என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாசு கட்டுப்பாட்டு வாரியம்"
தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அளவை கணக்கிட ஒவ்வொரு ஆண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கருவிகள் அமைத்து கணக்கெடுப்பது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டும் திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, தி.நகர், நுங்கம்பாக்கம், மணலி, வேளச்சேரி, ஆலந்தூர் ஆகிய இடங்களில் காற்று மாசு கணக்கிடப்பட்டது.
தீபாவளிக்கு முன்னும் பின்னும் கணக்கிட்டதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்றில் மாசு பாதியாக குறைந்திருந்தது கண்டறியப்பட்டது.
தீபாவளி தினமான 6-ந்தேதி இரவு மட்டும் காற்றில் மாசு சிறிது அதிகரித்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
தீபாவளியன்று காற்றில் மாசு அளவு மணிலியில் 168 புள்ளிகளாக இருந்தது. வேளச்சேரியில் 94 புள்ளியும், ஆலந்தூரில் 129 புள்ளிகளாகவும் பதிவாகி இருந்தது. #Diwali #AirPollutioncontrolboard
மதுரை:
நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு, மாசுக்கட்டுப் பாட்டு வாரியத் தலைவராக பணியாற்றி வந்த அதிகாரி நசிமுதீன், அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
நசிமுதீனுக்கு பதிலாக சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள மூத்த. ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷம்பு கல்லோலிகரும் சிறந்த அதிகாரி ஆவார்.
ஆனாலும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நசிமுதீனுக்கு இருக்கும் புரிதலும், அனுபவமும் புதிய அதிகாரி ஷம்பு கல்லோலிகருக்கு இருக்க வாய்ப்பில்லை.
அடுத்த. சில நாட்களில் தேசியப் பசுமைத் தீர்ப்பாய குழுவின் விசாரணை தொடங்கவுள்ள நிலையில், அதற்குள்ளாக ஸ்டெர்லைட் குறித்த அனைத்து பின்னணி தகவல்களையும் அறிந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்வது சாத்தியமற்றதாகும். இது ஸ்டெர்லைட் விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.
எனவே, கடந்த 23-ந் தேதி தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய தலைவராக இருந்த நசிமுதீனை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி விதிகளை உருவாக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ் என்.சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஹென்றி திபேன் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து ஆராயும் குழுவில் மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் நசிமுதீன் உள்ளார்.
அவருக்கு தான் ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமான அனைத்து விபரங்களும் தெரிந்து இருக்கும். அவரது பணியிட மாறுதல் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவது போல் உள்ளது.
அதை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் சம்பந்தமான விசாரணையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பழைய அதிகாரி நதிமுதீனும், புதிய அதிகாரியாக பொறுப்பேற்க உள்ள ஷம்பு கல்லோலிக்கரும் இணைந்து ஒத்துழைக்க முடியுமா என தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 3-ந் தேதிக்கு தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் காவிரி கரையில் உள்ள சில நகரங்கள் மற்றும் அந்த மாநிலத்தை சேர்ந்த தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் அதிக அளவில் கலக்கின்றன. குறிப்பாக பெங்களூர் மாநகரத்தின் 80 சதவீத கழிவுகளும், கழிவு நீரும் காவிரியில்தான் கலக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகாவிலிருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.
அபாயகரமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவருகிறது. மேலும் இதனால் காவிரி கரையோரம் வாழ்பவர்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். மாசுபட்ட வகையில் உள்ள ஆற்றுநீரை பயன்படுத்தும் உயிரினங்களுக்கும் பயங்கர கேடுகளை விளைவிக்கிறது.
எனவே, கர்நாடகா மாநிலத்தில் காவிரி கரையில் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் பல்வகையான கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலக்கவிடாமல் கழிவுகள் கலந்த தண்ணீரை சுத்திகரித்து பிறகு மீண்டும் ஆற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும், நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுக்குழு கர்நாடக பகுதியின் நீர்த்தேக்கத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படும் தண்ணீரின் தரத்தை மே மாதம் வரை முறையாக பரிசோதனை செய்து இது தொடர்பாக ஜூலை மாதத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:-
காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் எதுவும் கலப்பது இல்லை. கர்நாடக பகுதியில் ஓடும் நதியில் எங்கும் கழிவு நீர் கலக்கப்படவில்லை. காவிரி நீர் செல்லும் வழியில் கழிவு நீர் கலக்கப்படுகிறது. தென் பெண்ணையாறு, அக்ராவதி ஆகிய காவிரியின் கிளை நதிகள் மாசடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் பிரவேசிக்கின்றன.
கடந்த செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரை நான்கு மாதங்களில் காவிரி (அஜ்ஜிபோர்-கர்நாடகா), தென்பெண்ணையாறு (சொக்கரசனபல்லி- தமிழ்நாடு), அக்ராவதி (சங்கமா-கர்நாடகா) ஆகிய நதிகளில் இருந்து தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் தென்பெண்ணையாறு, காவிரி, அக்கராவதி ஆகிய நதிகளின் தண்ணீர் பெருமளவில் மாசடைகிறது. தண்ணீரின் தரத்தை சீர்படுத்துவதற்கான நடவடிக்கையை இரு மாநிலங்களும் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து இந்த அறிக்கையின் தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #PollutionControlBoard #SupremeCourt #tamilnews
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி மறுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 9.4.2018 அன்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சென்னையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.
ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்தற்கு கூறி உள்ள 5 குறைபாடுகளை நிறைவேற்ற ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஸ்ரீவைகுண்டம் வக்கீல் ராமசுப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவைச் சேர்ந்த பாத்திமாபாபு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி சுதந்திரம் மற்றும் நிபுணர்கள் ஜெயக்குமார், எத்திராஜ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது வைகோ, ராமசுப்பு ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.
ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது அவர்கள், ‘ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் எந்தவித விளக்கமும் கோராமல் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்தது இயற்கை நீதிக்கு புறம்பானது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததற்கு 5 குறைபாடுகளை கூறி உள்ளது. இந்த குறைபாடுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். இதில், ஒரு குறைபாட்டை சரி செய்ய 2019-ம் ஆண்டு வரை காலக்கெடு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் இதுவரை மாசு ஏற்படவில்லை’ என்று வாதாடினர்.
அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த வைகோ, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தமிழக அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை தங்களது முழுமையான வாதத்தை எடுத்து வைத்த பின்பு தனது தரப்பு வாதத்தை எடுத்து வைப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
இதன்பின்பு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(ஜூன்) 6-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். #Thoothukudi #Sterlite #SterliteProtest #BanSterlite #TalkAboutSterlite
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்