search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "500"

    • நாணயத்தை முறைப்படி வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளது.
    • தபால் நிலையங்களில் விற்பனைக்கு வரும்

    சென்னை:

    மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரான 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி' என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது.

    இதற்காக ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதி அமைச்சகத்திடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வருடம் கோரிக்கை வைத்தார்.

    இந்த நாணயத்தை தயாரித்து வெளியிட மத்திய அரசு அனுமதி அளித்து கடந்த 12-ந் தேதி அதை மத்திய அரசிதழிலும் வெளியிட்டது.

    ரூ.100 மதிப்புள்ள நினைவு நாணயம், அதன் அமைப்பு, உள்ளடக்கம் விலை ஆகியவை குறித்து இப்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நாணயத்தின் ஒரு பக்கம் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோகதூண், சத்யமேவ ஜெயதே, பாரத் ஆகிய வார்த்தைகள் தேவநாகரி எழுத்திலும் இந்தியா என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

    மறுபக்கம் நாணயத்தின் மையத்தில் கலைஞர் எம்.கருணாநிதி உருவப்படமும், கீழே அவர் பயன்படுத்திய தமிழ் வெல்லும் என்ற வாசகமும் இடம் பெறுகிறது.

    கலைஞர் எம்.கருணாநிதி பிறந்த நூற்றாண்டு (1924-2024) என தேவநாகரி எழுத்திலும், ஆங்கிலத்திலும் இடம் பெறும்.

    சுமார் 35 கிராம் எடை கொண்ட இந்த ரூ.100 நாணயத்தில் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் தாமிரமும், நிக்கல் மற்றும் துத்தநாகம் முறையே தலா 5 சதவீதமும் கலந்திருக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதனால் இதன் விலை ரூ.2,500 என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாணயம் அச்சிடப்பட்டு வந்தவுடன் ரிசர்வ் வங்கி விற்பனையகங்கள் மற்றும் தபால் நிலையங்களில் விற்பனைக்கு வரும் என்று மத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    அதற்கு முன்னதாக இந்த நாணயத்தை முறைப்படி வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரி ஒரு விழா நடத்தும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • 5 மாதங்களில் ரூ.35,500 குறைந்தது.
    • பஞ்சு இறக்குமதி செய்யத் தொடங்கினர்.

    கோவை,

    பஞ்சை முக்கிய மூலப்பொருளாக கொண்டு செயல்படும் ஜவுளித் தொழிலில் நாடு முழுவதும் 1.10 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். முக்கியத்துவம் பெற்றுள்ள ஜவுளித்தொழில் பஞ்சு விலை உயர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது.

    வரலாற்றில் முதல் முறையாக கடந்த மே மாதத்தில் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு ரூ.1 லட்சத்தை கடந்தது. பஞ்சு விலை உயர்வால் நாடு முழுவதும் ஜவுளி சங்கிலித்தொடரிலுள்ள அனைத்து தொழில்களையும் கடுமையாக பாதித்தது.

    தொழில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத வரியை அக்டோபர் 31-ந் தேதி வரை ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதனால் பெரிய நூற்பாலைகள் வெளிநாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்யத் தொடங்கினர்.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து வந்த பஞ்சு விலை தற்போது ஒரு கேண்டி ரூ.64,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 மாதங்களில் ரூ.35 ஆயிரம் வரை குறைந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்த நூற்பாலைகள் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள் ளனர்.

    இதுகுறித்து தென்னிந்திய மில்கள் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பினர் கூறியதாவது:-

    பஞ்சு விலை தற்போது ஒரு கேண்டி ரூ.64,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த மே மாதத்தில் இந்தியாவில் ஒரு கேண்டி பஞ்சு ரூ.1 லட்சத்தை கடந்த காரணத்தால், பெரிய நூற்பாலை நிர்வாகத்தினர் வெளிநாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்யத் தொடங்கினர்.

    ஆனால் பஞ்சு விலை எதிர்பார்த்ததை விட அதிகமாக குறைந்து வருகிறது. அக்டோபர் 16-ந் தேதி ஒரு கேண்டி ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 23-ந் தேதி ஒரு கேண்டி ரூ.68 ஆயிரமாக குறைந்தது. இந்த மாதம் ரூ.64,500-ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் கடந்த 5 மாதங்களில் மட்டும் பஞ்சு விலை ஒரு கேண்டிக்கு ரூ.35,500 குறைந்துள்ளது.

    இதனால் வெளிநாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்த மற்றும் பஞ்சு வருகைக்காக புக்கிங் செய்து காத்திருக்கும் நூற்பாலை நிர்வாகத்தினர் கடும் நஷ்டத்தை எதிர்கொ ண்டுள்ளனர்.கப்பல்களில் பஞ்சு ஏற்றிக் கொண்டு வர கொள்கலன்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட கப்பல் போக்கு வரத்தில் உள்ள பிரச்சினைகள் காரணமாக வெளிநாட்டு பஞ்சு இந்தியா வந்து சேருவதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்பட்டு ள்ளளது. பஞ்சு விலை தாறுமாக அதிகரிப்பதும், மீண்டும் வேகமாக குறைந்து வருவதும் பல கஷ்டங்களை ஏற்படுத்தி உள்ளது.

    ×