search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கம்பம் சேதம்"

    காரிமங்கலம் பாலக்கோடு சாலையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சேதமான மின்கம்பத்தை மாற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பாலக்கோடு சாலையில் வணிக நிறுவனங்கள், அரசு பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் என பல அமைந்துள்ளது. இவ்வழியே உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மும்முனை மின்சார இணைப்பு தரப்பட்டுள்ளது. உயர் மின்னழுத்தம் செல்லும் மின்கம்பம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பலத்த சேதம் அடைந்து உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தின் அடிப்புறம் காங்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் காண்போரை அச்சப்படுத்தி வருகிறது. 

    சேதமடைந்த கம்பத்தை உடனடியாக அகற்ற இப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    எனவே, சேதமடைந்த மின்கம்பம் மேலும் சேதமடைந்து பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    போச்சம்பள்ளி அருகே மின் கம்பத்தில் லாரி மோதியதால் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி இருட்டில் மூழ்கியது.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ளது அரசம்பட்டி கிராமம். இப்பகுதியில் சாலையோர மின்கம்பங்கள் பல உள்ளன. இந்நிலையில் அரசம்பட்டியில் இருந்து பாரூர் செல்லும் சாலையில் உள்ள காந்திபுரம் என்ற பகுதியில் சாலையோர மின்கம்பத்தில் இரவு 7 மணி அளவில் கரடுமுறடாக வந்த லாரி ஒன்று மோதியதாக கூறப்படுகிறது. இதனால் மின்கம்பம் இரண்டாக முறிந்து மின் வயர்கள் அருந்து கீழே விழுந்தன. மின்கம்பம் முறிந்தது குறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் இரவு நேரம் முழுவதும் அப்பகுதியே இருட்டில் மூழ்கியது. 

    இரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

    மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி எந்த பகுதியை சேர்ந்தது. இங்கு எதற்காக நிருத்தப்பட்டது என்று பாரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×