search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில தலைவர்"

    தமிழகத்தில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 20 இடங்களில் சமாஜ்வாதி கட்சி போட்டியிடும் என மாநில தலைவர் கூறியுள்ளார். #SamajwadiParty

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று சமாஜ்வாதி கட்சியின் மாநில ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

    இதில் மாநில தலைவர் இளங்கோ யாதவ் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 20 இடங்களில் எங்களது கட்சி போட்டியிடும்.

    குறிப்பாக மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிதம்பரம், சிவகங்கை, திருவண்ணாமலை, வேலூர் உள்பட 20 இடங்களில் போட்டியிடும்.

    இந்த தொகுதிகளில் நடைபெறும் பிரச்சாரத்தில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்வார். தமிழகத்தில் மதசார்பற்ற கட்சிகள் எங்களை கூட்டணி அமைக்க அழைத்தால் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.

    தமிழகத்தில் மதசார்பற்ற தி.மு.க. எங்களை அழைத்து பேசவில்லை. தமிழகத்தில் ஒரு தொகுதியில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம்.

    உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மேற்குவங்கம், உத்ரகாண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #SamajwadiParty

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். #RajatsthanAssemblyElections #Congress #SachinPilot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 74.21 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணும் 40 மையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிக இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றதால், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். 



    இந்நிலையில், ராஜஸ்தானின் டோங்க் தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் வெற்றி பெற்றுள்ளார்.

    இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யூனுஸ் கானை விட 54 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். #RajatsthanAssemblyElections #Congress #SachinPilot
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சத்ய பால் மாலிக், பா.ஜ.க ஆதரவாளர் தான் என அம்மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir #BJP #SatyaPalMalik #RavinderRaina
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் என்.என் வோஹ்ரா ஆளுநராக இருந்துவந்தார். அவர் சமீபத்தில் நீக்கப்பட்டு, அவரது இடத்துக்கு சத்ய பால் மாலிக் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவர் புதிய ஆளுநராக பதவியேற்றார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்தர் மாலிக், முன்னாள் ஆளுநர் என்.என் வோஹ்ரா தனது கருத்தில் நிலையாக இருந்ததால் தான் அவரை மாற்றியதாக தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கவர்னர் சத்ய பால் மாலிக் எங்களுடைய ஆதரவாளர்தான் எனவும் ரெய்னா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் மெஹ்பூபா முப்தி தலைமையில் கூட்டணியில் நடைபெற்ற ஆட்சியை பா.ஜ.க தாமே முன்வந்து கலைத்தது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #BJP #SatyaPalMalik #RavinderRaina
    கர்நாடகம் மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து குமாரசாமி விடுவிக்கப்பட்டுள்ளார். #SecularJanataDal #StatePresident #Kumaraswamy
    பெங்களூரு:

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக தேவே கவுடா செயல்பட்டு வருகிறார். கர்நாடகம் மாநில தலைவராக அவரது மகன் குமாரசாமி இருந்து வந்தார்.

    இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார்.

    இதையடுத்து, அவரது பணிச்சுமையை குறைக்கும் வகையில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவர் பதவியில் இருந்து குமாரசாமியை விடுவித்து தேவே கவுடா இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். குமாரசாமிக்கு பதிலாக, விஷ்வநாத் என்பவரை மாநில தலைவராக நியமனம் செய்துள்ளார்.

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் தேவே கவுடா சார்ந்திருக்கும் ஒக்காலிகா இனத்தவருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், தற்போது அக்கட்சியின் மாநில தலைவர் பதவி குருபா இனத்தவரை சேர்ந்த விஷ்வநாத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    சித்தராமையாவின் நெருங்கிய நண்பரான விஷ்வநாத், கடந்த மே மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து மதசார்பற்ற ஜனதா தளத்தில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #SecularJanataDal #StatePresident #Kumaraswamy
    ×