search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரமே வாகை சூடும்"

    • விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
    • லைகா நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் கடன் பெறவில்லை என்று விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

    அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ரூ.15 கோடியை டெபாசிட் செய்யவும் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.


    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்று லைகா நிறுவனம் தன் மீது அவதூறு பரப்பி தனக்கான பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

    மேலும், லைகா நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் கடன் பெறவில்லை என்றும் கடன் பாக்கி வைக்கவில்லை என்றும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. தொகையை லைகா நிறுவனம் செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து அவர்களுடைய சொத்துகளை முடக்க வேண்டும் என்று தான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


    விஷாலுக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே நடந்த பண பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக கணக்கு தணிக்கையாளரை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என விஷால் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து விஷால் தரப்பு கோரிக்கை குறித்து லைகா நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    விஷால் தனது பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடித்திருக்கும் வீரமே வாகை சூடும், படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும்''. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படம். வரும் 2022 ஜனவரி 26 அன்று இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

    அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் கமர்ஷியல் ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. ஐதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

    வீரமே வாகை சூடும்

    இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, அர்.என்.ஆர். மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, என்.பி.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார்.
    எனிமி படத்தை தொடர்ந்து விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்திருக்கு படத்தை குடியரசு தினத்தில் வெளியிட இருக்கிறார்.
    எனிமி படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்க, யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

    அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ஐதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. 

    விஷால்

    தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தை அடுத்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு 2022 ஜனவரி 26ம் தேதி படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    ×