என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வசுந்தரா ராஜே"
- ஐந்து மாநில தேர்தலில் மூன்றில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
- மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 3-ந்தேதி வெளியாகின. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜதனா ஆட்சியை பிடித்தது.
என்றபோதிலும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் அந்த கட்சி தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. இதனால் ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் பதவி ஏற்பு விழா நடைபெறவில்லை. சத்தீஸ்கரில் சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்வு செய்யப்பட்டது. ராஜஸ்தானில் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் இன்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய துணை தலைவர் சரோஜ் பாண்டே, தேசிய பொது செயலாளர் வினோத் டவ்தே ஆகிய துணை பார்வையாளர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் யார் என்பது தேர்வு செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய மந்திரிகள் அர்ஜூன் ராம் மெஹ்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முதல்வர் பதவி போட்டியாளர்களில் முன்னணியில் இருக்கிறார்கள்.
ராஜஸ்தானில் 199 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதல் பா.ஜனதா 115 இடங்களில் வெற்றி பெற்றது. வேட்பாளர் மரணம் காரணமாக ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- கோபிசந்த் மீனா, சங்கர் சிங் ராவத் உள்பட 20-க்கும் மேற்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வசுந்தரா ராஜேவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
- ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சிபி ஜோஷியை தேர்தல் பொறுப்பாளராக இருந்த அருண் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதில் பாரதிய ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-மந்திரியாக யாரும் முன்னிறுத்தப்படவில்லை.
இந்நிலையில் தேர்தலில் அபார வெற்றி பெற்று கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதிய முதல்-மந்திரியாக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, முன்னாள் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த தியா குமாரி,
எம்.பி. பாபா பாலக்நாத், மத்திய மந்திரி கஜேந்திர சகாவாத் ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கான பரிசீலனையில் உள்ளனர்.
இந்நிலையில் கோபிசந்த் மீனா, சங்கர் சிங் ராவத் உள்பட 20-க்கும் மேற்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வசுந்தரா ராஜேவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் முதல்-மந்திரியாக வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை முதல்- மந்திரியை கட்சி தலைமை தேர்வு செய்யவில்லை. இந்நிலையில் வசுந்தரா ராஜே வீட்டுக்கு சென்ற 20 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்தித்துள்ளனர்.
இதுகுறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் ராவத் கூறுகையில், வசுந்தரா ராஜே தனது பதவி காலத்தில் முதல்-மந்திரியாக சிறப்பாக செயல்பட்டார் என்றார்.
இதற்கிடையே ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சிபி ஜோஷியை தேர்தல் பொறுப்பாளராக இருந்த அருண் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது முதலமைச்சர் பதவி குறித்து கேட்டபோது, "முதலமைச்சர் யார் என்பதை உயர்மட்ட குழு முடிவு செய்யும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்" என்றார்.
புதிய முதல்-மந்திரி யார்? என்பது குறித்து பா.ஜ.க. தலைமை இன்று அறிவிப்பு வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
- வசுந்தரா ராஜே காங்கிரஸ் வேட்பாளரைவிட 53,193 வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றார்.
- வித்யாதர் நகர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. எம்.பி. தியா குமாரி 71,368 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. கட்சி 114 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 70 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானில் மாலை 4 மணி நிலவரப்படி 27 தொகுதிகளில் பாஜகவும், 19 தொகுதிகளில் காங்கிரசும் வென்றுள்ளது.
இதில் ராஜஸ்தானின் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. வேட்பாளருமான வசுந்தரா ராஜே 1,38,831 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் காங்கிரஸ் வேட்பாளரைவிட 53,193 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.
இதேபோல், வித்யாதர் நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக எம்பியான தியா குமாரி 158516 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இவரை 71368 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டியுள்ளனர்.
இந்நிலையில், இங்குள்ள ஜலோர் மாவட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இன்று பிரசாரம் செய்தார். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு தலைவரும் கிடையாது செயல்திட்டமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாநிலத்தில் வசுந்தராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் மாநிலத்தின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் மட்டுமில்லாமல் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
ஆனால், காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க வேண்டும் என கணவு காணுகின்றது. ஆனால், அந்த கட்சிக்கு தலைமையும் கிடையாது, செயல்திட்டமும் கிடையாது என்றும் அமித் ஷா தெரிவித்தார். #Congress #Rajasthanpolls #AmitShah
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. அதேசமயம் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக தனது பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது. ஆட்சியின் சாதனைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
நிகழ்ச்சியில் வசுந்தரா ராஜே பேசும்போது, 2013 சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பதாக குறிப்பிட்டார். #RajastanPolls #BJPManifesto
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இதற்கான தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சற்றுமுன்பு ராஜஸ்தான் பா.ஜனதா முதல்-மந்திரி வசுந்தராராஜே, “கிராமப்புற விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு ஆக்குவதே மோடியின் குறிக்கோளாக இருக்கிறது. இதன்படி கிராமப்புற விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
வசுந்தராராஜே தேர்தல் தேதி தெரிவிப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பு இலவச மின்சார திட்டத்தை வெளியிட்டார். தேர்தல் தேதி 3 மணியளவில் அறிவிக்கப்பட்டது. அவர் 2 மணிக்கு இதை தெரிவித்தார். 12 லட்சம் விவசாயிகள் பயன் அளிக்கும் வகையில் இலவச மின்சார திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள போராடுகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. அங்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும் பா.ஜனதா தோல்வியை தழுவியது.
மக்களின் அதிருப்தியை சமாளிக்க முதல்-மந்திரி வசுந்தரா கடைசி நேரத்தில் இலவச திட்டங்களை அறிவிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். #BJP #VasundharaRaje
ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான அசோக் கெலாட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தனது சொந்த அரசியல் லாபத்துக்காக அரசு அதிகாரிகளை தவறாக பயன்படுத்துகிறார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தன்மேகுமால் முதல்-மந்திரியின் முதன்மை செயலாளராக இருக்கிறார். இவரை அரசு அதிகாரி போன்று நடத்தாமல் தனிப்பட்ட முறையில் தனது சொந்த வேலைக்கு பயன்படுத்துகிறார்.
கடந்த 4 ஆண்டுகளாக முதல்-மந்திரி வசுந்தரா ராஜே ஹெலிகாப்டரில் சுற்றி வருகிறார். அதே நேரத்தில் தன்மேகுமார் ஒரு முதல்- மந்திரி போன்று செயல்படுகிறார். அரசின் அனைத்து முடிவுகளும் அவரது உத்தரவுப்படியே நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஐ.ஏ.எஸ். மற்றும் அரசு உயர் அதிகாரிகளை மிரட்ட அவரை வசுந்தரா பயன்படுத்தி வருகிறார்.
அதே நேரத்தில் பணத்தை வீணடிக்கும் நிகழ்ச்சி அல்லது விழா ஏற்பாடு செய்யும் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத நேர்மையான அதிகாரிகள் குறிவைத்து பழிவாங்கப்படுகின்றனர்.
கடந்த மாதம் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மனித சங்கிலி நடத்தப்பட்டது. அதற்காக ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் கொட்டப்பட்டன. அதற்காக ரூ.21 கோடி செலவிடப்பட்டது. அதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதேசன் சேத்தி மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோன்று பல அதிகாரிகள் இடமாற்றத்துக்கு ஆளாகி வருகின்றனர் என்றார். #Congress #BJP #RajasthanCM #vasundharaRaje
பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது.
ஆனால் சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை ஓரளவு குறைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க முன்வரவில்லை.
இப்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார். இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.5 பைசா குறைய வாய்ப்புள்ளது.
மேலும் பெட்ரோல் மீதான விற்பனை வரி 30 முதல் 26 சதவீதமும், டீசல் மீதான விற்பனை வரி 22 முதல் 18 சதவீதமாகவும் குறைக்கப்படும் என்றும் முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார். #VasundharaRaje
ஜெய்ப்பூர்:
200 உறுப்பினர்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதியுடன் முடி வடைகிறது.
எனவே இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
அங்கு முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. தேர்தலை சந்திக்க பா.ஜனதா தயாராகிவிட்டது. அக்கட்சியின் தேசிய தலைவர் அமத்ஷா தேர்தல் பிரசார ரதயாத்திரை தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்.
தேர்தல் அறிவிப்பு வெளியாக இருப்பதால் அதற்கு முன்னதாகவே வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா வெளியிட்டு வருகிறார்.
நேற்று அவர் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சலுகைகள் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ராஜஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் மாவட்டங்கள் மற்றும் தெற்கு ராஜஸ்தான் மாவட்டங்களில் உள்ள 12 ஆயிரம் விவசாயிகள் பயன் அடையும் வகையில் அவர்களது கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாவட்டங்களில் விவசாயிகளின் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்து கடன் பெற்று இருக்கிறார்கள். அவை தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா அறிவித்துள்ளார். #BJP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்