search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 thousand"

    • கடந்த சில மாதங்களாகவே செங்கல் சூளைகளுக்கு செங்கல் அறுக்க தேவைப்படும் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    • சத்தியமங்கலம் சுற்று–வட்டாரத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை–வாய்ப்பு இழந்து தவித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான கொண்டப்ப நாயக்கன்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், அத்தியப்பகவுண்டன்புதூர், சின்னட்டிப்பாளையம், டி.ஜி.புதூர், அரசூர், இண்டியன் பாளையம், காளிகுளம், குப்பந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்க தயாரிக்கப்படும் செங்கற்கள் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், புஞ்சை புளியம்பட்டி, ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த தொழிலை நம்பி இந்த பகுதி சுற்றுவட்டாரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே செங்கல் சூளைகளுக்கு செங்கல் அறுக்க தேவைப்படும் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் பெரும்பாலான செங்கல் சூளைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மண் தீர்ந்த நிலையில் தற்போது புதியதாக செங்கல் தயார் செய்ய தேவைப்படும் மண் எடுக்க கனிமவளத்துறை அனுமதி வழங்காததால் தற்போது சத்தியமங்கலம் சுற்று–வட்டாரத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை–வாய்ப்பு இழந்து தவித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு–றியாகி உள்ளது.

    இதுகுறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறியதாவது:-

    இப்பகுதியில் செங்கல் தயாரிக்கும் தொழிலை நம்பி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள நிலையில் செங்கல் தயாரிப்பதற்காக மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்த போதிலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சென்று மண் எடுக்க அனுமதி வழங்குமாறு கேட்டால் இன்னும் எங்களுக்கு சுற்றறிக்கை வரவில்லை என தெரிவிக்கின்றனர்.

    இதனால் தற்போது செங்கல் சூளைகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் வாழ்வா–தாரம் கேள்விக்குறியா–கியுள்ள நிலையில் அவர்களின் குழந்தைகளின் கல்விகளும் பாதிக்கப்பட்டு–ள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம், அரசு இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் செங்கல் தயாரிப்பதற்காக தேவைப்படும் மண் எடுக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×