search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் இல்லாததால் மழைநீரை இறைத்து குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள்
    X

    தேங்கிய தண்ணீரை மோட்டார் வைத்து வயலுக்கு இறைக்கும் விவசாயிகள்.

    தண்ணீர் இல்லாததால் மழைநீரை இறைத்து குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள்

    • சுமார் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.
    • வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடைக்கு போதிய அளவு கிடைக்காததாலும், அணையின் தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகளில் டீசல் மோட்டார் பம்பு செட்டு மூலம் தண்ணீர் இறைத்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.

    ஒரு சில பகுதிகளில் மோட்டார் மூலம் இறைப்பதற்கு கூட தண்ணீர் இல்லை என பாதித்த பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் 50,000 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு குறுவை அறுவடை பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். தாமதமாக சாகுபடி பணியில் ஈடுபட்ட குறுவை சாகுபடி விவசாயிகளும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சம்பா பணியை மேற்கொண்ட விவசாயிகளும் தண்ணீர் இன்றி பயிர் பாதித்துள்ளதாக கவலை அடைந்துள்ளனர்.

    திருப்பூண்டி அருகே கீழையூரில் இருந்து திருப்பூண்டி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை அருகே சந்திரநதி வாய்க்கால் பாசனத்தில் காரப்ப பிடாகை, சிந்தாமணி, திருப்பூண்டி, பிஆர்பபுரம், காமேஸ்வரம், காரைநகர் உள்ளிட்ட பகுதிகளில் 700 மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் திருப்பூண்டி அருகே சந்திரநதி வாய்க்காலில் தேங்கிய மழைநீரை டீசல் மோட்டார் மூலம் இறைத்து ஒரு சில விவசாயிகள் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வாய்காலை ஆழப்படுத்தி தண்ணீர் எடுத்தால் வரும் காலங்களில் அதில் சீராக தண்ணீர் வராது. எனவே வாய்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×