search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடுகள் திருட்டு"

    மதகடிப்பட்டு வாரச்சந்தையில் திருடிய மாட்டை விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டு அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது வீட்டில் பசு மாடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது இவரது பசு மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    காலையில் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த பசு மாடுகளை காணாமல் திடுக்கிட்டார். பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து அவர் மதகடிப்பட்டு வாரச்சந்தைக்கு சென்று தேடினார். அங்கு விஜயகுமாரின் 2 பசுமாடுகளையும் ஒருவர் வாங்கி வைத்திருந்தார்.

    உடனே விஜயகுமார் அவரிடம் விசாரித்ததில் 2 பசு மாடுகளையும் ரூ. 40 ஆயிரத்துக்கு வாங்கியதாகவும், 2 பேர் மாடுகளை அவரிடம் விற்றதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து மாட்டை விற்றவர்களிடம் செல்போனில் நைசாக பேசி அவர்களை அங்கு வரவழைத்தார்.

    அவர்களை விஜயகுமாரும் மற்றவர்களும் சேர்ந்து மடக்கி பிடித்தனர். மேலும் கோட்டக்குப்பம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று 2 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர்கள் மரக்காணம் கூனிமேடு பகுதியை சேர்ந்த பாஷாவின் மகன் முகமதுஷாகில் (வயது19), புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த முகமது இலியாஸ் மகன் முகமதுஷாகில் (23)என்பதும் தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.40 ஆ யிரத்தையும் பறிமுதல் செய்து மாடுகளை வாங்கியவரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் 2 பசு மாடுகளையும் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி உரிமையாளர் விஜயகுமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    திருச்செந்தூர் பகுதியில் மாடுகள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 மாடுகளை பறிமுதல் செய்தனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரை சேர்ந்த சின்னத்துரை, பால்சாமி, கீழநாலுமூளைக் கிணறுஆனந்த் உள்ளிட்டவர்கள் வளர்த்து வந்த 9 மாடுகள் திருடுபோனது. இது குறித்து புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.   

    இந்நிலையில் திருச்செந்தூர் சண்முகபுரம் பகுதியில் சிலர் மாடுகளை மினிலாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர்கள் காயல்பட்டிணத்தை சேர்ந்த ஹனிபா (வயது 50), வீரபாண்டியபட்டிணத்தை சேர்ந்த கந்தன்(50), மனக்கரைணை சேர்ந்த காவி (44), முருகேசன் (44) என்பதும், மாடுகளை திருடி சென்றதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் திருச்செந்தூர் பகுதியில் 9 மாடுகளை திருடிசென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 9 மாடுகள், திருட்டுக்கு பயன்படுத்திய மினிலாரி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வைகளை பறிமுதல் செய்தனர்.
    மருவத்தூர் அருகே தோட்டத்தில் கட்டியிருந்த பசுமாடுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே உள்ள கல்பாடியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 65), விவசாய கூலி தொழிலாளி. இவர் தனது தோட்டத்தில் குடில் அமைத்து 2 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல் மாடுகளை கொட்டகையில் கட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளார். இன்று காலை சென்று பார்த்தபோது மாடு களை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். மேலும் அருகில் இருந்த தோட்டத்துக்காரர்களிடமும் விசாரித்துள்ளார்.

    பின்னர் இது குறித்து மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையே மருவத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் பேரளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரண்டுபேர் மாடுகளை அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    அவர்களின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டவே, இருவரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது இருவரும் மாடுகளை திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதற்கிடையே சின்னசாமியும் புகார் அளித்திருந்ததால் அவரின் மாடுகள் என உறுதி செய்யப்பட்டது.

    பின்னர் மாடுகள் இரண்டையும் விவசாயி சின்னசாமியிடம் ஒப்படைத்தனர். மேலும் மாடுகளை நள்ளிரவில் திருடி அழைத்து சென்ற, பெரம்பலூர் புதூரை சேர்ந்த வேல்முருகன், நெடுவாசலை சேர்ந்த சிவராஜ் ஆகியோரை கைது செய்தனர். இருவரையும் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க அவரை அழைத்து சென்றனர். இரு மாடுகளும் தலா 50 ஆயிரம் வீதம், ரூ.ஒரு லட்சம் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. புகார் கொடுத்த சில மணி நேரங்களில் நடவடிக்கை எடுத்து மாடுகளை மீட்டு தந்த கால்துறையினருக்கு விவசாயி சின்னசாமி நன்றியை தெரிவித்தார்.
    ×