டர் பிரிவில் தகுதி சுற்று நடந்தது. இதில் இந்திய வீராங்கனைகள் மனுபாகெர், ரகி சர்னோபட் பங்கேற்றனர். 16 வயதான மனு பாகெர் 593 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார். இதேபோல் ரகி சர்னோபட் 580 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் இறுதிப் போட்டி இன்று மாலை நடக்கிறது.

    பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (நிலை 3) பிரிவில் இந்திய வீராங்கனைகள் அனுஜூம் (1159 புள்ளி) 9-வது இடமும், காயத்ரி நித்யானந்தம் (1148 புள்ளி) 17-வது இடமும பெற்று இறுதி சுற்று வாய்ப்பை இழந்தனர். #ManuBhaker #AsianGames2018
    ×