என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்ரீரங்கம் கோவில்"
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. 7-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது.
- விழாவின் நிறைவு நாளான 8-ந்தேதி நம் பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தக்காலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதன் பின்னர் மதியம் 12.30 மணியளவில் கடக லக்னத்தில் முகூர்த்தக்காலை தேரில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் நட்டனர்.
அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின.
தெடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொடிமர மண்டபம் வருகிறார். காலை 5.30 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கொடிமர மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பேரி தாடனம் நடைபெறுகிறது.
மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார்.
அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாக சாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளை மறுநாள் (29-ந்தேதி) அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.
தொடர்ந்து மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும், 30-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் 1-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும். மாலை கருடவாகனத்திலும், 2-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 3-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.
4-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 5-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்ககுதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. 7-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 8-ந்தேதி நம் பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
- ஆசிர் பெற்ற பிரதமர் யானை பாகனிடம் யானை குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.
- வாஞ்சையுடன் யானையை தடவி கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
திருச்சி:
ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடி, கோவில் யானை ஆண்டாளிடம் ஆசிர் பெற்றார். யானை நிறுத்தப்பட்டிருந்த 4 கால் மண்டபத்திற்கு வந்த பிரதமர் மோடி, ஆண்டாள் யானைக்கு பழங்கள் வழங்கினார். பின்னர் யானையிடம் ஆசிர் பெற்ற அவர், யானை பாகனிடம் யானை குறித்து விவரங்களை கேட்டறிந்தார். அப்போது யானைக்கு 44 வயதாவது குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பாகன் எடுத்து கூறினார். மேலும் ஆண்டாள் யானை ஸ்ரீரங்கம் நவராத்திரி உற்சவத்தின் போது மவுத் ஆர்கன் வாசிக்கும் என்ற தகவலை கூறினார்.
இதனை கேட்டு ஆச்சர்யமடைந்த பிரதமர் நரேந்திர மோடி வாசிக்க வைக்குமாறு கேட்டார். உடனே பாகன் யானை துதிக்கையில் மவுத் ஆர்கன் கொடுக்க, ஆண்டாள் வாசித்து காண்பித்தது. இதனை ரசித்த மோடி வாஞ்சையுடன் யானையை தடவி கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த ஆண்டாள் யானையானது, குட்டியாக காரமடை கோவிலில் இருக்கும் போது ரஜினிகாந்த நடித்த தம்பிக்கு எந்த ஊர் என்ற படத்தில் ரஜினிக்கு ஆசீர்வாதம் செய்யும் காட்சியில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஸ்ரீரங்கத்தில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சி:
3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் 'கேலோ இந்தியா' போட்டியை தொடங்கி வைத்தார்.
நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் மோடி இன்று திருச்சி செல்வதற்காக சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். இதையடுத்து அவர் ஹெலிகாப்டரில் பயணித்து பஞ்சகரை சாலையை அடைந்தார்.
இந்நிலையில், ஸ்ரீரங்கத்தில் காலை 10.50 மணிக்கு சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடி அங்கு ரோடு ஷோ நடத்தினார்.
காரில் நின்றபடி பயணம் செய்த அவர் அங்கிருந்தவர்களை நோக்கி கையசத்தார். பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- வெளி மாநிலத்தில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களும் மனிதர்கள் தானே.
- பிரச்சனையை விவகாரமாக்காமல் சுமூகமாக தீர்த்து வைப்பதே அரசியல் தலைவர்களுக்கு அழகு.
சென்னை:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நேற்று சாமி தரிசனத்துக்கு சென்ற ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது.
இதில் 3 ஐயப்ப பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. கோவில் காவலாளிகளும் தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அரசையும் விமர்சித்தார். இதுபற்றி அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-
எதிர்பாராமல் நடந்த சம்பவம். யாரையும் யாரும் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை.
வெளி மாநிலத்தில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களும் மனிதர்கள் தானே. இந்த விவகாரத்தை தீர விசாரிக்கவும் அதேநேரம் சுமூகமாக கையாளும்படியும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். இந்த பிரச்சனை நேற்றே சுமூகமாகி விட்டது.
இந்த பிரச்சனையை விவகாரமாக்காமல் சுமூகமாக தீர்த்து வைப்பதே அரசியல் தலைவர்களுக்கு அழகு. ஆனால் அண்ணாமலை வழக்கம் போலவே இந்த பிரச்சனையையும் ஊதி பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார். அவர் எந்த முக மூடியோடு வந்தாலும் மக்கள் ஏற்கப்போவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பக்தர்களை அங்கிருந்து கோவில் தற்காலிக காவலாளிகள் மற்றும் போலீசார் ஒழுங்குபடுத்தினர்.
- ஸ்ரீரங்கம் போலீசார் முன் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 55 பேரை கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு நேற்று காலை ஆந்திர மாநிலத்தில் இருந்து 34 ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் கோவில் மூலஸ்தானம் எதிரே உள்ள காயத்ரி மண்டபம் அருகே வரிசையில் நின்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை ஆந்திரா ஐயப்ப பக்தர்கள் வேகமாக தட்டி ஒலி எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து பக்தர்களை அங்கிருந்து கோவில் தற்காலிக காவலாளிகள் மற்றும் போலீசார் ஒழுங்குபடுத்தினர். இதில் ஐயப்ப பக்தர்களுக்கும் கோவில் தற்காலிக பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சென்னா ராவ் (வயது 45) என்பவரின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. இதனால் அவருடன் வந்த ஐயப்ப பக்தர்கள் கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கோவிலுக்குள் ரத்தம் சிந்தியதால் சிறிது நேரம் நடை சாத்தப்பட்டு பின்னர் பரிகார பூஜைகள் செய்த பின்னர் 3 மணி நேரம் கழித்து தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனர் நிவேதா லட்சுமி, இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட ஐயப்ப பக்தர்களை சமாதானம் செய்தனர்.
பின்னர் ஐயப்ப பக்தர் சாந்தாராவ் சந்தா புகாரின் அடிப்படையில் கோவில் தற்காலிக பணியாளர்கள் பரத் (30), விக்னேஷ் (32), செல்வா (31) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் ஆந்திர ஐயப்ப பக்தர்கள் மீதான தாக்குதல் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திருச்சி மாவட்ட இந்து முன்னணி தலைவர் போஜராஜன் தலைமையில் கோவில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பின்னர் ஸ்ரீரங்கம் போலீசார் முன் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 55 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் கோவில் தற்காலிக பணியாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஐயப்ப பக்தர்கள் சென்னா ராவ், சாந்தாராவ் மற்றும் சிலர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் கைகளால் தாக்குவது, தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே பிரிவுகளில் தான் கைதான 3 பணியாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அதன் மாநில பொதுச்செயலாளர் சுந்தரவடிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த வெளி மாநில பக்தர்கள் கோவில் ஊழியர்களாலும், காவலர்களாலும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டது கண்டிக்க்கத்தக்கது. பக்தர்களை அடிமைகளாகவும், அலட்சியமாகவும் நடத்தும் அறநிலையத்துறையின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது.
பக்தர் ஒருவர் ரத்தம் சொட்டும் அளவுக்கு தக்கப்பட்டு, அதற்காக பரிகார பூஜை செய்யும் அளவுக்கு வன்முறை நடந்துள்ளது. இதற்கு காரணமான கோவில் பணியாளர்கள் அனைவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஆந்திரா ஐயப்ப பக்தர்கள் கூச்சலிட்டனர்.
- பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டது.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருந்து, 30-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
பின்னர் அவர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஆந்திர ஐயப்ப பக்தர்கள் சிலரும் தரிசனம் செய்ய வந்தனர்.
ஆந்திர பக்தர்கள் வரிசையில் நிற்காமல் இடையே அத்துமீறி நுழைந்ததாக தெரிகிறது. சிலர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தனர். இதனால் மற்ற பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் மற்ற பக்தர்கள் கோவில் காவலாளிகளிடம் புகார் கூறினர். பின்னர் கருவறைக்கு முன்புறமுள்ள காயத்ரி மண்டபத்தில் ஆந்திர பக்தர்கள் நின்று கொண்டிருந்த போது நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது.
காவலாளிகள் அதை சரிசெய்ய முயன்றனர். அப்போது வரிசையில் நின்ற ஆந்திர பக்தர் சென்னா ராவ் என்பவருக்கும், கோவில் காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது.
இதில் ஐயப்ப பக்தர் சென்னாராவின் மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் ரத்தத்தை துடைத்து கொண்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்த ஆந்திரா ஐயப்ப பக்தர்கள் கூச்சலிட்டனர்.
உடனே தகவல் அறிந்த மாநகர காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஆய்வாளர் அரங்க நாதன் உள்ளிட்டோர் கோவிலுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர பக்தர்களை அமைதிப்படுத்தி அழைத்து சென்றனர்.
இது குறித்து கோவில் காவலாளி பரத் உள்பட 3 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதே போல கோவில் காவலாளிகள் தரப்பிலும், ஐயப்ப பக்தர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள்ளே பக்தர் ரத்தம் சிந்தியதால் சிறிது நேரம் கோவில் நடை சாத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டது.
இதனிடையே கோவிலில் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு இந்து கோவில்களில் இருக்கவேண்டியதில்லை. ஸ்ரீரங்கம் கோவில் புனிதத்தை கெடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார்.
இந்த மோதல் தொடர்பாக ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ஆந்திராவை சேர்ந்த 34 பக்தர்கள் காயத்ரி மண்டப உண்டியலை அதிக சத்தம் எழுப்பும் வகையில் எழுப்பினர். தட்டிக்கேட்ட காவலாளிகளையும், காவலரையும் போலீஸ் டவுன் டவுன் என்று கோஷம் எழுப்பினர். இதனால் காவல் நிலையத்தில் புகார் செய்தோம் என்று கூறப்பட்டு உள்ளது.
- வரிசையில் நின்ற ஆந்திர பக்தர் சென்னா ராவ் என்பவருக்கும், கோவில் காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- கோவில் காவலாளி பரத் உள்பட 3 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருந்து, 30-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
பின்னர் அவர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஆந்திர ஐயப்ப பக்தர்கள் சிலரும் தரிசனம் செய்ய வந்தனர்.
ஆந்திர பக்தர்கள் வரிசையில் நிற்காமல் இடையே அத்துமீறி நுழைந்ததாக தெரிகிறது. சிலர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தனர். இதனால் மற்ற பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் மற்ற பக்தர்கள் கோவில் காவலாளிகளிடம் புகார் கூறினர். பின்னர் கருவறைக்கு முன்புறமுள்ள காயத்ரி மண்டபத்தில் ஆந்திர பக்தர்கள் நின்று கொண்டிருந்த போது நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது.
காவலாளிகள் அதை சரிசெய்ய முயன்றனர். அப்போது வரிசையில் நின்ற ஆந்திர பக்தர் சென்னா ராவ் என்பவருக்கும், கோவில் காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது.
இதில் ஐயப்ப பக்தர் சென்னாராவின் மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் ரத்தத்தை துடைத்து கொண்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்த ஆந்திரா ஐயப்ப பக்தர்கள் கூச்சலிட்டனர்.
உடனே தகவல் அறிந்த மாநகர காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஆய்வாளர் அரங்க நாதன் உள்ளிட்டோர் கோவிலுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர பக்தர்களை அமைதிப்படுத்தி அழைத்து சென்றனர்.
இது குறித்து கோவில் காவலாளி பரத் உள்பட 3 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதே போல கோவில் காவலாளிகள் தரப்பிலும், ஐயப்ப பக்தர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள்ளே பக்தர் ரத்தம் சிந்தியதால் சிறிது நேரம் கோவில் நடை சாத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டது.
- 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ் வழங்கினார்.
- 6 மாத வகுப்பு முடிந்ததும் பஞ்சராத்ர ஆகமத்தின் கீழ் மன்னார்குடி ஜீயரிடம் தீட்சை பெற்றுள்ளார்கள்.
சென்னை:
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய இடங்களில் தலா ஒரு பயிற்சி பள்ளி நடத்தப்படுகிறது.
இந்த பள்ளிகளில் சேருபவர்களுக்கு ஒரு ஆண்டு ஆகமம், பூஜை உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு 94 பேர் பயிற்சியில் சேர்ந்தனர். அவர்களில் 3 பேர் பெண்கள்.
முதுகலை பட்டதாரியான ரம்யா, இளங்கலை கணிதவியல் பட்டதாரியான கிருஷ்ணவேணி, இளங்கலை பட்டதாரியான ரஞ்சிதா. இவர்கள் 3 பேரும் ஒரு வருடம் பயிற்சி முடித்து உள்ளார்கள். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ் வழங்கினார்.
கோவில்களில் பாகுபாடு இருக்கக்கூடாது. ஆண்-பெண் பேதம் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த திட்டத்தில் ஆர்வப்படும் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவதாக அறநிலையத்துறை கூறுகிறது. தற்போது பயிற்சி பெற்றுள்ள 3 பெண்களும் 6 மாத வகுப்பு முடிந்ததும் பஞ்சராத்ர ஆகமத்தின் கீழ் மன்னார்குடி ஜீயரிடம் தீட்சை பெற்றுள்ளார்கள்.
பயிற்சி முடித்துள்ள 3 பேரும் ஸ்ரீரங்கம் கோவிலில் உதவி அர்ச்சகர்களாக பயிற்சி பெறுவார்கள். அதன்பிறகு தேவைப்படும் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.
- கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஸ்ரீரங்கம் கோவிலில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை.
- ஸ்ரீரங்கம் கோவில் மேலாளர் தமிழ்ச்செல்வி மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 5-ந்தேதி நள்ளிரவு அங்குள்ள கிழக்கு கோபுரத்தின் கொடுங்கை இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து கோபுரத்தை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எச். ராஜா நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோவில் 56 நிலைகள் மாற்றம் செய்யப்பட்டது. இதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது.
இதில் முன்னாள் இணை ஆணையர் ஜெயராமனுக்கு பெரும் பங்கு உள்ளது. ஆனாலும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு முறைகேடுகள் செய்துள்ள ஜெயராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஸ்ரீரங்கம் கோவிலில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே உடனடியாக அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்து கோவில்கள் மீது அறநிலையத்துறைக்கு அக்கறை இல்லை.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோவிலில் தாமரைக் கோலம் போட அனுமதி மறுத்த ஸ்ரீரங்கம் கோவில் மேலாளர் தமிழ்ச்செல்வி மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தி.மு.க. ஐந்தாண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் போது கோவில்களில் உள்ள தங்கம், சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
- கோவிலில் இருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார்.
- நம்பெருமாள் அணிந்திருந்த மாலை, புடவை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் காவிரியில் விடப்பட்டது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி நதி பாயும் பகுதிகள் முழுவதும் பொதுமக்கள் காவிரித் தாயை வணங்கி வழிபடுவது வழக்கம். அதேபோல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாள், காவிரித் தாயாருக்கு ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார்.
அவ்வகையில் ஆடி 18-ம் நாளான இன்று நம்பெருமாள், காவிரி தாய்க்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 4 மணிவரை அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதன்பின்னர் நம்பெருமாள் அணிந்திருந்த மாலை, புடவை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து மேளதாளங்கள் முழங்க காவிரி படித்துறைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சீர்வரிசை பொருட்களை காவிரி தாய்க்கு வழங்கும் வகையில், காவிரி ஆற்றில் விடப்பட்டு, சீர்வரிசை கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி தாயையும், நம்பெருமாளையும் தரிசனம் செய்தனர்.
பின்னர் நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
- இந்தாண்டு ஆடி 18-ம் நாளான இன்று நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 18-ம் நாள் அல்லது 28-ம் நாளில் நம்பெருமாள் அம்மா மண்டபம் படித்துறையில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
பின்னர் மாலை காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார். அதன்படி இந்தாண்டு ஆடி 18-ம் நாளான இன்று நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்காக நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்திலிருந்து காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிவரை நம்பெருமாள் அங்கு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதனை தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
பட்டுசேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
பின்னர் நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று காலை மன்னார்குடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் மாலை அவர் திருச்சி ஸ்ரீரங்கம் வந்து ரெங்கநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மகன் ரேவண்ணாவும் வந்திருந்தார். அவர்களை கோவில் தலைமை பட்டரான சுந்தர் பட்டர் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து கருடாழ்வார், மூலவர், தாயார், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் தேவேகவுடா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரம் கோவிலில் இருந்த அவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தேவேகவுடா வருகையையொட்டி கோவிலில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து, நாளை மறுநாள் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் முக்கிய தலைவர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு சென்றார். இதே போல் டி.டி.வி.தினகரன் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் கோவிலில் வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்