search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி கவிழ்ந்து விபத்து"

    சேலம் பட்டர் பிளை மேம்பாலத்தில் இன்று காலை துணி பண்டல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் காயமின்றி தப்பினார்.

    சேலம்:

    சேலம் அரியானூர் பகுதியில் இருந்து துணி பண்டல் ஏற்றிய லாரி வட மாநிலத்திற்கு புறப்பட்டது. இந்த லாரி இன்று காலை 6 மணி அளவில் சேலம் பட்டர்பிளை மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலை தடுமாறிய லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பாலத்திலேயே லாரி கவிழ்ந்தது. அதில் இருந்த துணி பண்டல்கள் சாலையில் சிதறி கிடந்தன. லாரி கிளீனர் காயம் அடைந்து அலறினார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சேலம் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற அன்ன தானப்பட்டி போலீசார் சாலையில் சிதறி கிடந்த துணி பண்டல்களை அப்புறப் படுத்தி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர். பின்னர் கிரேன் மூலம் லாரியை மீட்டனர்.

    இந்த விபத்தில் லாரி கிளீனர் லேசான காயம் அடைந்தார். டிரைவர் காயமின்றி தப்பினார்.

    விபத்து குறித்து அன்ன தானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒடிசாவின் கந்தமால் பகுதியில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #OdishaTtruckAccident
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தின் கலிங்கி பகுதியில் இருந்து பிராமணிகாவ் நோக்கி மினி லாரி இன்று சென்று கொண்டிருந்தது. அதில் சுமார் 40க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். 

    பாலிகுடா காவல் சரகத்திற்கு உட்பட்ட பொய்குடா மலைப்பகுதியில் உள்ள ஒரு வளைவில் திருப்ப முற்பட்டபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விழுந்தது. 

    இந்த விபத்தில் 8 பேர் இறந்தனர்.  25 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    லாரி விபத்தில் பலியானோருக்கு முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். #OdishaTtruckAccident 
    ஒடிசாவில் உள்ள கந்தமால் பகுதியில் லாரி கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். #Odisha #truckoverturns
    பலிகுடா:

    ஒடிசாவின் கந்தமால் மாவட்டம், பாலிகுடா காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த லாரியில் சுமார் 40-50 பேர் கதாபூரில் இருந்து பிராமணிகான் நோக்கி பயணம் செய்துள்ளனர். 



    பொய்குடா மலைப் பகுதியில்  உள்ள ஒரு வளைவில் திருப்ப முற்பட்டபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி, பள்ளத்தாக்கில் திடீரென கவிழ்ந்தது.

    இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.  #Odisha #truckoverturns
    இமாசலப்பிரதேசத்தில் ராணுவ லாரி கவிழ்ந்து விழுந்த விபத்தில் அதில் பயணித்த ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் காயமடைந்தனர். #Accident
    சிம்லா:

    இமாசலப்பிரதேசம் மாநிலம் காங்ரா மாவட்டத்தில் இன்று மாலை ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

    சத்தாரி பகுதியில் வந்தபோது லாரி தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் லாரியில் பயணித்த 8 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் காயமடைந்தனர். 

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின் அவர்களை அருகிலுள்ள பாலாம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். #Accident
    ×