என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வெளிநாட்டு பெண்கள்
நீங்கள் தேடியது "வெளிநாட்டு பெண்கள்"
திருவண்ணாமலை தீப மலையில் தடையை மீறி ஏறிய பெண்கள் உள்பட 12 வெளிநாட்டினரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். #ThiruvannamalaiMountain #ForeignersArrested
திருவண்ணாமலை:
ஆனாலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் அடிக்கடி தீப மலையில் ஏறி சிக்கி கொள்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜதராபாத்தை சேர்ந்த ஒரு வாலிபர் மற்றும் ரஷியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தடையை மீறி மலையில் ஏறி மாயமாகினர்.
3 நாட்கள் தேடுதலுக்கு பிறகு அவர்களை வனத்துறை குழுவினர் மீட்டனர். இந்த நிலையில், இன்று காலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணா ஆசிரமம் பின்புறம் இருக்கும் கந்தாசிரமம் வழியாக வெளிநாட்டை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 12 பேர் தடையை மீறி தீப மலையில் ஏறினர்.
இதுப்பற்றி, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. வனத்துறையினர் விரைந்து சென்று மலையில் ஏறிய 12 வெளிநாட்டினரை கைது செய்தனர். அவர்கள், ஐரோப்பியா லிக்டோனியா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இவர்கள், தீப மலையை சுற்றி பார்க்க ஏறியுள்ளனர். இதையடுத்து, அபராதம் விதித்த பிறகு 12 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ThiruvannamalaiMountain #ForeignersArrested
திருவண்ணாமலை மகா தீப மலையில் ஏறுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவில் குறிப்பிட்ட பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தடையை மீறி தீப மலையில் ஏறினால் கைது நடவடிக்கை பாயும் என வனத்துறையினர் எச்சரித்திருந்தனர்.
ஆனாலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் அடிக்கடி தீப மலையில் ஏறி சிக்கி கொள்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜதராபாத்தை சேர்ந்த ஒரு வாலிபர் மற்றும் ரஷியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தடையை மீறி மலையில் ஏறி மாயமாகினர்.
3 நாட்கள் தேடுதலுக்கு பிறகு அவர்களை வனத்துறை குழுவினர் மீட்டனர். இந்த நிலையில், இன்று காலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணா ஆசிரமம் பின்புறம் இருக்கும் கந்தாசிரமம் வழியாக வெளிநாட்டை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 12 பேர் தடையை மீறி தீப மலையில் ஏறினர்.
இதுப்பற்றி, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. வனத்துறையினர் விரைந்து சென்று மலையில் ஏறிய 12 வெளிநாட்டினரை கைது செய்தனர். அவர்கள், ஐரோப்பியா லிக்டோனியா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இவர்கள், தீப மலையை சுற்றி பார்க்க ஏறியுள்ளனர். இதையடுத்து, அபராதம் விதித்த பிறகு 12 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ThiruvannamalaiMountain #ForeignersArrested
×

X