என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர்கள்"
- சிறுவர்கள் என்பதால் அறிவுரை வழங்கி அனுப்பியதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
- மாணவனின் பெற்றோரிடம் அவரது நடவடிக்கை குறித்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தி இருந்தனர்.
புதுடெல்லி:
கடந்த 13 மற்றும் 17 தேதிகளில் டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. 13-ந்தேதி மட்டுமே 30 பள்ளிகளுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வந்தன.
டெல்லி ரோகினி பகுதியில் கடந்த வாரம் இ-மெயிலில் 2 பள்ளிகளுக்கு வெடுகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சிறப்பு படை போலீசார் இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணயில் அந்தந்த பள்ளிகளில் படிக்கும் 2 மாணவர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இரு மாணவர்களும் பள்ளித் தேர்வுக்கு படிக்காததால் தேர்வை ஒத்திவைப்பதற்காக இவ்வாறு செய்ததாக கூறினர். சிறுவர்கள் என்பதால் அறிவுரை வழங்கி அனுப்பியதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 14-ந்தேதி இதே போன்று ஒரு தனியார் பள்ளி மாணவன் பள்ளிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அவரது வீட்டிற்குச் சென்று போலீசார் எச்சரித்தனர். மேலும், அந்த மாணவனின் பெற்றோரிடம் அவரது நடவடிக்கை குறித்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தி இருந்தனர்.
- 23-ந்தேதி தேர்வு முடிகிறது
- தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நாளை வரை தேர்வு நடக்கிறது.
சென்னை:
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு 23-ந்தேதியுடன் தேர்வுகள் முடிகிறது. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது.
அனைத்து பள்ளிக் கூடங்களும் ஜனவரி 2-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைக்கிறது.
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) வரை தேர்வு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுகிறவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் இருந்து கேரளா செல்லும் ரெயில்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் எல்லாம் நிரம்பி விட்டன. அரசு, ஆம்னி பஸ்களில் இடங்கள் காலியாக உள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகை வார நாட்களின் நடுவில் வருவதால் கூட்டம் இல்லை. வார இறுதி நாட்களில் வந்திருந்தால் முன்பதிவு அதிகமாக இருக்கும் என்று தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
- சளித்தொற்று காற்று மூலம் பரவுகிறது.
- பருவநிலை மாற்றம் காரணமாக பெரியவர்களுக்கும் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த மாதத்தில் இருந்தே அவ்வப்போது மழை பெய்த படி இருக்கிறது. இதனால் அங்குள்ள மாவட்டங்களில் மழைக்கால நோய்கள் பரவின. காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை ஏராளமானோரை பாதித்தது.
அதிலும் பள்ளி குழந்தைகளை சளித்தொல்லை அதிகளவில் பாதித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் கடந்த 10-ந்தேதி 328பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அது நேற்று 2,870 ஆக அதிகரித்தது. டிசம்பர் மாதம் தொடங்கி பாதி நாட்கள் கூட முடியாத நிலையில் சளி தொல்லைக்கு ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பது சுகாதாரத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போதைய இந்த சளித்தொற்று காற்று மூலம் பரவுகிறது. இதனால் சிகிச்சை பெறவருபவர்களிடம் இருந்து டாக்டர்கள் சிலரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரவும் இந்த தொற்று, பருவநிலை மாற்றம் காரணமாக பெரியவர்களுக்கும் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, வயிற்றுவலி, முதுகுவலி, பசியின்மை, தசை-உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், சாதாரண காய்ச்சல் என்று நினைக்காமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- கொரோனாவில் இறந்து போனவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை வருகிறதா? என்று கேட்டார்.
- சிறுவனின் தாயாரிடம் சிறுவனை கண்டிப்பாக தினமும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பில் இடைநிற்றலான 5 மாணவர்களை கண்டறிந்து மீண்டும் அவர்களை பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் அம்மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஈடுபட்டார்.
இது குறித்து அவர் மேற்கொண்ட கள ஆய்வில் இடைநிற்றலுக்கான காரணங்களை சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் கேட்டு அறிந்தார்.
ஒரு மாணவனின் வீட்டிற்கு சென்ற கலெக்டர் மாணவனிடம் உன் அப்பா என்ன வேலை பார்க்கிறார்.
நீயும் லோடுமேன் வேலைக்கு தான் போகணும். லோடுமேன் வேலை எவ்வளவு கஷ்டம். இதெல்லாம் நீ தூக்கக்கூடாது. புக் மட்டும் தான் தூக்கணும். உதவி வேண்டுமானால் கேட்க வேண்டும் என தெரிவித்தார்
அங்கிருந்த சிறுமியிடமும் தினமும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார் . சிறுமிக்கு உதவித்தொகை வருகிறதா என்றும் தாயாரிடம் கேட்டறிந்தார்.
கொரோனாவில் இறந்து போனவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை வருகிறதா? என்று கேட்டார்.
ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எதுவும் இல்லாததால் விட்டு விட்டதாக என்று சிறுவனின் தாய் கூறினார்.
என்னம்மா நீங்கள்... கொரோனாவில் இறந்தவர்களின் குழந்தைக்கு உதவித்தொகையை முதலமைச்சர் அறிவித்துள்ளாரே என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து சிறுவனின் தாயாரிடம் சிறுவனை கண்டிப்பாக தினமும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும், சிறுவனிடம் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
- அதிக பெண் மாணவர்களைக் கொண்ட கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை அங்கேயே நடத்தி கொள்ளலாம்.
- ஆண் மாணவர்களின் எண்ணிக்கை பெண் மாணவர்களை விட அதிகமாக இருப்பது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த 3 தனியார் கல்லூரிகளில் சுமார் 2000 ஆண் மாணவர்கள் பெண் மாணவர்களாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுபிடித்துள்ளது.
மேஜர் அங்கத் சிங் மகாவித்யாலயா, SBD அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி மற்றும் குல்கண்டி லாலராம் மகாவித்யாலயா ஆகிய மூன்று கல்லூரிகளில் முறைகேடுகள் நடந்ததாக பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்தார்.
இந்த 3 தனியார் கல்லூரிகளில் நவம்பர் 21 அன்று முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை பெண் மாணவர்களை விட அதிகமாக இருப்பதும் சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது. சில தேர்வு அறைகள் முழுவதும் ஆண் மாணவர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
அதிக பெண் மாணவர்களைக் கொண்ட கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளிலேயே செமஸ்டர் தேர்வுகளை நடத்திக்கொள்ள இப்பல்கலைக்கழகம் அனுமதித்துள்ளது. மேலும் செமஸ்டர் தேர்வுகளில் தங்கள் கல்லூரியின் ஊழியர்களையே தேர்வு கண்காணிப்பாளர்களாக கல்லூரி நிர்வாகம் நியமிக்க முடியும்.
ஆகவே, பெண் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி காட்டி, முறைகேடுகளில் ஈடுபட்டு கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த கல்லூரி நிர்வாகிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களை பெற போலியான தூதரக சான்றிதழ்கள் சமர்ப்பித்தது கண்டு பிடிக்கப்பட்டது.
- போலி ஆவணம் சமர்ப்பித்த மாணவர்களுக்கு சம்மன் அளித்து விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் 3 சுயநிதி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில், வெளிநாடு வாழ் இந்தியவர்கள் (என்.ஆர்.ஐ.,) மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீத அடிப்படையில் 116 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு 4 கட்ட கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது.
என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களை பெற போலியான தூதரக சான்றிதழ்கள் சமர்ப்பித்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் 44 மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்கள் ரத்து செய்து, லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் சென்டாக் நிர்வாகம் புகார் அளித்தது. 44 மாணவர்கள் மீதும் போலி ஆவணம் தயாரித்தல், அதனை உண்மை என சமர்ப்பித்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
2-ம் கட்டமாக 6 சான்றிதழ் மற்றும் 25 சான்றிதழ் என 31 மாணவர்களும் போலி தூதரக சான்றிதழ் கொடுத்தது தெரியவந்தது. போலி ஆவணம் சமர்பித்த 31 மாணவர்களின் பட்டியல் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழங்கப்பட்டது.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் 31 மாணவர்களும் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், போலி ஆவணம் சமர்ப்பித்த மாணவர்களுக்கு சம்மன் அளித்து விசாரணைக்கு அழைக்கப்பட் டனர். 20 மாணவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
விசாரணையில் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் ஒரு சில ஏஜென்ட்டுகள் போலி துாதரக சான்றிதழ்கள் கொடுத்து இருப்பது தெரிய வந்தது. அந்த ஏஜென்டுகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- மலை முகடுகளை பனி மூட்டங்கள் சூழ்ந்துள்ளது.
- நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் ஆப் சீசன் தொடங்கிய நிலையில் வடமாநிலங்களில் இருந்து தேனிலவு கொண்டாட ஏராளமான இளம்ஜோடிகள் வந்தனர்.
தற்போது பனி காலத்தின் தொடக்கமாக பல்வேறு பகுதிகளில் மலை முகடுகளை பனி மூட்டங்கள் சூழ்ந்துள்ளது.
அதிகாலை நேரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இந்த காட்சிகளை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளனர்.
நகரில் நுழைவு வாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் கோக்கர்ஸ்வாக், தூண்பாறை, குணாகுகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, ரோஜாபூங்கா, செட்டியார் பூங்கா, பிரைண்ட் பூங்காவிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி பகுதிகளுக்கும் படையெடுத்தனர். அங்கு எலும்பள்ளம் ஏரி, முயல் ஆராய்ச்சி பண்ணை ஆகியவற்றையும் கண்டு ரசித்தனர்.
அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட பட உள்ள நிலையில் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தனியார் விடுதிகளில் பல்வேறு வண்ண அலங்காரங்கள் செய்யும் பணி தொடங்கி உள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல்வேறு வகையான கேக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- பள்ளியினையொட்டி வனப்பகுதி உள்ளது.
- மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டையில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் பள்ளி முடிந்ததும் மாலையில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடுவது வழக்கம்.
நேற்று மாலையும் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வழக்கம் போல பள்ளியில் உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடினர். மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தனர்.
பள்ளியினையொட்டி வனப்பகுதி உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் விளையாடி கொண்டிருந்த நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வந்த ஒற்றை யானை ஒன்று பள்ளி மைதானத்திற்குள் நுழைந்தது.
யானை வேகமாக வருவதை பார்த்ததும், விளையாடி கொண்டிருந்த மாணவர்கள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். பின்னர் வகுப்பறைகளில் சென்று பாதுகாப்பாக இருந்து கொண்டனர்.
சிறிது நேரம் யானை மைதானத்திலேயே வலம் வந்தது. அதன்பின்னர் யானை அங்கிருந்து வெளியேறி வனத்திற்குள் சென்றது. யானை சென்ற பின்னரே மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.
காட்டு யானை மைதானத்திற்குள் நுழைந்ததை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மாணவர்கள் தயாரித்த வெடிகுண்டைஆசிரியரின் நார்காலியின் கீழ் வைத்துள்ளனர்.
- இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஆசிரியர் காயமின்றி உயிர் தப்பினார்.
அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து தங்களது பெண் அறிவியல் ஆசிரியரின் நாற்காலியின் கீழ் பட்டாசு போன்ற வெடிகுண்டை வைத்து வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் மாணவர்களை ஆசிரியர் கண்டித்ததையடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. யூடியூப்பில் உள்ள வீடியோக்களை பார்த்து வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பதை மாணவர்கள் கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் தயாரித்த வெடிகுண்டை ஆசிரியரின் நாற்காலியின் கீழ் வைத்துள்ளனர். ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்தவுடன் வெடிகுண்டை வெடிக்க செய்யும் கருவியை கொண்டு வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஆசிரியர் காயமின்றி உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தை அடுத்து 13 மாணவர்களை அரியானா கல்வித் துறை ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது.
- நேற்று இரவு இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
புதுச்சேரி:
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தொடக்கத்தில் ஒரு சில நாட்கள் கனமழை பெய்தது. அதன்பிறகு மழை பெய்ய வில்லை.
அதேநேரத்தில் தீபாவளியன்று கனமழை பெய்தது. இதன்பிறகு மீண்டும் பெரியளவில் மழை பெய்யவில்லை. வழக்கம் போல் வெயில் அடித்து வந்தது.
இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரி வித்தது. இதனால் தமிழகம், புதுவை, ஆந்திரா கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இதையடுத்து நேற்றைய தினம் புதுவையில் வானிலை முற்றிலுமாக மாறியது. காலை முதலே லேசான குளிர்ந்த காற்றுடன் வானம் மப்பும், மந்தார முமாக இருந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மாலை 4 மணிக்கு லேசான மழை பெய்தது.
இதன்பிறகு இரவு 10 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை விடிய விடிய தொடர்ந்தது. இதனால் நகர பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியது. ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், எழில் நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கியுள்ளது.
விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள லாஸ் பேட்டை, கருவடிக்குப்பம், கிருஷ்ணா நகர், கோரிமேடு ஆகிய பகுதிகளில் தொடர் மழை காரணமாக பாதுகாப்பு கருதி மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வானம் இருண்டு கருமேக கூட்டத்துடன் காணப்படுகிறது. வெளிச்சமே இல்லை. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன.
இதேபோல காரைக் காலிலும் கனமழை பெய்தது. மழை காரணமாக காரைக்கால் மாவட்ட அரசு, தனியார் பள்ளி, கல்லூரி களுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுவையில் தொடர் மழை பெய்தாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மழையில் நனைந்த படியே மிகுந்த அவதியுடன் சென்றனர்.
- மாணவரின் பெயரை சேர்ப்பதற்கு முன் பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம்.
- மாணவரின் வாழ்நாள் அடையாள எண்ணாக இருக்கும்.
பெங்களூரு:
மத்திய பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்விக் கொள்கை- 2020 திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க, `ஒரே நாடு, ஒரே மாதிரியான மாணவர் அடையாள அட்டை' பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் `அபார்' சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
'அபார்' அடையாள அட்டைக்கு மாணவரின் பெயரை சேர்ப்பதற்கு முன் பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம். பெற்றோரின் ஆதார், தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை இணைப்பதன் மூலம் மாணவர் ஐடி உருவாக்கப்படுகிறது.
மாணவர்களின் பெயர்களை பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், பெற்றோர் கூட்டத்தை அழைத்து சம்மதம் பெற தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தின் அனைத்து அரசு, உதவிபெறும் மற்றும் உதவிபெறாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் பெறும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வந்தது.
இதையடுத்து முதற்கட்டமாக மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 'ஆதார்' எண் மாதிரி 12 இலக்க 'அபார்' தனித்துவ அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
'ஏபிஏஆர்' என்பது தானியங்கி நிரந்தர கல்வி கணக்குப் பதிவு என்பதை குறிக்கிறது. இது மாணவரின் வாழ்நாள் அடையாள எண்ணாக இருக்கும்.
ஏற்கனவே மாநில அரசின் எஸ்டிஎஸ் அடையாள அட்டை மற்றும் மத்திய அரசின் பிஇஎண் ஆகியவை மாநில பாடத்திட்டப் பள்ளிகளின் மாணவர்களுக்கு நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- மாணவர்களை புத்தகம் வாசிக்க வைத்து கற்றல் திறனை கண்டறிந்தார்.
- கொள்கையை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் பணம் பெற அவசியம் இல்லை.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெருமூச்சி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் இன்று காலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாணவர்களை புத்தகம் வாசிக்க வைத்து கற்றல் திறனை கண்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.
பெருமூச்சி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஆய்வு மேற்கொண்டபோது மாணவர்கள் திறமையுடன் பதில் அளித்தனர். இதனை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மாணவர்களின் கல்வி தரம் உயர்ந்துள்ளது.
கல்வித்துறைக்கு சட்டசபை வரலாற்றிலேயே அதிக நிதியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். வருகிற 2026-ம் ஆண்டுக்குள் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் சரி செய்யப்படும்.
ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஒரு பள்ளிக்கு தலைமை ஆசிரியர் மிக முக்கியம். அவர் கப்பலின் கேப்டனை போல. ஆசிரியர்கள் அவருடன் இருந்து சிறப்பாக பணியாற்றுவதால் அந்த பள்ளி சிறப்பாக செயல்படுகிறது.
கொள்கையை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் பணம் பெற அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு முன்னதாக அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம், சமையல் கூடத்தையும் பார்வையிட்டார்.