search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "15-feet long"

    • மக்களை நோக்கி தனது தலையை மெதுவாக திருப்பி ஒரு முறை பார்த்தது
    • பறவையை இரையாக தேடியோ, வெப்பம் தாங்காமல் ஓளியவோ அவை மரங்களின் மேல் ஊர்ந்து செல்லும்

    ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் 7 ஆயிரம் கிலோமீட்டர் கடற்பகுதியை உள்ளடக்கிய மாநிலம் குயின்ஸ்லேண்ட்.

    இப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிற்கு அருகே, வீடுகளின் மேலே உள்ள கூரைகளின் வழியாக ஒரு ராட்சத மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது.

    தகவல் தெரிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மலைப்பாம்பு கூரைகளின் வழியாகவே சென்று உயர்ந்த மரங்களுக்கிடையே காட்டுக்குள் புகுந்து செல்வதை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.

    அந்த மலைப்பாம்பு மக்களை நோக்கி தனது தலையை மெதுவாக திரும்பி தனது வால் பகுதியை உயரே தூக்கியவாறே மக்களை சில வினாடிகள் உற்று பார்த்தது.

    அப்போது சில குழந்தைகள் பயத்தில் அலறின. பிறகு அங்கிருந்து உயரமான மரங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் கீழே விழுந்து விடாமல் மெதுவாக நகர்ந்தவாறே காணாமல் போனது.

    சமநிலையில்லாத மேற்கூரைகளிலும், மரங்களுக்கு இடையிலும் தனது அதிக உடல் எடையையும் மீறி சமநிலையுடன் அது செல்வதை மக்கள் ஆச்சர்யத்துடன் விவரித்தனர்.

    கார்பெட் பைதான் எனும் இவ்வகை மலைப்பாம்பு 15 கிலோ வரை எடை பெற்று, சுமார் 15 அடி (5 மீட்டர்) வரை நீளமாக வளர கூடியவை.

    "பொதுவாக தரையில்தான் இவை காணப்படும் என்றாலும் ஆஸ்திரேலியாவில் அவ்வப்போது இவை மரம் விட்டு மரம் ஊர்வதும் சகஜமான விஷயம்தான். மரங்களில் அவை தென்படுகிறது என்றால் அவை பறவையை இரையாக தேடவோ அல்லது வெப்பம் தாங்காமல் நிழல் தேடி மறைகிறு என்றே பொருள்."

    "இல்லையென்றால், அவை ஏதேனும் ஆபத்தில் இருந்து தங்களை காத்து கொள்ளவும் ஓடி ஒளியலாம். அவற்றின் உடலில் தசைகள் சரியான முறையில் பங்கீடு செய்யப்பட்டுள்ளதால் ஒரு வலுவான புள்ளியை அடைந்து தங்கள் தசைகளையும், பலத்தையும் கொண்டு நிலைநிறுத்தி கொள்ளும். பிறகு அடுத்த இடத்திற்கு செல்லும்," என பாம்புகளை பிடிப்பதில் நிபுணரான சன்ஷைன் கடற்கரை பகுதியை சேர்ந்த டான்.

    இந்த முழு சம்பவத்தையும் ஒருவர் தனது கேமிராவில் வீடியோவாக படம் பிடித்து அதனை இணையத்தில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.




    ×