search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "15 cm of rain"

    • கவுந்தபாடி பகுதியில் இன்று காலை வரை 15 செ.மீ மழை தொடர்ந்து கொட்டி தீர்த்தது.
    • போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    ெதாடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இதே போல் நேற்றிரவு மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலே அதிக அள வில் மழை கவுந்தபாடி பகு தியில் பெய்தது. நேற்று மதி யம் பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை 15 செ.மீ தொடர்ந்து கொட்டி தீர்த்தது.

    இதனால் பனங்காட்டூர், அய்யம்பாளையம், வண்ணார் மடை, பாப்பாங் காட்டூர், தென்காட்டு பாளையம், பொம்மட்டி, செந்தம்பாளையம், சலங்க பாளையம், கண்ணாடிபுதூர், க. புதூர் மற்றும் பி.மேட்டு ப்பாளையம் பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் ஈரோடு ரோடு, அய்யம்பா ளையம் தரை மட்ட பாலம், பனங்காட்டூர் தரைமட்ட பாலம், கவுந்தப்பாடி, பொம்மபட்டி தரைமட்ட பாலம், அய்யம்பாளையம், ஆண்டி பாளையம், வண்ணார்மடை தடை மட்ட பாலம் ஆகிய பால ங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மழை வெள்ளம் அதிகமானதால் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாண வர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்த னர்.

    கன மழையால் பாப்பா ங்காட்டூர் பகுதியில் 2 மின் கம்பங்கள் சாய்ந்து மின் துண்டிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மின் வாரியத்தினர் அதிகா லையில் மின் இணைப்பைத் துண்டித்து சரி செய்தார்கள்.

    மேலும் கண்ணாடிப்பு தூர், கவுந்தப்பாடி, சலங்க பாளையம் பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெ ருக்கு எற்பட்டது. மேலும் ஓடத்துறை ஏரி, பி.மேட்டு ப்பாளையம் அனந்த சாக ரம் ஏரியும் நிறைந்து ஓடி யது.

    இதில் ஓடத்துறை, கவு ந்தப்பாடி ஊராட்சி, பி.மேட்டுப்பாளையம் பேரூரா ட்சி பகுதி துப்புரவு பணி யாளர்கள் வெள்ளப்பகு தியில் தடுப்பு ஏற்படுத்திய குப்பை மற்றும் செடிகளை அகற்றி வருகிறார்கள்.

    இதேபோல் கவுந்தபாடி அடுத்த பொம்மன்பட்டி நடுநிலைப்பள்ளி வளா கத்தில் மழை நீர் புகுந்தது. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிபட்டனர்.

    ஈரோடு மாவட்ட அணை பகுதிக ளான வரட்டுபள்ளம், குண்டேரிபள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கவுந்தபாடி-152, எலந்த குட்டைமேடு-101, கோபி-80, கொடிவேரி-62, பவானி சாகர்-40, சத்தி-34, நம்பி யூர்-28, கொடிமுடி -20, வரட்டுப்ப ள்ளம் அணை-7, ஈரோடு-7, குண்டேரிப ள்ளம்-6, மொடக்குறிச்சி-6.

    ×