என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாலிர் கொலை"
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பெருமாள் (வயது 25). நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் மகன் ஞானசேகரன் (19) என்பவர் காமராஜர் மகன் கார்த்திக் ராஜாவுடன் போதையில் தகராறு செய்து கொண்டு இருந்தார். இதை பார்த்த கருப்பையாவும், அவரது மனைவி பழனியம்மாளும் ஏன் தகராறு செய்கிறீர்கள்? என கேட்டு அவர்களை அங்கிருந்து செல்லுமாறு சத்தம் போட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஞானசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் ராஜபாண்டி (19) உள்பட 4 பேர் சேர்ந்து பழனியம்மாளை தென்னை மட்டையால் தாக்கினர்.
இதை பார்த்த பெருமாள் எனது அம்மாவை எதற்காக தாக்கினீர்கள்? என தட்டி கேட்டார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஞானசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து பெருமாள் தலையில் போட்டனர்.
படுகாயமடைந்த பெருமாள் பெரிய குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கருப்பையா தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மதனகலா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஞானசேகரனை கைது செய்தனர்.
இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். தகராறை தட்டிக் கேட்ட சம்பவத்தில் வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டது பெரியகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
சென்னை ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியில் சென்னை வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி தேசிய நெடுஞ்சாலையோரமாக வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் உடலை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு மது அருந்த வந்தபோது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தலையில் கல்லை போட்டு கொலை செய்ததால் முக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலையாளி யார்? என்பது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்