search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "15 injured"

    • மேலூர் நான்கு வழிச்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 15 பேர் காயமடைந்தனர்.
    • இந்த விபத்து குறித்து மேலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்

    நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை நாகர்கோவிலை சேர்ந்த கணேசன் (வயது 48) என்பவர் ஓட்டி ெசனறார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    அந்த பஸ் இன்று அதிகாலை 4 மணி அளவில் மேலூர் நான்கு வழிச்சாலையில் மலம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்ப்பாராதவிதமாக திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் பஸ்சின் டிரைவர், பஸ் பயணிகளான நெல்லையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(52), மணிமாறன் (36), விஜயா (59) உட்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து மேலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயம் பாண்டியன், ஜெய கஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூடுபனி காரணமாக நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். #BiharFogConditions #VehiclePileup
    முசாபர்பூர்:

    வடமாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர். நெடுஞ்சாலையில் கண்ணை மறைக்கும் அளவுக்கு மூடுபனி இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதி விபத்துக்குள்ளாகின்றன.

    இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பெட்ரோல் டேங்கர் லாரி உள்ளிட்ட 9 வாகனங்கள் பனி மூட்டம் காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் காயமடைந்தனர்.

    இதேபோல் டெல்லி புறநகர்ப் பகுதியில் உள்ள கஞ்சவாலா-பாவனா சாலையில் நேற்று காலை ஒரு கார் திடீரென தீப்பற்றியது. இதனால் அந்த காரை நடுரோட்டில் அப்படியே நிறுத்திவிட்டு, அதில் பயணித்தவர்கள் வெளியேறினர். அப்போது பனிமூட்டம் காரணமாக பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஒரு கார் மற்றும் ஒரு பேருந்து தீப்பற்றியது. சுமார் 25 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால், பலர் காயமடைந்தனர். #BiharFogConditions #VehiclePileup
    கனடாவின் டோரண்டோ மாகாணத்தில் உள்ள இந்திய ஓட்டலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #CanadaBlast
    டோரண்டோ:

    கனடாவின் டோடண்டோ மாகணத்தின் உள்ள மிசிஸாயுகா பகுதியில் பாம்பே பேல் என்ற இந்திய ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு திடீரென குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


    இந்நிலையில், இச்சம்வம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு மர்ம நபர்கள் ஓட்டலுக்குள் வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #CanadaBlast

    ×