search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் தடுப்பு அமைத்து விவசாயிகள் மறியல்- பரபரப்பு
    X

    மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சாலையில் தடுப்பு அமைத்து விவசாயிகள் மறியல்- பரபரப்பு

    • தஞ்சை- மன்னார்குடி சாலையில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர்.
    • வாயக்காலில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே காட்டூர் கிராமத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று முடிந்தது.

    இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள கிளை வாய்க்கால்கள் அடைக்கப்பட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டி வந்தனர்.

    தண்ணீர் முறை வைத்து அனுப்புவதும் கிளைவாய்க்கால்களில் தண்ணீர் வராத காரணத்தினாலும் பயிரிட்டுள்ள குறுவை பயிர்கள் கருகி வாடி வருவதாக வேதனைப்பட்டனர்.

    இந்த சூழ்நிலையில் கிளை வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் வர நடவடிக்கை எடுத்து பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி இன்று தஞ்சை- மன்னார்குடி சாலையில் காட்டூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர்.

    பின்னர் சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியும், தடுப்புகள் அமைத்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், வாயக்காலில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×