search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் புகார்"

    மாணவ- மாணவிகள் தங்களது குறைகளை- புகார்கள் கூற கல்வித்துறை சார்பில் 14417 என்ற புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #MinisterSengottaiyan #EducationDepartment

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாகதேவன் பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்படுகிறது. இதற்கான பணி தொடக்க விழா இன்று நடந்தது.

    தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்ட பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    அப்போது அமைச்சர் செங்கோட்டையன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 1 லட்சம் மாணவ- மாணவிகள் சேர்ந்து உள்ளனர். அடுத்த ஆண்டு 3 லட்சம் மாணவ- மாணவிகள் அரசு பள்ளியில் சேர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


    நகர பகுதிகளைப் போல் மலைப்பகுதி அரசு பள்ளிகளிலும் ‘‘ஸ்மார்ட் கிளாஸ்’’ ஆரம்பிக்கப்படும். மலைப் பகுதி பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.

    மாணவ- மாணவிகள் தங்களது குறைகளை- புகார்கள் கூற கல்வித்துறை சார்பில் 14417 என்ற புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் மாணவ- மாணவிகள் புகார் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். புகார் கூறுபவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். தொடர்ந்து இதன் மீது விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாளை முதல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    இந்தியாவிலேயே முதன் முதலாக இந்த திட்டம் தமிழகத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #EducationDepartment

    ×