search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் விலை உயர்வு"

    தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் மீன்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
    ராயபுரம்:

    மீன்பிடி தடை காலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக விசை படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பைபர் மற்றும் கட்டுமரங்கள் மட்டுமே கடலுக்குள் சிறிது தூரம் சென்று மீன் பிடித்து வருகின்றன.

    எனவே வஞ்சிரம், இறால், வவ்வால் போன்ற உயர் ரக மீன்கள் கிடைப்பதில்லை. சங்கரா, நவரை, கவளை போன்ற சிறிய ரக மீன்களே பிடிக்கப்படுகின்றன. அதுவும் மிக குறைந்த அளவே கிடைக்கின்றன.

    இதனால் மீன்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட விசை படகுகளிலும், 600-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளிலும் 300-க்கும் அதிகமான கட்டு மரங்களிலும் மீனவர்கள் மீன் பிடித்து வந்தனர்.

    இதில் விசை படகுகள் நிறுத்தப்பட்டதாலும் மற்ற படகுகளில் வரும் மீன்வரத்து குறைந்ததாலும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    முன்பு கிலோ ரூ.1000 வரை விற்கப்பட்ட பெரிய ரக வஞ்சிரம் மீன் தற்போது ரூ.1,600 வரை விற்கப்படுகிறது. சின்ன வஞ்சிரம் மீன் ரூ.600-ல் இருந்து ரூ. 750 ஆக உயர்ந்துள்ளது.

    வவ்வால் ரூ.500-ல் இருந்து ரூ.800ஆகவும், கடமா ரூ.300-ல் இருந்து ரூ.450 ஆகவும், கொடுவா ரூ.100-ல் இருந்து ரூ.200 ஆகவும், ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆகவும், நவரை ரூ.200-ல் இருந்து ரூ.350 ஆகவும், சங்கரா ரூ.250-ல் இருந்து ரூ.450-ஆகவும், கவளை ரூ.150-ல் இருந்து ரூ.200 ஆகவும் அதிகரித்துள்ளது.

    இதனால் சிறிய வியாபாரிகளும், பொதுமக்களும் மீன் வாங்குவதை குறைத்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் உள்ளதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் வருகின்றன. சீசன் காலங்களில் 40 முதல் 50 லாரிகள் வரும். தற்போது 12 முதல் 22 லாரிகள் வரைதான் மீன்கள் வருகின்றன.

    இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறும்போது, “கடந்த வாரம் இங்கு ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சிரம் தற்போது ரூ.800, ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட சங்கரா ரூ.150 என்று விலை உயர்ந்துள்ளது. இதுபோல மற்ற மீன்களின் விலைகளும் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது” என்றார்.
    ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டிணம் மீன் மார்க்கெட்டுகளில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன் விலை அதிகரித்துள்ளது.
    கீழக்கரை:

    தமிழகம் முழுவதும் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி விசைப்படகுகள் அனைத்தும் கரை ஏற்றம் செய்யப்பட்டு பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது சிறிய படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி, கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை மற்றும் திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, முள்ளிமுனை, காரங்காடு, வட்டாணம், பாசிப்பட்டினம், எஸ்.பி. பட்டிணம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மீன்பிடி தொழில் பெரிய அளவில் இல்லை. இதனால் மீன் மார்க்கெட்டுக்கு சில வாரங்களாக மீன்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    இதன் காரணமாக மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நகரை மீன், ஊடகம், விளைமீன், முரல் போன்ற ஒரு சில மீன் வகைகளை தவிர பல்வேறு வகையான மீன் வகைகள் விற்பனைக்கு வருவதில்லை. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, ராமேசுவரம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களே விற்பனைக்கு வருகிறது.

    அந்த மீன்கள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட மீன்களாகவே உள்ளது. வேறு வழியின்றி மீன் பிரியர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். குறிப்பாக நகரை, செங்கனி, பாறை மீன்கள் ஒரு கிலோ ரூ.500-க்கும், முரல், கலிங்க முரல், நண்டு போன்றவை ரூ.450 முதல் ரூ.500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் என்பதால் வெளியூர்களில் வசிப்பவர்கள் குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இதனால் மீன்களை போட்டி போட்டு கொண்டு அதிக விலை கொடுத்தும் வாங்கி செல்கின்றனர். ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டிணம் மீன் மார்க்கெட்டுகளில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்துள்ளது.
    தமிழகம் முழுவதும் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வருகிற 14-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    ராமநாதபுரம்:

    ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக கடல் பகுதிகளில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஏப்.15ந் தேதி முதல் இந்த தடை நடைமுறைக்கு வந்தது. ஜூன் 14-ம் தேதி வரை இந்த தடை அமலில் உள்ளது. இதையடுத்து மண்டபம், ராமேசுவரம், கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

    இதனால் ராமநாதபுரம், கீழக்கரை மீன் மார்க்கெட்டிற்கு மீன்வரத்து குறைவாக உள்ளது. பற்றாக்குறை உள்ளதால் மீன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    சூடை மீன் கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.100 வரையிலும், நகரை மீன் கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.150 வரையிலும், நண்டு கிலோ ரூ.300-ல் இருந்து ரூ.450 வரையிலும், சீலா கிலோ ரூ.500-ல் இருந்து ரூ.600 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    போதிய அளவு மார்க் கெட்டிற்கு கடல் மீன் வராததால் கண்மாயில் பிடிக்கப்படும் கெழுத்தி, கெண்டை, வளர்ப்பு கட்லா மீன்களை வாங்கி மீன் வியாபாரிகள் விற்கின்றனர். இதனால் இவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    விலை உயர்வு, மீன் வரத்துக்குறைவு ஆகிய காரணங்களால் அசைவப் பிரியர்கள் ஆடு, கோழி இறைச்சியை விரும்பி வாங்கி செல்கின்றனர். கடும் விலை உயர்வு காரணமாக ஒரு சில அசைவப் பிரியர்கள் காய்கறி உணவுக்கு மாறத்தொடங்கி விட்டனர். தற்போது காய்கறி விலையும் அதிகரித்துள்ளது.

    ×