என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மர்மநபர் நுழைந்ததாக புகார்
நீங்கள் தேடியது "மர்மநபர் நுழைந்ததாக புகார்"
மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் அனுமதியின்றி மர்ம நபர் நுழைந்தது தொடர்பான புகார் குறித்த உரிய விசாரணை நடத்தப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். #MaduraiConstituency
மதுரை:
மதுரையில் கடந்த 18ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் சீலிட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, மதுரை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்துச்சென்று நகல் எடுத்ததாக புகார் நேற்று இரவு புகார் எழுந்தது.
இதையடுத்து அங்கு குவிந்த அரசியல் கட்சியினர், கலெக்டர் வந்து விளக்கம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் அங்கு வந்து ஆய்வு செய்தார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிசிடிவி மற்றும் காவல் துறையின் பாதுகாப்பில் மின்ணணு இயந்திரங்கள் பத்திரமாக உள்ளது. மின்ணணு வாக்குப்பதிவு அறைகள் அனைத்தும் முழு பாதுகாப்பில் உள்ளன. வேட்பாளர்கள் பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து முழு திருப்தி தெரிவித்துள்ளனர். உரிய விசாரணை நடத்தப்பட்டு அனுமதியின்றி உள்ளே சென்றவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். #MaduraiConstituency
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் அனுமதியின்றி மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #MaduraiConstituency
மதுரை:
மதுரையில் கடந்த 18ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் சீலிட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மதுரை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்துச்சென்று நகல் எடுத்ததாக புகார் இன்று இரவு புகார் எழுந்தது.
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அங்கு வந்தனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியர் நடராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மர்ம நபர் நகல் எடுத்ததாக தகவல் பரவியதும் தி.மு.க.-வினர் மற்றும் அ.ம.மு.க-வினர் குவிந்தனர். தொடர்ந்து அறையின் சிசிடிவி காட்சிகளை காண்பிக்கவும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வலியுறுத்தியும் அரசியல் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #MaduraiConstituency
×

X