என் மலர்
நீங்கள் தேடியது "வாய்க்கால்"
- கிராம மக்கள், வாயக்கால் நடுவே பாலம் கட்டித் தர பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- கிராம மக்கள் ஒருவரின் சடலத்தை வாயக்காலில் நீந்தியபதி எடுத்து செல்லும் வீடியோ ஒன்று வைரலானது.
கடலூர் வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை வாய்க்காலில் நீந்தி கொண்டு சென்று அடக்கம் செய்யும் அவலை நிலையில் உள்ளனர்.
இது மக்களுக்கு பெறும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள், வாயக்கால் நடுவே பாலம் கட்டித் தர பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கிராம மக்கள் ஒருவரின் சடலத்தை வாயக்காலில் நீந்தியபதி எடுத்து செல்லும் வீடியோ ஒன்று வைரலானது.
இதன் எதிரொலியால், வீரசோழபுரம் கிராமத்தில் மயானத்திற்கு வாய்க்காலை கடந்து செல்ல ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைபாலம் அமைக்கப்படும் என்று கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆணை பிறப்பித்துள்ளார்.
மேலும் அவர், மயானத்திற்கு செல்ல ஏதுவாக தற்காலிக பாலம் உடனடியாக அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- அணையில் நீர்மட்டம் சரிந்ததால் கீழ் பவானி பாசனத்தின் இரண்டாம் போகத்துக்கே தண்ணீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
- குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரால் காளிங்கராயன் வாய்க்கால் மூலம் 15,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுக்கு 10 மாதங்கள் காளிங்கராயன் வாய்க்காலில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். பாசனப்பகுதியில் கரும்பு, வாழை, நெல், மக்காச்சோளம், மஞ்சள், எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படும். ஆண்டுக்கு மூன்று போகம் விளைய கூடிய இப்பாசனத்திற்கு அட்டவணைப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16-ந் தேதி கண்ணீர் திறக்கப்பட்டு, ஏப்ரல் 30-ம் தேதி தண்ணீர் நிறுத்தப்பட வேண்டும்.
இந்த ஆண்டு பவானிசாகர் அணைக்கான நீர் பிடிப்பு பகுதியில் மழை இன்மையாலும், பிற பகுதி மழைநீர் வரத்து இன்றியும், அணை நீர் மட்டம் தொடர்ந்து சரிந்தது. குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. அணையில் நீர்மட்டம் சரிந்ததால் கீழ் பவானி பாசனத்தின் இரண்டாம் போகத்துக்கே தண்ணீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே நீலகிரி மாவட்டம் உட்பட அணை நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணைக்கு குறைந்த அளவு நீர் வரத்தாகி வருகிறது. கடந்த மே மாதம் 15-ந் தேதி அணையின் நீர்மட்டம் 44.35 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி 57.71 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தாலும் சில நாட்களாக நீர் வரத்து மீண்டும் குறைந்து விட்டது.
வழக்கமாக இந்த மாதத்தில் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு மேல் இருக்கும். அதனால் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு 57.71 அடியாக நீர் திறப்பு உள்ளதாலும் அணைக்கான நீர் வரத்து 600 கன அடியாக உள்ளதுடன் தினமும் குடிநீர் தேவைக்கு 150 கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுவதால் கவலை அளிக்கும் படியே உள்ளது.
இந்த சூழலால் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்க இயலாத நிலை உள்ளதால் காளிங்கராயன் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்தால் மட்டுமே அடுத்த சில நாட்களில் காளிங்கராயன் பாசனத்திற்கும் ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்களுக்கும் தண்ணீர் வழங்க இயலும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71.96 அடியாக குறைந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71.96 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 221 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,000 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.61 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.42 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.46 அடியாகவும் குறைந்து உள்ளது.
- உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்தது.
- வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குப்பட்ட உப்பனாரு வாய்க்காலில் புதிதாக கட்டப்பட்ட 3 அடுக்குமாடி வீடு சரிந்து துண்டாக விழுந்து விபத்துக்குள்ளானது.
உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு சரிந்து விழுந்துள்ளது.
இந்த வீடு புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில் சரிந்து விழுந்தது. வரும் பிப்ரவரி 1ம் தேதி வீட்டின் கிரக பிரவேசம் நடைபெற இருந்தது.
வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மழைக்காலங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
- மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி 2-வது வார்டில் தாழ்வான பகுதியில மழை க்காலங்களில் குடியிருப்பு களை மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு வாசிகள் அவதி அடைந்து வந்தனர். இதனிடையே மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் ரஹமத்நிஷா முபாரக், நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகர னிடம் கோரிக்கை வைத்தார்.
இதனை அடுத்து நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகர், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் அறிவுறு த்தலின்படி இரணியன் நகர் பகுதியில் வாய்க்கால் ஹிட்டாச்சி இயந்திரம் கொண்டு தூர் வாரும் பணி தொடங்கியது.
இந்த பணிகள் மேற்கொள்வதன் மூலம் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழாமல் எளிதில் வடியும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நகராட்சி பொறியாளர் குமார், பணி மேற்பா ர்வையாளர் விஜயேந்திரன், நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மத்நிஷா பாரூக் உடன் இருந்தனர்.
- இவர் நேற்று தனது விவசாய பூமிக்கு பாசனத்திற்காக கீழ்பவானி பாசன வாய்க்கால் மதகை பாசனத்திற்காக திறந்து விட்ட போது, தவறி வாய்க்காலில் விழுந்து விட்டதாக தெரிகிறது.
- வெள்ளகோவில் அடுத்த முத்தூர் பக்கம் உள்ள வாலிபனங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60), விவசாயி.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அடுத்த முத்தூர் பக்கம் உள்ள வாலிபனங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60), விவசாயி. இவர் நேற்று தனது விவசாய பூமிக்கு பாசனத்திற்காக கீழ்பவானி பாசன வாய்க்கால் மதகை பாசனத்திற்காக திறந்து விட்ட போது, தவறி வாய்க்காலில் விழுந்து விட்டதாக தெரிகிறது. இதனால் தலையில் பலத்த அடிபட்டு வாய்க்காலில் இருந்து மேலே எழுந்து வர முடியாமல் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மழைநீர் வீடுகளில் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
- சாட்டை வாய்க்காலை ஆக்கிரமிப்புகள் அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் பூந்தோட்ட தெருவில் சாட்டை வாய்க்கால் அமைந்துள்ளது.
இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்ப டாமல் இருந்து வருகிறது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
சாட்டை வாய்க்காலை ஆக்கிரமிப்புகள் அகற்றி தூர்வார வேண்டுமென தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து 3 -வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரிபாய்செந்தில் சீர்காழி நகராட்சி ஆணையர் ஹேமலதாவிடம் சாட்டை வாக்காளர் தூர்வாரக்கோரி கோரிக்கை மனு அளித்தார்.
இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் ஆகியோர் சாட்டை வாய்க்காலை நேரடியாக சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விரைவில் வாய்க்காலை தூர்வாரி தருவதாக உறுதியளித்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து நகராட்சி ஆணையருக்கும், நகர மன்ற உறுப்பினருக்கும் நன்றியும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு மேம்பாட்டுக் குழு துணை அமைப்பாளர் செந்தில் உடனிருந்தார்.
- சுமார் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.
- வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடைக்கு போதிய அளவு கிடைக்காததாலும், அணையின் தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் டீசல் மோட்டார் பம்பு செட்டு மூலம் தண்ணீர் இறைத்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.
ஒரு சில பகுதிகளில் மோட்டார் மூலம் இறைப்பதற்கு கூட தண்ணீர் இல்லை என பாதித்த பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 50,000 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு குறுவை அறுவடை பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். தாமதமாக சாகுபடி பணியில் ஈடுபட்ட குறுவை சாகுபடி விவசாயிகளும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சம்பா பணியை மேற்கொண்ட விவசாயிகளும் தண்ணீர் இன்றி பயிர் பாதித்துள்ளதாக கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூண்டி அருகே கீழையூரில் இருந்து திருப்பூண்டி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை அருகே சந்திரநதி வாய்க்கால் பாசனத்தில் காரப்ப பிடாகை, சிந்தாமணி, திருப்பூண்டி, பிஆர்பபுரம், காமேஸ்வரம், காரைநகர் உள்ளிட்ட பகுதிகளில் 700 மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் திருப்பூண்டி அருகே சந்திரநதி வாய்க்காலில் தேங்கிய மழைநீரை டீசல் மோட்டார் மூலம் இறைத்து ஒரு சில விவசாயிகள் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வாய்காலை ஆழப்படுத்தி தண்ணீர் எடுத்தால் வரும் காலங்களில் அதில் சீராக தண்ணீர் வராது. எனவே வாய்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு கிராமத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் கலெக்டர் டாக்டர்.உமா தலைமையில் நடைபெற்றது.
- குமாரபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்காலில் பேரூராட்சி மற்றும் இந்த பகுதியில் உள்ள ஊராட்சி பகுதியில் இருந்து சாக்கடை கழிவு நீர் கலக்கிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு கிராமத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் கலெக்டர் டாக்டர்.உமா தலைமையில் நடைபெற்றது.
இந்த குறை தீர்ப்பு முகாமில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில துணை செயலாளர் பொன். ரமேஷ் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குமாரபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்காலில் பேரூராட்சி மற்றும் இந்த பகுதியில் உள்ள ஊராட்சி பகுதியில் இருந்து சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. அதேபோல் தனியார் மற்றும் பொது கழிப்பறையில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரும் வாய்க்கால்களில் கலக்கிறது. சாக்கடை கழிவு நீர் வாய்க்காலில் கலப்பதை தடை செய்ய வேண்டும். வாய்க்கால்களில் அதிக அளவு செடி, கொடிகள் முளைத்துள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல முடியாமல் பணப்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல் நச்சுத்தன்மை உள்ள சாக்கடை கழிவு நீர் கலந்து செல்வதால் மகசூல் பாதிக்கிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இதில் நஞ்சை இடையாறு மோகனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பிரதாப், நஞ்சை இடையாறு சுமதி விசுவநாதன், உழவர் பேரியக்கத்தின் மாவட்ட செயலாளர், பொன்மலர்பாளையம் பா.ம.க., மோகனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நஞ்சை குமார், வினோத், கபிலன், கிருஷ்ணமூர்த்தி, மோகன்ராஜ், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டதை ஆய்வு செய்தார்.
- வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், சக்கராப்பள்ளி ஊராட்சியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் கல்வி நிதியிலிருந்து கட்டப்பட்ட பள்ளி கட்டிடம், பள்ளி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பள்ளி கட்டிடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாய் நெசவு தொழிற்கூடம், வழுத்தூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது விநியோக கட்டிடம், பண்டாரவாடை ஊராட்சி பார்வதிபுரம் கிராமத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர் சாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
- வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், திருக்கருகாவூர், இடையிருப்பு ஊராட்சியில் இடையிருப்பு ஊராட்சியில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி புதுப்பிக்கும் பணி, ஜல்ஜுவன் திட்டப்பணிகள், சிறு பாலம் கட்டுமானப்பணி மற்றும் சாலைப்பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை யிட்டு பணிகள் தரமாக செய்யப்படுகிறது என தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது இடையி ருப்பு அரசு நெல் கொள்முதல்நி லையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டித் தரவும் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றிட வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆய்வின் போது பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன்,அமானுல்லா இடையிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் வனிதா கார்த்திகேயன், மற்றும் ஊராட்சி செயலாளர் ராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.
- தஞ்சை- மன்னார்குடி சாலையில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர்.
- வாயக்காலில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே காட்டூர் கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள கிளை வாய்க்கால்கள் அடைக்கப்பட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டி வந்தனர்.
தண்ணீர் முறை வைத்து அனுப்புவதும் கிளைவாய்க்கால்களில் தண்ணீர் வராத காரணத்தினாலும் பயிரிட்டுள்ள குறுவை பயிர்கள் கருகி வாடி வருவதாக வேதனைப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில் கிளை வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் வர நடவடிக்கை எடுத்து பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி இன்று தஞ்சை- மன்னார்குடி சாலையில் காட்டூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர்.
பின்னர் சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியும், தடுப்புகள் அமைத்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், வாயக்காலில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.