என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "25 kg"
- பவானிசாகர் பூங்கா பகுதிகளில் செயல்படும் மீன் கடைகள், தள்ளு வண்டி கடைகளில் சோதனை செய்தபோது கெட்டுப்போன மீன் பறிமுதல் செய்யப்பட்டன.
- பின்னர் மீண்டும் இதே கடைகளில் நாங்கள் ஆய்வு செய்வோம். அப்போதும் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பூங்கா சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு சாதாரண நாட்களை விட வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும்.
பவானிசாகர் அணை பூங்காவையொட்டி 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்குள்ள பொறித்த மீன்களை சாப்பிடுவதற்கு என்றே தனி கூட்டம் உள்ளது.
இந்நிலையில் பவானிசாகர் மீன் விற்பனை நிலையம் மற்றும் பூங்கா எதிரில் செயல்படும் மீன் ரோஸ்ட் கடைகள் மற்றும் உணவகங்களில் கெட்டுப்போன மீன் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
சத்தியமங்கலம் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மணி தலைமையிலான அலுவலர்கள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் 15 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சி, செயற்கை நிறம் ஏற்றப்பட்டு பொரித்து வைக்கப்பட்ட 5 கிலோ மீன் ரோஸ்ட் வகை, செயற்கை நிறம் சேர்க்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த 5 கிலோ மீன்கள் என மொத்தம் 25 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தையும் அழித்தனர்.
பின்னர் செயற்கை நிறம் சேர்க்காமல் மீன் இருக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் எண்ணையை மீண்டும் பயன்படுத்த கூடாது. மீன்கள் தரமானதாகவும் செயற்கை நிறம் சேர்க்கப்படாமல் மசாலா பொடிகள் மட்டுமே கலக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பவானிசாகர் பூங்கா பகுதிகளில் செயல்படும் மீன் கடைகள், தள்ளு வண்டி கடைகளில் சோதனை செய்தபோது கெட்டுப்போன மீன் பறிமுதல் செய்யப்பட்டன.
செயற்கை நிறம் ஏற்றப்பட்டு பொறித்து வைக்கப்பட்ட மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன.இந்த கடைக்காரர்களுக்கு 14 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மீண்டும் இதே கடைகளில் நாங்கள் ஆய்வு செய்வோம். அப்போதும் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்