என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மும்பை அணி"
- இரு அணிகளும் 2-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன.
- மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 28-36 என்ற கணக்கில் டெல்லியிடம் தோற்றது.
ஐதராபாத்:
11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 2 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் 40-42 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னாவிடம் தோற்றது.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 2-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன. மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 28-36 என்ற கணக்கில் டெல்லியிடம் தோற்றது. 2-வது போட்டியில 33-27 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. பெங்கால் அணி முதல் ஆட்டத்தில் 34-39 என்ற கணக்கில் ஜெய்ப்பூரிடம் தோற்றது. 2-வது போட்டியில் 32-29 என்ற கணக்கில் உ.பி. யோத்தாசை தோற்கடித்தது.
இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ-டெல்லி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளன. தெலுங்கு டைட்டன்ஸ் அணி பெங்களுரூவை வீழ்த்தி இருந்தது. தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூரிடம் தோற்றது. டெல்லி அணி மும்பையை வென்றது. உ.பி.யிடம் தோற்றது.
- அதிக எடையுடன் இருப்பதாகவும் வலை பயிற்சியின் போது மெத்தனாக இருப்பதாகவும் மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- மும்பை அணியில் இருந்து நீக்கியதற்கு இன்ஸ்டாகிராமில் பிரித்வி ஷா ஓய்வு தேவை நன்றி என ஸ்டோரி வைத்துள்ளார்.
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் மும்பை அணி தான் மோதிய 2 போட்டிகளில் 1 தோல்வி 1 வெற்றி பெற்றுள்ளது.
மும்பை அணி, முதல் போட்டியில் பரோடா அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மகாராஷ்டிரா அணிக்கு எதிரான 2-வது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 3-வது போட்டியில் திரிபுரா அணியுடன் 26-ந் தேதி மோத உள்ளது.
இந்நிலையில் பிரித்வி ஷா மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் அதிக எடையுடன் இருப்பதாகவும் வலை பயிற்சியின் போது மெத்தனாக இருப்பதாகவும் மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய அணிக்காக அதிக போட்டிகள் விளையாடிய ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர் ஆகியோர் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் இவர் மட்டும் அதனை புறக்கணிப்பதாகவும் மும்பை நிர்வாகம் கூறியது.
மும்பை அணியில் இருந்து நீக்கியதற்கு இன்ஸ்டாகிராமில் பிரித்வி ஷா ஓய்வு தேவை நன்றி என ஸ்டோரி வைத்துள்ளார். இரண்டு போட்டிகளில் விளையாடிய பிரித்வி ஷா 4 இன்னிங்ஸ்களில் 59 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
- 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
- முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மும்பை:
மும்பை - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை தனது முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சர்பராஸ் கான் 222 ரன் எடுத்தார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 121 ரன் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 5-வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த மும்பை அணி இரானி கோப்பையை வென்றது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், 27 ஆண்டுக்கு பிறகு இரானி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்த மும்பை அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
- 795 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய உத்தரகாண்ட் அணி 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
- 92 ஆண்டு கால உலக சாதனையை பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முறியடித்துள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஒரு ஆட்டத்தில் மும்பை அணி, உத்தரகாண்டை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முதல் இன்னிங்சில் 166.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 647 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. சுவேத் பார்கர் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய உத்தரகாண்ட் அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்க்ஸை தொடங்கிய மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்து மீண்டும் 'டிக்ளேர்' செய்தது.
இதையடுத்து 795 ரன்கள் என்ற மிக இமாலய இலக்குடன் உத்தரகாண்ட் அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணி இன்று 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
அதுமட்டுமின்றி முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி (ரன்கள் அடிப்படையில்) என்ற உலக சாதனையை மும்பை அணி படைத்துள்ளது. 92 ஆண்டுகளுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து அணியை 685 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூ சவுத் வேல்ஸ் அணி வெற்றி பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முறியடித்துள்ளது.
ரஞ்சி டிராபியை பொருத்தவர, 1953-54ல் பெங்கால் அணி ஒடிசாவை 540 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
நடப்பு ரஞ்சி டிராபி தொடரில், மும்பை அணி அரையிறதியில் உத்தர பிரதேச அணியுடன் விளையாட உள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்தது. இதில் மும்பை அணி நிர்ணயித்த 137 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி 17.4 ஓவர்களில் 96 ரன்களில் சுருண்டது. ஐ.பி.எல்.-ல் ஐதராபாத் அணி 100 ரன்னுக்குள் முடங்குவது இதுவே முதல் நிகழ்வாகும்.
மும்பை வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 3.4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் வார்னர் (15 ரன்) கிளன் போல்டு ஆனதும் அடங்கும். ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு பவுலரின் அற்புதமான பந்து வீச்சாக இது பதிவானது. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு நடந்த முதலாவது ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் சோகைல் தன்விர் 14 ரன் கொடுத்து 6 விக்கெட் எடுத்ததே (சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக) சிறந்த பந்து வீச்சாக இருந்தது. அந்த 11 ஆண்டு கால சாதனையை ஜோசப் முறியடித்தார்.
வெஸ்ட் இண்டீசை சேர்ந்த 22 வயதான ஜோசப்புக்கு இது தான் முதல் ஐ.பி.எல். ஆட்டமாகும். மலிங்கா தாயகம் திரும்பியதால் களம் காணும் வாய்ப்பை பெற்ற ஜோசப் தனது அறிமுக ஆட்டத்திலேயே பிரமாதப்படுத்தி விட்டார்.
ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட அல்ஜாரி ஜோசப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல்.-ல் எனது முதல் ஆட்டத்திலேயே 6 விக்கெட் வீழ்த்தியதை என்னால் நம்ப முடியவில்லை. கனவு போன்று உள்ளது. இதை விட பெரிதாக நான் எதையும் எதிர்பார்க்க முடியாது. நிச்சயம் இது மறக்க முடியாத நினைவாக இருக்கும்.
6 விக்கெட்டுகளில் எதை சிறந்ததாக கருதுகிறீர்கள் என்று அவரிடம் கேட்ட போது, வெற்றியை உறுதி செய்த கடைசி விக்கெட் தான் என்று பதில் அளித்தார். ஜோசப்புக்கு டுவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ‘இன்னொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் எங்களை பெருமைப்படுத்தி விட்டார்’ என்று ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.
முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 15-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆமதாபாத் டிபென்டர்ஸ்- யு மும்பா வாலி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 10-15, 15-12, 15-13, 15-12, 15-8 என்ற செட் கணக்கில் ஆமதாபாத் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்ததுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லீக் ஆட்டம் முடிவில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.
கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடமும், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், யு மும்பா வாலி (மும்பை) அணிகள் தலா 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. செட் விகிதாச்சாரம் அடிப்படையில் சென்னை அணி 3-வது இடத்தையும், மும்பை அணி 4-வது இடத்தையும் பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றாலும் செட் விகிதாச்சாரம் அடிப்படையில் 5-வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ஆமதாபாத் டிபென்டர்ஸ் 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் முதலாவது அரையிறுதியில் கோழிக்கோடு ஹீரோஸ்-யு மும்பா வாலி அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. நாளை நடைபெறும் 2-வது அரையிறுதியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. #ProVolleyball
6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 124-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, முன்னாள் சாம்பியன் யு மும்பாவை (மும்பை அணி) எதிர்கொண்டது. திரிலிங்கான இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-32 என்ற புள்ளி கணக்கில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 7-வது வெற்றியை ருசித்தது. இதில் ஒரு கட்டத்தில் 32-32 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் உ.பி.யோத்தா வீரர் பிரசாந்த் குமார் ராய் 2 பேரை அவுட் செய்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். தங்களது கடைசி லீக்கில் ஆடிய மும்பை அணி 22 ஆட்டங்களில் 15 வெற்றி, 5 தோல்வி, 2 டை என்று 86 புள்ளிகளுடன் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 39-23 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை சாய்த்தது. 10-வது வெற்றியை பதிவு செய்த பெங்கால் அணி இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabaddi #UPYoddha #UMumba
விசாகப்பட்டினம்:
புரோ கபடி ‘லீக்’ போட்டி தற்போது விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் 106-வது ஆட்டத்தில் மும்பை- டெல்லி அணிகள் மோதுகின்றன.
’பிளே ஆப்’ சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட மும்பை அணி 15-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. டெல்லி அணி 11-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
டெல்லி அணி ஏற்கனவே இந்த சீசனில் 2 முறை மும்பையிடம் தோற்று இருந்தது. இதற்கு பதிலடி கொடுத்து பிளேஆப் சுற்றுக்குள் நுழையும் ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.
பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்துவது டெல்லி அணிக்கு சவாலானதே.
இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டஸ்- உ.பி.யோதா அணிகள் மோதுகின்றன. தெலுங்கு டைட்டன்ஸ் 8-வது வெற்றிக்காகவும், உ.பி. யோதா 5-வது வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.
உ.பி. அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. தெலுங்கு டைட்டர்ன்ஸ் அந்த அணியை வீழ்த்தி முன்னேற்ற பாதைக்கு செல்லும் வேட்கையில் உள்ளது.
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சென்னை அணி (10 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 டிரா, 7 தோல்வி) எஞ்சிய 8 லீக்கிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். இந்த ஆட்டத்தில் இருந்தாவது சென்னை அணி எழுச்சி காணுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 5 வெற்றி, 2 தோல்வி, 2 டிராவுடன் 17 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை சிட்டி அணி கடந்த 5 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்கவில்லை. சொந்த ஊரிலும் வெற்றிப்பயணத்தை நீட்டிக்க அவர்கள் தீவிரம் காட்டுவார்கள்.
இதற்கிடையே கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கடைசி நிமிடத்தில் பெங்களூரு வீரர் சென்சோ கையல்ட்ஷென், பிரமாதமாக ஒரு கோல் அடித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். பெங்களூரு அணி 7 வெற்றி, 2 டிரா என்று 23 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity
12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்றிரவு நடந்த 57-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் யு மும்பா (மும்பை அணி) அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி 5 நிமிடங்கள் எஞ்சி இருந்தபோது 30-26 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
அந்த சமயத்தில் குஜராத் மாற்று ஆட்டக்காரர் மகேந்திர ராஜ்புத் ஒரே ரைடில் 5 பேரை அவுட் ஆக்கி, ஆல்-அவுட்டும் செய்ததால், ஆட்டம் குஜராத் பக்கம் திரும்பியது. முடிவில் குஜராத் அணி 38-36 என்ற புள்ளி கணக்கில் திரில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 50-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்து 5-வது வெற்றியை பெற்றது.
இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் -தபாங் டெல்லி (இரவு 8 மணி), யு மும்பா-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.
12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த பரபரப்பான 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி (யு மும்பா) 40-39 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது. 7-வது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது 5-வது வெற்றியாகும். முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 39-28 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வென்றது. இன்றைய ஆட்டங்களில் டெல்லி-உ.பி.யோத்தா (இரவு 8 மணி), பாட்னா-அரியானா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்