search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில அரசுகள்"

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு, மாநில அரசுகளின் மீது பழி போடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். #TNMinister #KadamburRaju #CentralGovt
    கோவில்பட்டி:

    தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

    எல்லா இடத்திலும் லஞ்சம், ஊழல் நடக்கிறது என்று பொதுவாக டி.டி.வி.தினகரன் பேசக்கூடாது. அவர் ஆதாரத்துடன் பேச வேண்டும். லஞ்சம், ஊழல் பற்றிய ஆதாரம் இருந்தால், அதுகுறித்து சட்டமன்றத்தில் பேசலாம். ஆதாரம் இல்லாமல் புகார் கூறக்கூடாது.

    நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகளவு வெற்றி பெறும் வகையில், தமிழக அரசு சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய பாடத்திட்டம் தற்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் வெற்றியால் அடுத்த ஆண்டு அனைவரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்கள்.

    தமிழகத்தில் எந்த நெருக்கடி நிலையும் இல்லை. அதனால்தான் சிலர் அரசுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகின்றனர். ஜனநாயக ரீதியாக கருத்துகளை தெரிவிக்கவும், போராட்டங்களை நடத்தவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. இங்கு சட்டம்-ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மின்வெட்டு இல்லை.

    காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்து உள்ளது. மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் மின் உற்பத்தியில் சிறிது தடங்கல் ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது. மத்திய அரசு சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தியபோது, மாநில அரசுகளை முறையாக கலந்து ஆலோசிக்கவில்லை. எந்த பொருளையும் சரக்கு, சேவை வரிக்குள் கொண்டு வருவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு, மாநில அரசுகளின் மீது பழி போடுகிறது. தங்க தமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் சேருவதற்கு தூது விட்டு கொண்டிருக்கிறார். இங்கிருந்து அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே அவர் அ.தி.மு.க.வில் சேருவதற்கு காரணம் தேடுகிறார். அதனால்தான் அவர் தேர்தல் குறித்து சவால் விடுத்து, அதில் தோற்கும்போது, தானாகவே அ.தி.மு.க.வில் சேருவதற்கு வழி தேடுகிறார்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #TNMinister #KadamburRaju #CentralGovt
    டெல்லியில் பட்டினியால் மூன்று சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #DelhiHungerDeaths #NHRC
    புதுடெல்லி:

    டெல்லியில் மந்தவாலி என்ற பகுதியில் மங்கள் என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். ரிக்‌ஷா தொழிலாளியான இவருக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவருடைய மனைவியும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் இவர்களின் 8, 5, 2 வயது பெண் குழந்தைகள் பட்டினியால் தவித்தனர். 

    இதற்கிடையே மங்களின் ரிக்‌ஷா திருட்டு போய் விட்டது. வீட்டில் இருந்த உணவு பொருட்களும் தீர்ந்து போக அக்கம்பக்கத்தினரிடம் உணவு வாங்கி சிறுமிகள் சாப்பிட்டனர். பின்னர் அவர்களின் உதவியும் கிடைக்கவில்லை.

    இதனிடையே மங்கள் வேலைக்காக வீட்டை விட்டு சில நாட்களுக்கு முன்பு சென்றார். தந்தை, தாய் கவனிப்பு இல்லாததால் 3 சிறுமிகளும் பட்டினியால் தவித்துள்ளனர். இந்நிலையில், மயங்கிய நிலையில் 3 சிறுமிகளும் 24-ந் தேதி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். 



    சிறுமிகளை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடலை பிரேத பரிசோதனை செய்தததில் சிறுமிகளின் வயிற்றில் உணவோ, தண்ணீரோ எதுவும் இல்லை. அவர்கள் சாப்பிட்டு 8 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். 

    சிறுமிகள் உணவின்றி இறந்த விவகாரம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #DelhiHungerDeaths #NHRC

    காவிரி படுகையில் உள்ள அணைகள் அனைத்தும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என வரைவு அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #CauveryIssue #CauveryDraftScheme #CauveryDams
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:



    * காவிரி நதிநீரை பகிர்ந்து கொடுப்பதற்கு 10 பேர் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். அதில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் இடம்பெறுவர். மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கும் இந்த அமைப்பில் இடம்பெறுவார்

    * காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை.

    * அணைகளின் நீர் திறப்பு குறித்து இந்த குழு முடிவு செய்யும். நீர் திறப்பு காலங்களில் குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து இந்த குழு முடிவு எடுக்கும். குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரையின்பேரில் அணைகளில் நீர் திறக்கப்படும்.

    * காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளும் மாநில அரசுகளின கட்டுப்பாட்டில் இருக்கும்.

    * முதற்கட்டமாக குழுவின் அடிப்படை பணிகளுக்கு மத்திய அரசு ரூ.2 கோடி வழங்கும். குழுவின் நிர்வாக செலவு மற்றும் உறுப்பினர்களின் சம்பளத்திற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CauveryIssue #CauveryDraftScheme #CauveryDams
    ×