என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வங்கி அதிகாரி பலி"
தஞ்சை-நாகை சாலை, பீட்டர் ஞானப்பிரகாசம் நகரில் வசித்து வந்தவர் ராமன் (வயது 66). இவர் இந்தியன் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் செந்தில்குமார். திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று, ராமன் தன்னுடைய சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் சென்றிருந்தார்.
நேற்று இரவு அவர் ஒரத்தநாட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தார். தஞ்சை- மன்னார்குடி சாலையில் சடையார்கோவில் அருகே வந்தபோது, அந்தவழியாக வேளாங்கண்ணியில் இருந்து வந்த கர்நாடகா சுற்றுலா பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த ராமனின் தலையில் பஸ்சின் முன்சக்கரம் ஏறிஇறங்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ராமன் உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி ராமனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
திருச்சி மாவட்டம் ஒரலூர் கிராமம் ஞானம்காலனி ராமலிங்கா நகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது48). இவர் புதுவையில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் மானேஜராக பணிபுரிந்து வந்தார். இவர் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி தினமும் வங்கி பணிக்கு காரில் புதுவை வந்து செல்வார்.
அதுபோல் இன்று காலை வங்கி பணிக்காக வீட்டில் இருந்து காரில் புதுவைக்கு புறப்பட்டு வந்தார். ரெட்டிச்சாவடி அருகே காட்டுக்குப்பம் என்ற இடத்தில் வந்த போது புதுவையில் இருந்து கடலூருக்கு கம்பி ஏற்றி வந்த லாரியும், புகழேந்தி ஓட்டிச்சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி புகழேந்தி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
தகவல் அறிந்ததும் ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்து காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்