search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகாசி விசாக விழா"

    • பழனியில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    பழனி :

    பழனி பெரியநாயகி_யம்மன் கோவிலில் வசந்தோற்சவம் எனப்படும் வைகாசி விசாக பெரு_விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி தங்கமயில், வெள்ளியானை, வெள்ளி காமதேனு, சப்பரம் தங்கக்குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா எழுந்தருளினார்.

    கடந்த 11 ஆம்தேதி இரவு திருக்கல்யாண வைபவமும், 12 ஆம் தேதி மாலை தேரோட்டமும் நடைபெற்றது. விழா நாட்களில் கோவில் வளா_கத்தில் கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இளநீர், மயில், பன்னீர் ஆகிய காவடிகள் எடுத்து மலைக்கு வந்து மூலவர் தண்டாயுதபாணி சாமியை வழிபட்டனர்.

    நேற்று கொடியேற்றுப்பட்டு விழா நிறைவு பெற்றது. முன்னதாக காலையில் ஊடல் வைபவம் நடைபெற்றது. முத்துக்குமாரசாமி வள்ளியம் மகனுடன் திருமணம் செய்ததை அறிந்த தெய்வானை அம்பாள் கோபம் கொண்டு கோயிலுக்கு வந்து நடையை சாத்திக் கொண்டார்.

    பின்பு வள்ளியம்மை_யுடன் வெளியே இருந்து முத்துகுமாரசாமி, நாரதர் வீரபாகுவை சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அனுப்பி சமாதானப்படுத்தினார். அதற்கான துதிபாடல்களை நாகராஜன் பாடினார்.

    சாமாதானமடைந்த தெய்வானையம்மன் கோவிலை திறந்து சாமிக்கு வழிவிட சுவாமி கோவில் வளாகத்திற்குள் நுழைந்து வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி உலா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, பேஷ்கார் நாகராஜன், மணியம்சேகர் பரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடியில் பாலமுருகன் கோவில் உள்ளது.
    • வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது

    பெரும்பாறை :

    கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடி பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. முருகனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், அரிசிமாவு, பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, பன்னீர் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் முருகப்பெருமான் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்ன–தானம் வழங்கப்பட்டது.

    ×